ஆளுமைகள்

தற்கொலை எண்ணத்தை மாற்ற அறிவுரை சொல்லுங்கள்

நோய்கள் என்றால் என்ன?

தற்கொலை எண்ணத்தை மாற்ற அறிவுரை சொல்லுங்கள்

ஒரு தோழியின் தற்கொலை எண்ணத்தை மாற்ற அறிவுரை சொல்லுங்கள் என்ற என் பதிவுக்கு எத்தனை ஈடுபாட்டுடன் கூடிய இதயப்பூர்வமான அன்பில் தோய்த்த வார்த்தைகளை அள்ளி வழங்கியிருக்கிறீர்கள்!

நெகிழ்ந்தது நான் மட்டுமல்ல அந்தத் தோழியும்தான்.

உங்கள் அனைவரின் வலிமையான அக்கறையான ஆலோசனைகள் மனதிற்கு தெம்பூட்டியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்

ஒரு மன நல மருத்துவரின் கவுன்சிலிங்கிற்கு அவர் இப்போது சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதற்கான ஏற்பாட்டையும் செய்துவிட்டேன்.

தவிரவும் எப்போதுமே நம்பிக்கையும் உற்சாகமும் சுமக்கும் உங்களில் சிலரின் தோழமை அவருக்குத் தேவையென்று உணர்கிறேன். சிலரை சிபாரிசு செய்திருக்கிறேன்

அவர் அவர்களுக்கு நட்பு அழைப்பு அனுப்பி உள் பெட்டியில் உரையாடக் கூடும்.

இந்தச் சமூகத்துக்கு அவர் ஏற்கெனவே செய்துவரும் அற்புதமான சேவை சொந்தக் காரணங்களால் தடைப்பட்டுவிடக் கூடாதே என்பதும் என் கூடுதல் கவனத்திற்கான காரணம். அவர் யார், அவருக்கு எதனால் இந்த எண்ணம் என்பதை பொது வெளியில் வெளிப்படுத்த இயலாத சூழ்நிலை

முகநூல் வெறும் பொழுதுபோக்கு ஸ்தலம் அல்ல என்று நம்புபவன் நான். என் நம்பிக்கை உங்களால் இன்று மீண்டும் அடிக்கோடிடப்பட்டிருக்கிறது .

முகம் தெரியாத, சந்தித்தேயிராத ஒரு தோழிக்காக எத்தனைத் துடிப்புடன் மனிதநேயத்துடன் உங்கள் நேரம் ஒதுக்கி விரிவாகப் பேசியிருக்கிறீர்கள்.

இந்த உலகம் அழகானது, மனிதர்கள் சிறப்பானவர்கள் என்கிற நேர்மறை எண்ணத்தை வலுப்படுத்தும் தருணமிது.

உங்கள் ஆலோசனைகள் யாவும் இதேப் போன்ற விரக்தி மனநிலையில் இருக்கும் பலருக்கும் உதவும் என்பதால் சிறந்த ஆலோசனைகளைத் தொகுத்து அவரவர் பெயர்களோடு ஒரு வார இதழில் கட்டுரையாக்கவிருக்கிறேன். வெளியாகும்போது தகவல் தெரிவிக்கிறேன்.

ஒரு வருத்தமான கவலையளிக்கும் செய்தி என்னவென்றால்.. இன்று என் உள் பெட்டிக்கு வந்து பேசிய பலர் (குறிப்பாக பெண்கள்!) தானும் அதே மனநிலையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

ஆணோ, பெண்ணோ.. ஒருவர் இந்த மாதிரி வாழ்வின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதற்குக் காரணமாக இருக்கும் எவரும் வெட்கித் தலை குனிய வேண்டும்.

உயிரைக் கொல்லும் செயலைவிட கொடூரமானது மனதைக் கொலை செய்வதுதான்

Comments

0 comments

Related posts

இந்தியாவிற்கு சுதந்திரமே வேண்டாம்மென்ற பெரியார்

admin

இஸ்லாமிய இளைஞர்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்

admin

கோவில் கருவறையில் லீலையில் ஈடுபட்ட அர்ச்சகர்

admin
%d bloggers like this: