சினிமா இசையும் ஒலியும் பகுதி 2
Uncategorized

சினிமா இசையும் ஒலியும் பகுதி 2

சினிமா இசையும் ஒலியும்

சினிமா இசையும் ஒலியும் பகுதி 2

சினிமா ஒலியைக் கொண்டு வெளியை உருவாக்குவது அதாவது ஒலியைக்கொண்டு காட்சிக்குள் இல்லாத கண்ணுக்குத்தெரியாத ஒரு சூழலலை உருவாக்குவது இது நம்ம commercial cinema வுல பயன்படுத்தினது ரொம்பவே குறைவு

நாம பெரும்பாலும் சினிமா ன்னா கண்ணுக்குத்தெரியனுங்கிறது தான் அடிப்படையா வெச்சிருக்கோம்

சூழலை சத்ததுல உருவாக்குவதெல்லாம் இல்லை பெரும்பாலும் பேய் படங்கள்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக்கு பேய் பயம் கிடையாது தனிமையும் ராத்திரியும் தான் என்னோட வாழ்கையே

ஆனா பேய் படம்னா ரொம்பவே பயம் பார்த்ததே குறைவு. அதனால அதுல reference எடுக்க முடியாது

சினிமா இசையும் ஒலியும்  இரண்டு நேரெதிரான உதாரணங்களை தரேன்

ரோஜா

ரோஜா படத்துல அர்விந்த் சாமி பொண்ணு பாக்க போன இடத்துல பல குழப்பங்ககளை ஏற்படுத்திடுவார். அதையெல்லாம் சுமூகமாக்க மதுபாலாவுக்கும் மற்றும் மதுபாலாவுடைய அக்காவுக்கும் திருமணம் ஒரே மேடையில நடக்கட்டும்னு முடிவு பண்ணிடுவாங்க.

இந்த காட்சி சாதரணமா பண்ணா ஒரு கல்யாணமண்டபத்தை location பார்த்து வெளிய நாலு சின்ன பொண்ணுங்க நிக்கும். சந்தனம் தூவுங்க

மக்கள் எல்லாம் உள்ள போவாங்க கல்யாண மண்டபத்துக்கு ஒரு நூறு பேராவது உட்கார வெச்சிருப்போம்

அங்க அங்க மாலை எல்லாம் எடுத்துட்டு போயிருப்பாங்க. தாம்பளம் தட்டு அது இதுன்னு passing ல போகும்.கடைசியா கேமரா pan பண்ணினா பொண்ணு மாப்பிள்ளை முழுக்கா மேடை பூ அலங்காரம் அதுவும் ரெண்டு மேடை. இப்படி போயிட்டே இருக்கும்

ஆனா மணிரத் னுமும் சந்தோஷ் சிவனும் சேர்ந்து இந்த காட்சிய ரொம் சின்னதா பண்ணியிருப்பாங்க. மொத்தமே மூனு shot. 1. ஒரு நாதஸ்வரத்துக்கு close up. அதுலயே மங்கள வாத்தியம் முழங்கும் 2. யாக குண்டம் ல இருந்து ஆரம்பிச்சி Tilt up Tilt down with Pan. Minicrane. 50 mm னு நினைக்கிறேன்

ரெண்டு ஜோடியையும் காண்பிப்பாங்க 3.மேல தாள சத்தம் அதிகமாகும்மஞ்சள் அரிசி மட்டும் விழுகும். தாலி கட்டுவாங்க wide shot. அவ்ளோதான்  இந்த shots எடுக்க ஒரு சுவரும் கல்யாண ஜோடி உட்கார இடமும் இருந்தா போதும்

படத்துடை Office ல யே எடுத்திருக்க வாய்ப்பிருக்குn ஆனா Sound மட்டும் தான் அந்த கல்யாண மண்டபத்தையே உருவாக்கியிருக்கும்

இதை பலபேரு செய்யலாம். ஆனா sound ல perfection இருந்தா தான் நாம budget க்காக சின்னதா பண்றோம்ங்கிற தன்மை துளியும் இல்லாம பண்ண முடியும்.

2. பிறவி ( மலையாளம் )  

2. பிறவி ( மலையாளம் )  
2. பிறவி ( மலையாளம் )  

பிறவி மிகவும் serious ஆன ஒரு படம்.இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்கள்ல ஒருத்தரான Shaji – N – karun பண்ண முதல் படம். பின்னாலில் ரொம்பவே திரைப்பட விழாக்கள் ல பிரசித்து பெற்ற மோகன்லால் தனி ஆவர்தனமான வானப்பிரஸ்தம் படத்தை எடுத்த இயக்குநர்

பிறவி படத்துடைய கதை படிக்க ஊருக்குப்போன பையன் கல்லூரி ( பள்ளி!) முடிந்தும் திரும்பி வருவான்னு ஒவ்வொரு நாளும் வயசான அப்பா ஆற்றங்கரையோரம் இருக்கிற குக்கிராமத்துல இருந்து படகு எடுத்து இன்னொரு கிராமத்துக்கு வந்து காத்திருப்பார்

கடைசி பேருந்து வரைக்கும் ஆனா பையன் வரல அவனுக்காக வீட்ல அம்மாவும் அக்காவும் சேர்த்து இந்த மூனுபேரும் காத்திருங்க இந்த காத்திருப்பும் தேடலும் தான் படம்

அப்போ வீட்ல அவனை பத்தின ஞாபகம் தொடர்ந்து வந்துட்டே இருக்கும்.
அந்த ஞாபகங்கள் அனைத்தும் காட்சியா வரமா சத்ததுல மட்டுமே இருக்கும். இவர்கள் பேசினது சண்டை போட்டதுன்னு எல்லாமும்

அதுவும வயதானவரின் பக்கத்தில் இருக்கும் கடிகாரத்தின் இடைவிடாத சத்தம் படத்தின் உயிர் போல தொடர்ந்து வரும்.மற்றும் மழை முடிந்த பின் வரும் நீர் சொட்டும் சப்தம், குளிப்பதற்காக செம்பில் நீர் எடுக்கும் சப்தம் என நினைவுகளையும் தீவிரமான தேடலையும் சத்ததில. உருவாக்கியிருப்பார் இயக்குநர்

அந்த ரகு கதாபாத்திரத்தை காட்சிப்படுத்தாதால நாமும் அந்த வயதானவரோட சேர்ந்து அந்த பையனை காணமுடியாம தவிக்கத்தொடங்குவோம். ரொம்பவே உணர்வுப்பூர்வமான படம்.

Cannes திரைப்படவிழால முதல் படத்துக்கு தரக்கூடிய மிக உயரிய விருதான camera d’or வாங்கி சாதனை படைச்ச படம். இனைப்பு கீழ இருக்கும். நேரம் கிடைக்கும் பொழுது முழுபடத்தையும் பாருங்க.ஆகச்சிறந்த அனுபவமா இருக்கும். கண்ணுக்கும் காதுக்கும் சேர்த்து விருந்தாகும்

Sound Design – 3 – Sound creating Space #LakshmanRSoundDesign#LakshmanRCinema

Comments

0 comments

Related posts

சஞ்சீவ் பட் குஜராத் ஐ ஏ எஸ் அதிகாரி | நீதிக்கு தண்டனை

admin

அரசு ஊழியர்களின் சொத்து விபரங்கள் வழங்கவேண்டும்

admin

ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா? பதறாதீர்!

admin
%d bloggers like this: