இந்த பஞ்சபரதேசி சீமானுக்கு தெரியவாய்ப்பில்லை

 திமுகவினர்உறுதுணையாக  இருந்ததெல்லாம் இந்த பஞ்சபரதேசி சீமானுக்கு தெரியவாய்ப்பில்லை!

திமுகவினர்உறுதுணையாக  இருந்ததெல்லாம் இந்த பஞ்சபரதேசி சீமானுக்கு தெரியவாய்ப்பில்லை?  இனவாதமும் மதவாதமும்
திருச்சி விமான நிலையத்தில் வைகோவிற்கெதிராக நாம் தமிழர் பாய்ஸ் கலாட்டா செய்ய மதிமுகவினர் தாக்க தொடங்கினர்.. சீமானின் தம்பிகள் தலைத்தெறிக்க ஓடதொடங்கினர்
இது திட்டமிட்ட செய்யபடுவது.. சீமானின் ஈழம் பல்லிளிக்க தொடங்கியதும் …சீமான் இதுவரை சொல்லிவந்த பொய்களை திரு.வைகோ ஒவ்வொன்றாக வெளியிட்டு சீமானின் சில்லறைத்தனத்தை போட்டுடைத்தவுடன் .. எங்கே முழுவதுமாக புறக்கணிக்கபடுவோமே என்று இதுபோன்ற தாக்குதலை தூண்டிவிடுகிறார்

வைகோவை தெலுங்கர்

வைகோ ஸ்டாலின் தற்போதைய நட்பு எப்படி உள்ளது
வைகோ ஸ்டாலின் தற்போதைய நட்பு

வைகோவை தெலுங்கர் வந்தேறி என கதைக்க தொடங்கும் போது அவர்களின் நோக்கம் நமக்கு புரிகிறது   பாரம்பரிய குடும்ப பின்னணியிலிருந்து வந்து ..திராவிட அரசியலில் உழன்று  தமிழ் மீது தமிழர் மீது தீராத காதல் கொண்டவர் தன்னை தமிழனாகவே அடையாளம் காட்டிக்கொண்டவர் .. இன்றைக்கு ஈழத்தை வைத்து வியாபாரம் செய்து வயிற்றுப்பிழைப்பு நடத்துவோர் மத்தியில் .. நீண்டகாலமாக ஈழத்தின் .. ஈழவிடுதலையின் தமிழக முகமாகவே இருந்தவர்.. அதற்காக தான் வளர்ந்த சூழலை மறந்து தன்னை வளர்த்த திமுக ஆட்சிக்குவந்த சில நாட்களிலேயே .. அதற்கு மத்திய அரசின் அழுத்தம் வருமென தெரிந்திருந்தும் .. ஈழ பயணத்தை மேற்கொண்டவர் .. ஈழத்தலைவர் பிரபாகரனோடு தோளின் மீது கையை போட்டும் பேசும் அதிகாரம் கொண்டவர் .. ஈழ விடயமாக மற்றவர்களை விட அதிகம் அறிந்தவர்.. கடைசிக்கட்ட போரின் போது .. ப.சிதம்பரம் நேரடியாகவே ஈழத்தலைமை பிரபாகரனோடு பேசி போரை நிறுத்துங்கள் .. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு முடிவுக்கு வரலாமென்ற போது .. வைகோவிடம் கேட்டுவிட்டு பதலிளிக்கிறேன் என்றுதான் சொன்னாரே ..தவிர.. இந்த சில்லறைகளையெல்லாம் கணக்கிலேயே கொள்ளவில்லை.. அன்று வைகோ எடுத்த முடிவு தவறானது வேறுவிடயம்.. வாஜ்பாய் வந்துவிடுவாரென தவறான கணக்கு பிழைத்தது.. இந்தியாவிடனான எந்தவொரு விடயமானாலும் வைகோவிடம் யோசனை கேட்காமல் எல்டிடிஈ இருந்ததில்லை.. அத்தகைய மனிதரைதான் தமிழன விரோதி போல சித்தரிக்க முயலும் சீமானின் பின்னால் இருக்கும் திட்டம் தெரிகிறது

யார் இவர்கள்? மக்களிடம் செல்வாக்கில்வாதவர்கள்!

யார் இவர்கள் மக்களிடம் செல்வாக்கில்வாதவர்கள் ஊடக வெளிச்சத்திற்காக திரும்ப திரும்ப கதைப்பதும் பொதுமேடைகளில் கத்துவதும் இவர்களை பிரபலமாக்குகிறது  திராவிட கட்சிகளின் செயல்பாட்டால் காலூன்ற முடியாமல் தவிக்கும் ஆரிய கும்பல் தங்கள் ஊடகத்தை வைத்து இவர்களை முன்னிருத்துகிறதே தவிர  யாரும் இவர்களை சட்டைசெய்வதில்லை மொழிஇனம் மத வேசம் கட்டுகிறார்கள் முஸ்லிம்களை தமிழர்கள் இல்லையென்பதும் எதிர்ப்பு பலமானதும் உரூது முஸ்லிம்களென மாற்றிக்கொள்வதும் கலைஞரை வடுக வந்தேறியென்பதும் சின்னமேளம் பிரிவினர் தமிழ்மரபினர் என்ற ஆதாரத்தை தந்ததும் பம்முவதும் மதத்தை சாதி உணர்வை தூண்டுவதும் இதெல்லாம் பார்பனர்களுக்காக இவர் செய்கிறார்களென்பதும் பாவம் இவர் பின்னால் நிற்கும் விடலைகளுக்கு தெரியாது விவர போதாமை
திமுகவினர் ஈழமக்களுக்காக வழங்கிய உதவிகள் .. என்பதுகளின் இறுதியில் அகதிகளாய் கீழிதஞ்சை மாவட்டங்களில் வந்தபோது.. உறுதுணையாக இருந்ததெல்லாம் இந்த பஞ்சபரதேசி சீமானுக்கு தெரியவாய்ப்பில்லை .. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயலர் கோ.சி.மணி அவர்கள்
எல்லா கிளைக்கழகத்தினருக்கும் உதவி செய்ய உத்தரவிட்ட போது எங்கிருந்தார்.. அடையாற்றியில் பிரபா தங்கியிருந்தபோது அவர் மீது எம்ஜிஆர் அரசு தொடர்ந்த வழக்கை எதிரித்து வாதாடியது திமுக வழக்கறிஞர் அணி.. ராதா கிருஷ்ணன் தலைமையில் சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் நிறைந்து நின்றதெல்லாம் .. இன்றைக்கு ஈழம்பேசுவோருக்கு தெரியவாய்ப்பில்லை.. .. ராஜீவ் படுகொலை வழக்கில் நளினிக்காக யாருமே வாதாட முன்வராதபோது தி.க.துரைசாமியை அனுப்பிவைத்தவர் கலைஞர்.. 89 ல் பத்மநாபாவை கொலை செய்த போது .. தமிழக காவல்துறையால் பிடிக்கபட்ட ஈழத்தலைவரை கலைஞரின் கருணை தான் தப்பிக்க வைத்தது .. இல்லையேல் இந்திய சிறைகளிலேயே ஈழகனவு சிதைந்து போயிருக்கும்..இதெல்லாம் இன்றைய தம்பிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை..
இப்படி நிறைய .. ஈழத்திற்காக திராவிட இயக்கம் செய்த தியாகங்களும் இழப்புகளும் .. அரசை அதிகாரத்தை கூட இழந்தது .. இனியும் இவர்களின் பொய் பிரச்சாரத்தை கண்டுக்கொள்ளாமல் விட்டால் இவர்கள் தான் ஈழத்தையே மீட்க போராடினார்களென ஆமைகதைகளை தொடர்வார்கள்…
..
திருச்சி சம்பவம் தொடக்கம் தான்.. #எச்சரிக்கை
..
ஆலஞ்சியார்

Leave a Reply