உயிர் போகும் தருவாயிலும்-தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி

தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி

-தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி சிரியாவின் மேற்கு இட்லிப்பில் உள்ள அரிஹா என்ற இடத்தில் கிளர்ச்சிப்படைக்கு எதிராக அரசு ஆதரவு ரஷ்ய படை வான்வழித் தாக்குதல் நடத்தியது
இதில் வீடு ஒன்றின் 5-வது தளத்தில் இருந்த குடும்பத்தில் தாய் அஸ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

உயிருக்குப் போராடும் தருணத்திலும் தனது தங்கையைக் காப்பாற்றிய சிறுமி

இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி ரிஹாம், தனது 7 மாத தங்கை துகா-வின் டி சர்ட்-ஐ கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் உயிர்பிழைத்தது.
மனைவியை இழந்து, இரு குழந்தைகளும் உயிருக்குப் போராடுவதைக் கண்டும், உடனே மீட்க முடியாமல் பரிதவித்துக் கதறும் தந்தையின் காட்சிகள் காண்போரையும் கலங்க வைக்கிறது.
இந்த விபத்தில் 7 மாத குழந்தை பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது தனது உயிர் போகும் தருவாயிலும் நெருக்கடியான சூழலில் தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி ரிஹாம், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த ஏப்ரலில் இருந்து கிளர்ச்சிப்படைக்கு எதிரான தாக்குதல்களில் ஏராளமான குழந்தைகள் உள்பட பொதுமக்களில் 600 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply