தெற்கு பார்த்த வீடு வாஸ்து தலைவாசல்கள்

ற்போது எளிமையான பட்ஜெட் கொண்ட வீடுகள் முதல் மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட பல அடுக்கு மாடிகள் கொண்ட குடியிருப்புகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் வாஸ்து சாஸ்திர நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்படி அமைக்கப்பட்டு வருவதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர்
ஒரு வீட்டில் குடியேறும் முன்னர் அல்லது வீடு, மனை வாங்குவதற்கு முன்னர் வாஸ்து சாஸ்திர ஆலோசனைகளின்படி செயல்படுவதும் பலரது வழக்கமாக இருந்து வருகிறது

தெற்கு பார்த்த வீடு தலைவாசல்கள்

ஒரு குடியிருப்பு அல்லது வீட்டுக்கு நான்கு திசைகளில் ஒன்று அல்லது இரண்டு வாசல்கள் இருக்கலாம் என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்
நான்கு திசைகளில் தெற்கு திசை தலைவாசல் அமைக்கப்பட்ட வீடுகளை பலரும் விரும்புவதில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது

அதிர்ஷ்ட தலைவாசல் வாஸ்து

பொதுவாக, தலைவாசல் கிழக்கு அல்லது வடக்கில் இருப்பதையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.
அத்தகைய வீடுகள் அதிர்ஷ்டத்தை அளிக்கும்ராசியான வீடுகள் என்று பலருக்கும் நம்பிக்கை இருந்து வருகிறது
மேற்கு திசையைக்கூட ஒரு சிலர் எற்றுக்கொள்வதுண்டு. ஆனால், தெற்கு திசை வாசல் என்றால் வாடகைக்கு குடியேறுவதையும் பலர் தவிர்த்து விடுகின்றனர்.
எமதர்மனுக்கு உரியது
தெற்கு திசை தலைவாசல் வீட்டை பலரும் விரும்பாமல் இருப்பதற்கு காரணம் அஷ்ட திக்கு பாலகர்களில் அந்த திசை எமதர்மனுக்கு உரியதாக அமைந்துள்ளதே என்று சொல்லப்படுகிறது
அந்த காரணத்தினால் தெற்கு திசை நோக்கி அமைக்கப்பட்ட வீடுகள் அதிர்ஷ்டம் அளிப்பதில்லை என்றும் பலர் கருதுகிறார்கள்
ஆனால், எந்த திசை வீடாக இருந்தாலும் வாஸ்து சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்டிருந்தால் அது பல நன்மைகளை அளிக்கும் என்பதை வாஸ்து நிபுணர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்
தெற்கு திசை தலைவாசல் அமைந்த வீடுகளுக்கு உகந்த அமைப்புகள் பற்றி வாஸ்து நிபுணர்கள் தெரிவிப்பதாவது

தென்திசை தலைவாசல் கொண்ட வீடு

1. தென்திசை தலைவாசல் கொண்ட வீடுகளின் சமையலறை அக்னி பாகமான தென்கிழக்கு திசையில் அமைக்க இயலாத நிலையில், வாயு பாகமான வடமேற்கு திசையில், வடக்கு நோக்கி நின்று சமையல் செய்வதுபோல கட்டமைக்கலாம்.
2. நன்மைகளை பெறுவதற்கு பிரதான படுக்கை அறையை தென்மேற்கு திசையில் அமைக்க வேண்டும். அதன் மூலம் மனதில் அமைதி நிலவும் என்று சொல்லப்பட்டுள்ளது.
3. வீட்டின் தெற்கு பக்க சுவர்கள், வடக்கு பக்க சுவர்களைவிட உயரமாகவும், அகலமாகவும் அமைக்கப்படவேண்டும்.
4. ஆழ்குழாய் குணறு, நிலத்தடி நீர்த்தொட்டி, செப்டிக் டேங்க் ஆகியவை வீட்டிற்கு வடக்கு அல்லது கிழக்கு திசைகளில் அமைந்திருக்கவேண்டும். அவை, தெற்கு அல்லது மேற்கு பகுதிகளில் இருப்பது நிச்சயம் நன்மைகளை தராது
5. பெரிதாக வளரக்கூடிய மரங்களை வடகிழக்கு பகுதியில் நட்டு வளர்ப்பது கூடாது. குறிப்பாக, மாடிப்படிகளை வடகிழக்கு பகுதியில் அமைப்பது தவறானதாகும்.
6. ஜோதிட ரீதியாக தெற்கு தலைவாசல் கொண்ட வீடுகள் அனைவருக்கும் பொருத்தமானதாக இருப்பதில்லை. ரி‌ஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு தெற்கு தலைவாசல் வீடு உகந்தது என்று சொல்லப்பட்டுள்ளது.
7. தெற்கு வாசல் வீட்டில் வசிப்பவர்கள், மேற்கு வாசல் கொண்ட வீடு அல்லது மனைகளை வாங்குவது கூடாது. மேலும், வீட்டை ஒட்டியவாறு அமைந்துள்ள தென்மேற்கு அல்லது மேற்கில் உள்ள வீடு அல்லது மனைகளை வாங்கி இணைத்துக்கொள்வதும் கூடாது

 தெற்கு பார்த்த வீடு வாஸ்து தலைவாசல்கள்
தெற்கு பார்த்த வீடு வாஸ்து தலைவாசல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *