Main Menu

சராசரி மக்களை சுரண்டித் தின்று, கார்பரேட்டுகளுக்கு மட்டுமே ஊழியம்

சராசரி மக்களை சுரண்டித் தின்று,

கார்பரேட்டுகளுக்கு மட்டுமே ஊழியம்

சினிமாத்துறையைச் சேர்ந்த நண்பர் அவர். கூடவே வணிகமும் செய்கிறார். 2006ல் இருந்து வங்கிகளில் வாங்கிய கடன்களை சரியாக கட்டி வந்துள்ளார்.

அந்த நன்மதிப்பில் வங்கிகள் மேலும் மேலும் கடன் வழங்கியுள்ளன. மிகச்சிறப்பான வாடிக்கையாளர் என்று போற்றியும் உள்ளன.

ஜெயலலிதா

ஆனால் டிசம்பரில் டீமானடைசேஷன் எனும் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் ஊழல் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட பின் நண்பரின் வணிகத்திலும், சினிமா வருமானத்திலும் அடிவிழ ஆரம்பித்திருக்கிறது.

வாடிக்கையாளர்கள் எல்லாம், “நிதிநிலை கொஞ்சம் சரி இல்லண்ணே. கொஞ்ச நாள் ஆகட்டும்,” என தரவேண்டிய காசுக்கு காரணம் சொல்வதால் மாதத்தவணைகளை சரியான தேதியில் கட்ட முடியாமல் தவித்திருக்கிறார்.

ஆனால் வங்கிகள் ஃபைன் மேல் ஃபைன் போட்டுக்கொண்டே இருக்கின்றனவாம். தொலைபேசியிலும் தொடர் தொல்லை கொடுத்துள்ளார்கள். “என்ன செய்வது அசோக், எவ்வளவு சொன்னாலும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் பெரிய கஷ்டமாக இருக்கிறது,” என வருந்தினார்.

டிமானடைசேஷனால் தற்காலிக சிக்கல்கள் நிறைய ஏற்பட்டாலும் தொலைநோக்கில் நன்மை பயக்கும் என மோடியும், அவர் அமைச்சர்களும், அவர் என்ன செய்தாலும் ஜால்ரா அடிக்கும் அள்ளக்கைகளும் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். இது அதிகாரபூர்வமாகவே ஊடகங்களிலும் பதிவாகியிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு நியாயம், தனி மனிதனின் பொருளாதாரத்திற்கு ஒரு நியாயமா? தற்காலிக நெருக்கடி ஏற்படும் என பிரதமரே சொல்லும்போது, வங்கிகளின் தவணைத்தேதிகளும், அபராத விதிகளும் மட்டும் முன்புபோன்ற அதே நெகிழா தன்மையுடன் மாறாதிருத்தல் எவ்வளவு பெரிய அநியாயம்!

அதனால் வங்கி மேலாளரிடம், “உங்களை எல்லாம் உங்கள் இஷ்டம்போல கட்டணங்களை போட அனுமதிக்கும் பிரதமர் மோடி சொல்லியுள்ளபடி தற்காலிக பொருளாதார நிதி நெருக்கடியில் இருக்கிறேன். ஆனால் அவர் சொல்லியதைப் போல கொஞ்சகாலம் சென்று என் நிதிநிலை சரியாகி செழிக்க ஆரம்பித்துவிடும். அப்போது வட்டி, கட்டணம், வரி, அபராதம் என பல டிசைன்களில் நீங்கள் கேட்பதுபோல காசு கட்டுகிறேன். இப்போது நான் தரும்போது தரும் தொகையை வாங்கிக்கொள்ளுங்கள்,” என நான் சொன்னதை அப்படியே கோபமாகச் சொல்லியிருக்கிறார். மேலாளர் சில நொடிகள் பேசவே இல்லையாம். இப்போது அபராதம் விதிக்கும் விஷயத்தில் இறங்கி வந்துள்ளதாக நண்பர் என்னிடம் மகிழ்ச்சி தெரிவித்தார்.

சராசரி மக்களை சுரண்டித் தின்று, கார்பரேட்டுகளுக்கும், முதலாளிகளுக்கும் மட்டுமே ஊழியம் செய்துகொண்டிருக்கும் இந்த அரசுக்கும், இந்த சிஸ்டத்திற்கும், நாம் ஒட்டுமொத்தமாக இணைந்து அவர்கள் பாணியில் சில பதில்களைச் சொன்னால் மட்டுமே புரியும். ஓட்டுப்போடும் நாம் மட்டும் எத்தனை நாள்தான் சார் கேனையனாகவே இருப்பது?

-டான் அசோக்






Related News

%d bloggers like this:
Skip to toolbar