தயவுசெய்து அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுங்கள் அமெரிக்க குடியுரிமைச் சட்டம் மிகக் கடுமையானது  சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து பிடிபட்டவர்களில், சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து தப்பிப்பவர்கள் இருக்கிறார்கள். அதிலும் அகதியாக உள்ளே நுழைபவன் ராஜபோக வாழ்க்கை வாழலாம். அந்த அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் துர்பாக்கியசாலிகள். சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழ்ந்து, பிடிபட்டவன் மெக்ஸிகோகாரனாக இருந்தால் அவனையும், அவனுடன் பிடிபட்டவர்களையும் எச்சரித்து, பஸ்ஸில் ஏற்றிக் கொண்டுபோய் அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் இறக்கிவிட்டுவிடுவார்கள். மற்றவர்களை விமானத்தில் மூட்டை கட்டிக் கொண்டுபோய் அவனவன் நாட்டில் இறக்கிவிட்டுவிடுவார்கள்.ஆளுமைகள் 

இந்தியர்களே  தயவுசெய்து அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுங்கள்

இந்தியர்களே  தயவுசெய்து அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுங்கள்

இந்தியர்களே தயவுசெய்து அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுங்கள் அமெரிக்க குடியுரிமைச் சட்டம் மிகக் கடுமையானது  சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து பிடிபட்டவர்களில், சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து தப்பிப்பவர்கள் இருக்கிறார்கள். அதிலும் அகதியாக உள்ளே நுழைபவன் ராஜபோக வாழ்க்கை வாழலாம். அந்த அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் துர்பாக்கியசாலிகள். சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழ்ந்து, பிடிபட்டவன் மெக்ஸிகோகாரனாக இருந்தால் அவனையும், அவனுடன் பிடிபட்டவர்களையும் எச்சரித்து, பஸ்ஸில் ஏற்றிக் கொண்டுபோய் அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் இறக்கிவிட்டுவிடுவார்கள். மற்றவர்களை விமானத்தில் மூட்டை கட்டிக் கொண்டுபோய் அவனவன் நாட்டில் இறக்கிவிட்டுவிடுவார்கள்.

ஆனால் வேலை வாய்ப்பு அதிகமில்லாத மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் எப்பாடுபட்டாவது மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். வெள்ளைப் பணக்காரர்களின் விவசாயப் பண்ணைகளில் வேலை செய்வதற்கும், வீடு கட்டுவது, வீட்டு வேலை செய்வது, நகரை சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் அவர்களின் தேவைகள் இருப்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினைகள் இருப்பதில்லை. சாதாரண வெள்ளை அமெரிக்கனைவிடவும் அவர்களுக்கு அடிமட்ட கூலி மட்டுமே கொடுக்கப்படுவதால் இதுவரை இருந்த அமெரிக்க அரசாங்கங்கள் அதனைக் கண்டும் காணாமல் இருந்தன.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு எல்லாமே தலைகீழாகி விட்டது. அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு சுவரைக் கட்ட மெக்ஸிகோ பணம் தரவேண்டும் எனத் தடாலடியாக அறிவித்தார். மெக்ஸிகோ ஜனதிபதி அதனைப் பொருட்படுத்தவில்லை. இருந்தாலும் சுவற்றைக் கட்டியே தீருவேன் என்கிற பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் ட்ரம்ப். இன்றைக்கு அமெரிக்காவின் பொருளாதார நிலைமை இருக்கிற நிலையில் அது எப்படி சாத்தியமாகும் என்று எனக்குப் புரியவில்லை. அப்படியே சுவற்றைக் கட்டினாலும் மெக்ஸிகோகாரன் சுரங்கம் வைத்து இந்தப்பக்கம் வந்துவிடுவான்.

சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், விசா காலம் முடிந்தபிறகு இன்னமும் தங்கியிருப்பவர்கள் என்று பலரையும் வளைத்து உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவிட்டிருப்பதால் குடியுரிமை அதிகாரிகள் ஏகத்திற்கும் பிஸியாகியிருக்கிறார்கள். சிக்கினவனை குண்டுகட்டாக, குடும்பத்துடன் தூக்கிக் கொண்டு போகும் செய்தி தினப்படி செய்தியாகியிருக்கிறது. இந்திய சாஃப்ட்வேர் இஞ்சினியர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நெஞ்சைப் பிழியும் கண்ணீர்க் கதைகளும் அதில் உண்டு.

அமெரிக்க குடியுரிமைச் சட்டத்தின்படி, குடியுரிமை இல்லாதவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் அமெரிக்கக் குடிமக்களாவார்கள். எனவே, அவர்களது பெற்றோர் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படுகையில் அவர்களின் குழந்தைகளை அமெரிக்காவிலேயே விட்டுச் செல்ல வேண்டும். அது பால்குடி மறக்காத குழந்தையாக இருந்தாலும் சரி; பள்ளியில், கல்லூரியில் படிக்கிற பிள்ளைகளாக இருந்தாலும் சரி. அவர்களை அமெரிக்க அரசாங்கம் தத்தெடுத்து வளர்க்கும். ஏறக்குறைய அனாதைப் பிள்ளைகள் போல. அதன்பிறகு அந்தக் குழந்தைகள் பதினெட்டு வயதாகும் வரைக்கும் அவர்களின் பெற்றோர்களைப் பார்க்க முடியாது. அதேபோல அவர்களின் பெற்றோர்களும் அந்தக் குழந்தைகளைப் பார்க்க இயலாது.

இந்தச் சூழ்நிலையை ஒரு நிமிடம் நீங்கள் யோசித்துப் பார்த்தால் இதிலுள்ள துயரம் உங்களுக்குப் புரியும். ஒரு தகப்பனோ அல்லது தாயோ தங்களின் உயிரைப் பணயம் வைத்து தண்ணீரில்லாத அரிசோனாப் பாலைவனத்தின் வழியே நடந்து வந்து, திருடர்களிடமிருந்தும், கொலைகார விஜிலாண்டேக்களிடமும் தப்பி, கடின உழைப்பு செய்து பொருளீட்டுவது அவர்களின் குழந்தைகளுக்காகத்தான். அந்தக் குழந்தைகளை, சட்ட காரணிகளைக் காட்டி, அரசாங்கம் பிடுங்கிக் கொள்கையில் அந்தப் பெற்றோர்களின் துயரம் எண்ணிப்பார்க்க இயலாத ஒன்று. அந்தக் குழந்தைகளின் நிலையோ இன்னமும் துயரமானது.

சமீபத்தில் நாடுகடத்தப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளை அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் ஏறக்குறைய கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் துயரக் காட்சிகளைப் பார்க்க நேரிட்டது. அந்தப் பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களுக்காக ஏங்கி அழும் அழுகை ஒலியை இணையத்தில் யாரோ வெளியிட்டிருந்தார்கள். மனதைப் பிசையும் ஓலம் அது.

மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது. என்ன விதமான உலகம் இது? பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை வலுக்கட்டாயமாகப் பிடுங்குவதனைப் போன்றதொரு துயரம் உலகில் உண்டா? சட்டங்களுக்கு இரக்கமில்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதப்பண்பு அதனினும் மேலானதல்லவா? அவர்களின் பெற்றோர்கள் செய்த தவற்றுக்கு பிள்ளைகளை எப்படி பொறுப்பாக்க முடியும்?

தயவுசெய்து அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுங்கள்

பள பளக்கும் கட்டிடங்களும், கார்களும், சாலைகளும், டெக்னாலஜியும், சிற்றின்பங்களும் நிறைந்து கிடக்கும் அமெரிக்க வாழ்க்கை கரடுமுரடானது என்பதினைச் சுட்டிக் காட்டத்தான் இதனை நான் எழுதுகிறேன். முறைப்படி உங்களுக்குக் குடியுரிமை கிட்டாவிட்டால் அல்லது விசா காலம் முடிந்துவிட்டால் தயவுசெய்து அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுங்கள் என சக இந்தியர்களுக்கு எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இது நல்லெண்ணத்துடன் செய்யப்படுகிற எச்சரிக்கை. கேட்பதும், கேட்காததும் உங்களின் விருப்பம்

Thanks for written by

Related posts

%d bloggers like this: