சூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்

சூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்

சூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்

சூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்ய புத்திரன சூரரைப் போற்று பார்த்தேன் சில காரணங்களுக்காக அந்தப்படம் எனக்குப் பிடித்திருந்தது. அது மாஸ் ஹீரோ சினிமாகளுக்குரிய மிகைகளையும் அதீத புனைவுகளையும் கொண்ட படமாக இருக்கலாம். அதையும் தாண்டி இந்தப்படம் ஏற்படுத்தும் சில ஆதாரமான உணர்வுகளையே இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.1. ’’நூறு வருஷத்திற்கு முன்னால் பணக்காரர்களிடம் மட்டும்தான் மின்சாரம் இருந்தது, 50 வருடங்களுக்கு முன்பு பணக்காரர்களிடம் மட்டும்தான் கார் இருந்தது. இன்றைக்கு அது மற்றவர்களுக்கு கிடைப்பதுபோல விமானப்பயணமும் எல்லோருக்கும் கிடைக்கணும்’’ என்று சூர்யா பேசுகிறார்

இந்த வசனம் இந்தப்படத்தின் மையப்புள்ளிகளில் ஒன்று ஆனால் மின்சாரமும் பிற நவீன வசதிகளும் படத்தில் வரும் மாறன் போன்ற யாரோ சில தனிநபர்களின் முயற்சியால் கிடைத்துவிட்டனவா? ஒரு காலத்தில் நவீன மருத்துவமும் , கல்வியும் , அரசு வேலைகளும், செல்போன்களும், தொலைகாட்சியும், லேப் டாப்பும் கூட பணக்காரர்களிடம் மட்டும்தான் இருந்தது. இதை தகர்த்து கிராமப்புற மனிதர்களுக்கும் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் அவற்றை கிடைக்கசெய்தது

திராவிட இயக்க ஆட்சி

திராவிட இயக்க ஆட்சி 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மூலமாக செல்போன் கட்டணங்கள் குறைய திமுக காரணமாக இருந்தது என்பதும் கலைஞரின் இலவச தொலைகாட்சி திட்டம் கிராமப்புறங்களில் மக்களை எப்படி மைய நீரோட்டத்தில் இணைத்தன என்பதும் சமகால வரலாறு. தமிழகம் பொருளாதார ரீதியாக அடைந்த வளர்ச்சியினால் நவீன வாழ்க்கை முறை சார்ந்த செளகர்யங்களை சிறிய வருமானம் உள்ளவர்களும் அடையலாம் என்ற நிலை உருவானது

இந்த வரலாற்றின் தொடர்ச்சியாகத்தான் எளிய மக்களும் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் போகலாம் என்ற முழக்கத்தைப் பார்க்கவேண்டும். பிரச்சினை என்னவென்றால் திராவிட இயக்கத்தின் இந்த சமூக நீதி வரலாறு மறைக்கப்பட்டு இதுபோன்ற மாற்றங்கள் தனிநபர்களின் இலட்சிய வாதத்தால் நடைபெறுகின்றன என்ற மாயை உருவாக்கபடுகிறது

சந்தை விரிவாக்கத்திற்காக முதலில் குறைந்த விலைக்கு எல்லாவற்றையும் தருவது ஒரு நவீன முதலாளித்துவ உத்தி. ரிலையன்ஸ் நிறுவனம்கூட ஒரு காலத்தில் 500 ரூபாய்க்கு மொபைல் கொடுத்தது. அது கிராமப்புற மக்களுக்கு செல்போன் கிடைக்க வேண்டும் என்ற இலட்சிய வாதத்தாலா? எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதை ஒரு சமூக அரசியல் இயக்கம்தான் செய்ய முடியுமே தனிப்பட்ட தொழில் முனைவோர்கள் அல்ல

அந்த சமூக நீதி செயல்பாடுகள்தான் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து அவர்களை ஒரு புதிய சந்தையாக மாற்றவும் முடியும்.2. ஜாதி எதிர்ப்பு, பொதுவுடமை- பகுத்தறிவு வசனங்கள் என்பது இன்று வெகுசன சினிமாவில் ஒரு பொதுவான ட்ரெண்டாகி வருகிறது. சமூக நீதி இயக்கங்களின் தொடர் செயல்பாடுகளின் வழியாக அதற்கு ஒரு வெகுசன ஆதரவு தளம் இருப்பதால் ரஜினி, விஜய் உள்பட மாஸ் ஹீரோக்களும் அந்த வசனங்களைப் பேசுகிறார்கள். சூர்யாவும் பேசுகிறார். சுயமாரியாதை திருமணம், சாதி எதிர்ப்பு உள்ளிட்ட சில தருணங்களை இந்தப்படத்தில் இடம்பெறச் செய்திருப்பது முற்போக்கு சிந்தனைகள் ஒரு வெகுசன உரையாடலாக மாறிஇருப்பதைக் காட்டுகிறது

இது வரவேற்கத்தக்கது சாதி மத வெறி பேச்சுகள் சினிமாவை ஆக்ரமிக்கும் காலத்தில் இந்தப் பேச்சுகளும் அவசியம்தான்3. கிராமத்தில் அடிமட்டத்தில் இருந்து வரும் இளைஞர்கள் ஆடு மேய்க்க வேண்டும், இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்று டுபாக்கூர் போதனைகள் நிரம்பிய ஒரு காலத்தில் நீங்கள் விமானக் கம்பெனி நடத்தலாம் என ஒரு படம் சொல்வது ஆசுவாசமாக இருக்கிறது. கிராமத்திலிருந்து போன இளைஞர் ஒருவர் ஒரு ஐ.டி கம்பெனி ஆரம்பித்து நடத்துவது போல காட்டியிருந்தாலும் நான் இதையேதான் சொல்லியிருப்பேன்

ஒரு சிறு தொழில் முனைவோன் கார்பரேட்டுகளை எதிர்த்துப்போராடி வெல்வதை இந்தப்படம் சொல்கிறது

சிறிய மீன்களை பெரிய முதலைகள் எப்படி விழுங்கும் என்பது நாம் கண்கூடாக காணும் காட்சி, சூர்யா வெல்கிறார். அவர் வெல்வது நமக்கு மிகுந்த உவகையைத் தருகிறது. ஆனால் எத்தனை சிறு இளம் தொழில் முனைவோர்களுக்கு இது சாத்தியம்? அந்த வகையில் இந்தப்படம் தன்னம்பிக்கை நூல்களைபோல எதார்த்ததிற்குப்பொருந்தாத ஒரு மிகையான தன்னம்பிகையை விதைக்கிறது. இலட்சம் பேர் தோற்கும் இடத்தில் யாரோ ஒருவன் வெல்கிறான். சிறு தொழில் முனைவோர்களை விடுங்கள். தென்னிந்தியாவில் இருந்து எழுந்து வந்த மிகப்பெரிய தொழில் கூட்டமைப்பான சன் குழுமம் ஏர்டெல் , ரிலையன்ஸ் போன்றவற்றோடு மோதியபோது எவ்வாறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கபட்டது என்பதை அறிவோம். மாறன் சகோதர்களே ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை விற்கும் அளவு இந்த நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.5. கிராமத்தில் ஏதாவது சாதி மத அமைப்புகள் நிதி திரட்டினால் காசு தர ஆள் இருக்கிறார்கள். தங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞன் விமான நிறுவனம் ஆரம்பிக்க மூலதனம் திரட்ட எந்த ஊர் மக்கள் நிதி திரட்டித் தருவார்கள் என்று தெரியவில்லை

பொதுவாக சினிமாவில் வருகிற கிராமப்புற மக்கள் அநியாயத்திற்கு நல்லவர்களாக இருக்கிறார்கள். நானும் கிராமத்திலிருந்து வந்தவன்தான். அப்படி ஒருத்தனையும் என் ஊரில் பார்த்ததில்லை6. இது எல்லாவற்றையும் தாண்டி தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் ஒரு சிறு தொழில் முனைவோன் என்ற முறையில் இந்தப்படம் பல இடங்களில் உணர்வுபூர்வமாக என்னை மிகவும் பாதித்தது

மாறனின் பல வலிகளிலும் அவமானங்களிலும் தோல்விகளிலும் என் அனுபவங்கள் பலவற்றைக் கண்டுகொண்டேன். ஒரு பதிப்பகம் நடத்துவது, பத்திரிகை நடத்துவது எல்லாம் ஒரு விமான நிறுவனம் நடத்துவதைவிட ஆபத்தானது என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்? பல நாட்கள் சோறு தொண்டையில் இறங்காது.7. சூர்யா என்ற மிகச்சிறந்த நடிகனின் நடிப்பிற்காக இந்தப்படத்தை மற்றுமொருமுறை பார்ப்பேன்.

Do you want to Promote your business? click to start here

சூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்
சூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்

49049055 sharesLikeShare

Leave a Reply