வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில்

 

Indrum Netrum
Indrum Netrum

Thanks by Vijayaraj

Vijayaraj

அந்தக் காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க.. இப்ப அதைத்தான் டீசெண்டா ‘டோல் கேட்’னு சொல்றாங்க…
..
..

வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் மூன்று வகையான சட்னி கிடைக்குது.. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது…!!
..
..

வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்…
..
..

யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது…
..
..

இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்..!!
..
..

உண்மை, சுளீரென ஒரு அடி கொடுத்து விட்டு விடும்.. பொய், டைம் கிடைக்கும் போதெல்லாம் கூப்பிட்டு அடிக்கும்..!
..
..

நாம வாழ்க்கைல எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்கும் போதுதான் கடவுள் நமக்கு காதலியோ, மனைவியோ கொடுத்து சோதிச்சுடுராறு – ‘முதல்ல இதை சமாளி மகனே’னு..!!
..
..
..
..

அன்று தாத்தா சாப்பிட்டதும் பாட்டி கைநிறைய வெற்றிலை மடிச்சி கொடுத்தாங்க.. இப்ப அப்பா சாப்பிட்டதும் அம்மா கைநிறைய மாத்திரை கொடுக்குறாங்க..!!
..
..

ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே வித்தியாசம் தான்… ஒருத்தன் நாயா அலஞ்சா அவன் “ஏழை”.. ஒருத்தன் நாயோட அலஞ்சா அவன் “பணக்காரன்”..!!

Related posts

%d bloggers like this: