சென்னை பெருநகர் பகுதி மொத்த நிலப்பகுதி ஆதாரக் குடியிருப்புகள்

சென்னை பெருநகர் பகுதி மொத்த நிலப்பகுதி ஆதாரக் குடியிருப்புகள்

-சென்னை பெருநகர் பகுதி மொத்த நிலப்பகுதி ஆதாரக் குடியிருப்புகள் வணிகப் பகுதிகள், தொழில் பகுதிகள், நீர் நிலைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் என பல நிலைகளில் பிரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளன
அதன் அடிப்படையில் வீடுகள், அடுக்குமாடிகள், தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய பயன்பாடுகளுக்கான புதிய கட்டுமான திட்ட அனுமதி அளிக்கப்படுகிறது

சென்னை பெருநகர் பகுதி-நில அமைப்புகள் மற்றும் அவற்றின் வகைகள்

சென்னையின் நில அமைப்புகள் மற்றும் அவற்றின் வகைகள் ஆகியவை தொகுக்கப்பட்டு, தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் நிலங்களின் தன்மைகள் குறிப்பிடப்பட்டு, சி.எம்.டி.ஏ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன
பொதுமக்கள் அந்த வரைபடங்களை இணையதளம் மூலம் பார்வையிடலாம். தேவைப்படுபவர்கள் அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
அதன் மூலம் தங்கள் பகுதி நிலம் அல்லது வாங்க விரும்பும் நிலம் ஆகியவை எந்த அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது என்ற விவரத்தை அறிந்து செயல்படலாம்
புதிதாக வீடு அல்லது மனை வாங்க முடிவு செய்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கான நில வகை மற்றும் அங்கு உள்ள நீர் நிலைகள் ஆகியவை பற்றி அறிந்து அதற்கேற்ப வாங்குவது பற்றியும் முடிவெடுக்க இயலும்.

சென்னைப் பெருநகர்ப் பகுதி – குறிப்பு

தமிழ் நாட்டின் தலை நகராமான சென்னை இந்தியாவிலுள்ள நாலாவது பெரிய பெரு நகரமாகும். சென்னைப் பெருநகர்ப் பகுதி, சென்னை மாநராட்சி, 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 214 பகுதியின் பரப்பளவு 1189 சதுர கிலோ மீட்டராகும். சென்னையின் பூகோள அமைப்பு படத்தில் தரப்பட்டுள்ளது.

சென்னைப் பெருநகரப் பகுதி தமிழ்நாடு மாநிலத்தின் 3 மாவட்டங்களில் அமைந்துள்ளது. அதாவது சென்னை மாவட்டம், திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதி மற்றும் காஞ்சிபுர மாவட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியது.

சென்னை மாவட்டம் கோட்டை – தண்டையார்பேட்டை வட்டம், பெரம்பூர் – புரசவாக்கம் வட்டம், எழும்பூர் – நுங்கம்பாக்கம் வட்டம், மாம்பலம் – கிண்டி வட்டம் மற்றும் மைலாப்பூர் – திருவல்லிக்கேணி வட்டம், ஆகிய 5 வட்டங்களிலுள்ள 55 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய 176 கிலோ மீட்டர் பரப்பளவினை கொண்டது. திருவள்ளூர் மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 3427 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி, மற்றும் பூந்தமல்லி ஆகிய வட்டங்களில் 637 சதுர கிலோ மிட்டர் சென்னைப் பெருநகரில் வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 4433 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய வட்டங்களில் 376 சதுர கிலோ மீட்டர் பரப்பு சென்னைப் பெருநகரில் வருகிறது.

Leave a Reply