சுதா ரகு நாதனுக்கு பிராமண அமைப்புகள் பகிரங்க மிரட்டல்

சுதா ரகு நாதனுக்கு பிராமண அமைப்புகள் பகிரங்க மிரட்டல்

சுதா ரகுநாதனுக்கு பிராமண அமைப்புகள் பகிரங்க மிரட்டல்
இசை அரசி எம்.எல்.வசந்தகுமாரியின் சிஷ்யை சுதா ரகுநாதன் அய்யங்கார் ஆத்து பெண் பிரபல கர்நாடக இசைக்கலைஞர் அவரின் மகள் ஒரு கிருஸ்துவரை மணக்கிறார்
இதில் மற்றவர்களுக்கு என்ன வந்தது பார்பன அடிப்படைவாதிகள் வலைதளங்களில் மிக மோசமாக பதிவிட்டும் சுதாவின் தொலைபேசி எண்ணை வெளியிட்டு அவரை தொடர்ந்து “அர்ச்சனை” செய்கிறார்கள்
எப்படி கலப்பு திருமணம் செய்யலாம் என சிலர் கூக்குரல் கேட்க சகிக்கவில்லை .. மனிதனும் நாயும் திருமணம் செய்தால் தான் அது கலப்பு
மனிதன் மனுஷியை திருமணம் செய்வது எப்படி கலப்பாகும் என்பார் பேராசான் பெரியார் 
இதுவரை பார்பன பெண்கள் வெளிநாடுகளில் பிற மதத்தவரை திருமணம் செய்ததில்லையா  இசை கலைஞர்களில் பலர் செய்திருக்கிறார்கள் அப்போதெல்லாம் வராத எதிர்ப்பு இப்போது வர காரணம் என்ன
ஒரு கருப்பர் இன ஆண் என்பதாலா Sudha Ragunathan with her son in law
மாடு free என சுதாவோடு அவரது மாப்பிள்ளை நிற்கும் போட்டோவை போட்டு கீழ்தரமாக எழுதியிருக்கிறார்கள் 


மிலேச்சன் கலப்பு சண்டாள சாபம் ப்ராமண இழுக்கு
அவள் பேரனுக்கு பூணூல் அருகதை இல்லை சங்கீத ஞானம் சாக்கடையில் ..என கடுமையான விமர்சனங்கள் 


சாதி மத மறுப்பு திருமணங்களை “சுயமரியாதை” என கண்ணியமாக அழைத்து பழகியிருக்கிறோம் ஆனால் சில சங்கிகள் ஹார்மோன் சுரப்பில் வந்த கோளாறு என கொச்சைபடுத்துகிறார்கள்

எந்த மதமும் சாதியும் கலப்பில்லாமல் இல்லை நீங்கள் பிடித்து தொங்குகிற மத அடையாளங்களோ சாதிய திமிரோ ஆய்விற்குட்பட்டால் கடைசியில் நீர் நிஜத்தில் இல்லை என்கிற உண்மை அதிர்ச்சி தரும் 

உண்மை விளங்காமல் சுதா ரகுநாதனுக்கு பிராமண அமைப்புகள் மிரட்டல்


நீங்கள் கட்டிசுமக்கிற எந்த விதிகளும் ஆச்சாரங்களும் பாலின விடயத்தில் அடிபட்டு போகும் இயல்பாய் மனித உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் எந்த கட்டுபாடுகளையும் உடைத்து சிதைத்துவிடும் எவரும் தன்னை ஒரு சமூகத்திற்கு அல்லது இனத்திற்கு அல்லது மதத்தை சார்ந்தவன் என்று சொல்லிவிட முடியாது

ஏதோவொரு கலப்பு எங்கோ நடந்திருக்கும் ஆதம் தொட்டு கலப்பில் தான் மனித சமூகமே பரிணாம மாற்றம் அடைகிறது என்கிற உண்மை விளங்காமல் ஒரு சாதியை மதத்தை ஆச்சாரத்தை கோட்பாட்டை பிடித்துக்கொண்டு கதறுகிறீர்கள் 
தோண்டினால் அசிங்கபட்டுநிற்பீர் ஆச்சாரம் என்பதே இல்லை என்கிற உண்மை விளங்கும்
இப்படி பட்ட திருமணங்களை சங்கிகள் கடுமையாக எதிர்க்கிறவரை பெண்கள் பெரு வாரியாக பெரியாரை தேடுவார்கள்
சிவசங்கிரி சொன்ன ஒரு விடயம் ஞாபகம் வருகிறது எனக்கு விதிக்கபட்ட கட்டுபாடுகளும் அடக்குதலும் என்னை பெரியார் திடலுக்கு வரவழைத்தென்றார்
முதலில் ஒருவரின் தனிபட்ட குடும்ப விடயங்களில் அவர்களது விருப்பு வெறுப்புகளில் மதம் சாதி கலாச்சாரம் பண்பாடு ஆச்சாரம் என சொல்லி தடைவிதிக்க எதிர்க்க செய்யாதீர்கள்
சுதா பாடிய பாடல் நினைவிற்கு வந்தது

எனை என்ன செய்தாய் வேங்குழலி
எனக்கும் உனக்கும் ஒரு பகையில்லையே
ஆலஞ்சியார்

மழை கம்பி குத்தாமல் இருக்க குடைக்கம்பியாய் ஒதுங்கினேன்
குடையல்ல அது உன் குரல் அருவி குற்றாலம்
கானம் கேட்க கண் மூட போய் காணாமலே போனேன் நான்
விட்டு கூடு பாய்ந்திருப்பேனோ என தட்டு தடுமாறி தேடி உன் காலடிவாரம் வந்து கிடந்தேன்
அடடா தாளமிடும் உன் கைக்கும் உன்  தொடைக்கும் இடையே
நான் சிக்கொண்டிருப்பதை கண்டு கொண்டேன்
எதோ காது கொடுக்க வந்தவன் வெறும் காதோடு போகிறேன்

Enai Enna Seithai Vengulale lyric from Tamil

என்னை என்ன செய்தாய் வேங்குழலே, என்னை என்ன செய்தாய் வேங்குழலே, என்னை என்ன செய்தாய் வேங்குழலே,
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே, எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே,
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய், இந்த இள மனம் இயங்கிடவே, என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்..,
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன், என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன், என்னுள் என்னை கண்டு நல்லின்பம் படைத்து நின்றேன்,
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்,
என்னுள் என்னை கண்டு நல்லின்பம் படைத்து நின்றேன், வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன், வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்,
யாரோ.., அவன் யாரோ.., யாரோ.., அவன் யாரோ.., யமுனா நதி தீரத்தில் அமர்ந்தோரு இசை கலையால்,
என்னை என்ன செய்தாய் வேங்குழலே, மழை கம்பி குத்தாமல் இருக்க, குடை கம்பியாய் ஒதுங்கினேன், குடை அல்ல அது உன் குரல் அருவி குற்றாலம்,
கானம் கேட்க கண் மூட போய், காணாமலே போனேன் நான், விட்டு கூடு பாய்ந்திருப்பேனோ என, தட்டு தடுமாரி தேடி
, காதுகளால் இரைந்திருகும், உன் கால் அடிவாரம் வந்து கிடந்தேன்,
மூங்கில் போலே விளைந்தொரு மங்கை இருக்க, அடடா அ தாளமிடும் கைக்கும், தட்டு படும் உன் தொடைகும் இடையே நான், சிக்கிகொண்டிருப்பதை கண்டுகொண்டேன்,
மூங்கில் போலே விளைந்தொரு மங்கை இருக்க, துளைக்கும் வண்டாய் மனதை துளைத்தாய் நீயே,
ஏனோ காது கொடுக்க வந்தவன், வெறும் காதோடு போகிறேன் போ,
தூங்கும் யாழாய் தனிமையில் தோகை இருக்க ஆஆ.., மீட்டும் விரலாய் நரம்பினில் நடந்தாய் நீயே, வண்ண மலர் உண்டு
வெள்ளி அலை உண்டு.., வருடிடும் காற்றென உலவ போ, வண்ண மலர் உண்டு வெள்ளி அலை உண்டு
வருடிடும் காற்றென உலவ போ, பற்றிடும் கொடியொன்று, பசும் புல் மடியுண்டு, நீர் துளியை போல தழுவ போ, இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு,
உனது திறமைகள் அங்கு பலிக்குமோ, நீயும் விலையாட நூறு இடம் உண்டு, அனுதினம் வருத்துதல் நியாயமோ, என்னை என்ன செய்தாய் வேங்குழலே,
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே, நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய், இந்த இள மனம் இயங்கிடவே, எ வேங்குழலே வேங்குழலே

 

Leave a Reply