Skip to toolbar

சுட்டெரிக்கும் வெயிலில் நாகை MLA தமிமுன் அன்சாரி கள ஆய்வு!

குடிநீர் தேவைகள் குறித்து சுட்டெரிக்கும் வெயிலில் நாகை MLA தமிமுன் அன்சாரி கள ஆய்வு! நாகப்பட்டினம் தொகுதியில் தற்போது குடிநீர் வினியோகம் சீரான கட்டுப்பாட்டிற்குள் இருந்து வருகிறது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வினியோகம் நடைப்பெற்று வருகிறது

மழையின்மை, நிலத்தடி நீர் இன்மை, வறட்சி ஆகிய இயற்கை இடர்பாடுகளை சமாளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நாகை MLA அலுவலகத்திற்கு வரும் கோரிக்கைகளின் அடிப்படையில்,இது குறித்து மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அதிகாரிகளை உடனுக்குடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இன்று நாகை தொகுதிக்குட்பட்ட , திருமருகல் ஒன்றியத்தில் நெய் குப்பை, கரம்பை, வேளங்குடி ஆகிய ஊராட்சி கிராமங்களுக்கு சென்று குடிநீர் வினியோகப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட வினியோகம் குறித்தும் அதிகாரிகளிடம் விசாரித்தார்.
குழாய்கள் இணைப்பு, தண்ணீர் கசிவு, புதிய குழாய்கள் பதிப்பு,குடிநீர் தொட்டிகளின் தூய்மை, கைப் பம்புகளின் இயக்கங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வெயிலின் அளவு ( 41.C) 106 டிகிரி பாரன்ஹீட் ஆக இருந்தது.
அந்த கொடும் வெயிலில் வேலை பார்க்கும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பாராட்டுகளை கூறினார்

கொளுத்தும் வெயிலில் தமிமுன் அன்சாரி கள ஆய்வு

கொளுத்தும் வெயிலில் குடிநீர் வினியோகப் பணிகளை தமிமுன் அன்சாரி கள ஆய்வு அன்சாரி MLA அவர்களுக்கு கிராம மக்கள் இளநீர் கொடுத்து உபசரித்தனர்.
அவர்களிடம் கடும் வெயிலில் வேலை பார்க்கும், அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கும் இளநீர் கொடுங்கள் என்றார். உடனே அவர்களுக்கும், இளநீர் வழங்கப்பட்டது.
பிறகு திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த தமிமுன் அன்சாரி MLA அவர்கள், கடந்த ஆய்வு கூட்டத்தில் குடிநீர் வினியோக திட்டங்கள் குறித்து பேசியவற்றின் சாராம்சங்களை விசாரித்தார்.
திட்டங்கள் நடைபெறாத, மற்றும் முடிவுறாத திட்டங்கள் குறித்து இரண்டு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தான் இரு வாரம் கழித்து மீண்டும் இங்கு வந்து ஆய்வு செய்வேன் என்றும் எச்சரிக்கை கலந்து கூறினார்.
அது போல் நாகை நகராட்சி ஆணையர், நாகை ஊராட்சி ஒன்றிய BDO ஆகியோரிடமும் அப்பகுதிகளில் நடைபெறும் குடிநீர் வினியோகம் குறித்தும் கேட்டறிந்தார்.
தேவைப்படும் இடங்களுக்கு டேங்கர் லாரிகளில் தண்ணீர் அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டார்.
கடந்தாண்டு முன் ஏற்பாடுகளோடு எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது நிலைமையை சீராக கையாள முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
20.06.19

தமிமுன் அன்சாரி கள ஆய்வு
தமிமுன் அன்சாரி கள ஆய்வு தமிமுன் அன்சாரி கள ஆய்வு தமிமுன் அன்சாரி கள ஆய்வு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *