நாடார் சமுதாயம்-Nadar Caste History

நாடார் சமுதாயம் | நாடார் தொழில் | நாடார் பெண்கள்

-தமிழ்நாட்டில் தன்னம்பிக்கையாலும், தன் உழைப்பாலும், ஒற்றுமையாலும் உயர்ந்த ஒரு சமுதாயம் எனில் அது நாடார் சமுதாயம் ,
இந்தச் சமுதாயத்தின் இன்றைய நிலை ஓர் இரவில் உருவானதல்ல. நூறாண்டுகளுக்கு மேற்பட்ட அடிமை சங்கிலியை உடைத்து அவர்கள் கடந்து வந்த ரத்தச் சரித்திரம். அவர்களின் வரலாறினைக் கொஞ்சம் பார்ப்போம்

                   நாடார் சமுதாயம்
நாடார் சமுதாயம்

நாடார் என்ற சாதிப் பெயருடைய மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர்
ஆரம்பத்தில் இவர்கள் சாணர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.
சாணார்கள் பிறப்பிலே பழங்குடியினர். மேலும், சாணார் சமூகத்தவர்கள் இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக வந்தவர்கள் என்றும், இந்து சமயத்தின் உயர்ந்த நிலையில் இருந்ததேயில்லை என்றும், சிறுதெய்வ வழிபாட்டினையே பின்பற்றி வருகிறார்கள் என்றும் கூறுகிறார்.

ஒடுக்கப்பட்ட சாதிகளில் மேல்தட்டைச் சேர்ந்தவர் என்றோ, மத்திய ஜாதிகளில் கடைத் தட்டைச் சேர்ந்தவர்கள் என்றோ தான் இவர்களை வர்ணிக்க முடியும் என்கிறார் கால்டுவெல்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து (1910) இச்சமுதாயத்தினர் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறைக்கு மனுக் கொடுத்து, தங்கள் பெயரை நாடார் என மாற்றிக் கொண்டனர்.

                   நாடார் சமுதாயம்
நாடார் சமுதாயம்

ஆயினும், 2001இல் எடுக்கப்பட்ட தமிழ் நாட்டு மக்கள் தொகைப் பட்டியலில் எண் 74இன் கீழ் நாடார், சாணார், கிராமணி என்னும் மூன்று பெயர்கள் இணைத்தே காட்டப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் என உள்ளனர்.
மேலும், தமிழ் நாடு அரசு வெளியிட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் அவ்வாறே உள்ளது
ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே ஒருங்கிணைப்பு சங்கங்கள் மூலமாகத் தொழிற்பேட்டைகளை அமைத்து நாடார்கள் வணிகம் செய்துவந்தனர்

  தமிழ்நாடு மெர்கண்டைல்ஸ் வங்கி

இன்றைக்கு பல கிளைகளோடு வங்கியாகச் செயல்பட்டுவருகிற “தமிழ்நாடு மெர்கண்டைல்ஸ் பேங்க்” நாடார்களின் கூட்டு முயற்சியால் உருவான ஒன்று
சங்க அமைப்புகள்மூலம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் தொழிற் வளர்ச்சி ஆலோசனை நிறுவனங்கள், சிறு தொழிற் வளாகங்கள், தங்குமிடங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் மற்றும் சிறிய பெரிய முதலீட்டில் தொழிற் கடனுதவியோடு கூடிய வங்கிகள் எனச் சமுதாய வளர்ச்சிப் பணிகளை நாடார் இயக்கங்கள் செய்து வருகின்றன
இவர்கள் வெளிநாடுகளான இலங்கை, இலண்டன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சங்கம் அமைத்திருக்கின்றனர்
நாடார் சமுதாயம் க்கான பட முடிவு
இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் 01.11.1956 அன்று உருவாகினாலும் ஆரம்பத்தில் நாயர்கள் மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் நாடார் சமுதாயம் ஆளாக்கப்பட்டிருந்தது
பெண்களை அரை நிர்வாணமாக்கி, மிருகங்களைவிட கேவலமான நிலையில் வைத்து மகிழ்ச்சியடைந்தனர் உயர் ஜாதியினர்.
இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் 1800களில் திருவாங்கூர் சமஸ்தனத்தில் இருந்தது
தீண்டாமைத் தாண்டவத்தின் உச்சக்கட்டம். சாணார் உட்பட 18 சாதிப் பெண்கள் தமது மார்பினை மறைக்க அனுமதி கிடையாது. இந்தக் கொடுமையான வரி விதிப்பை எதிர்த்து கடுமையாகப் போராடிக் கெண்டிருந்தாள்.
திருவாங்கூர் அரசுக்கு மார்பு வரி செலுத்தவும் மறுத்து விட்டாள். பல மாதங்களாக ஆகியும் அவள் வரி கட்டவில்லை, à®¨à®¾à®Ÿà®¾à®°à¯ சமுதாயம் க்கான பட முடிவு
பல முறை அரசு கேட்டும் வரி கட்டவில்லை அதாவது மார்பை மறைக்க விரும்பும் பெண்கள் கட்ட வேண்டிய வரி இது மறைக்க விரும்பவில்லையென்றால் வரி கிடையாது
ஒரு நாள் அரசின் வரிவிதிப்பாளர் அவளைத் தேடி வீட்டுக்கே வந்து விட்டார். உனது மார்புக்கு வரி கட்டிவிட்டாயா? என்று கோபமாகக் கேட்டார். கொஞ்ச நேரம் காத்திருக்கவும் என்றாள் நாஞ்செலி. ‘சரி, … பொருளை எடுத்து வருவாள் ‘ என்பது வரி விதிப்பாளரின் எதிர்பார்ப்பு. உள்ளே சென்றவள் கையில் வாழை இலைகளை அறுக்கும் அரிவாளுடன் வெளியே வந்தாள்.

இது இருந்தால்தானே வரி கேட்பாய்?

இது இருந்தால்தானே வரி கேட்பாய்? என்றவாரே தனது இரு மார்புகளையும் வரி விதிப்பாளர் கண் எதிரிலேயே வெட்டி எறிந்தாள். அவளது இரு மார்புகளும் உடலை விட்டுப் பிரிந்தன. உயிரும் பிரிந்தது
திருவாங்கூர் சமஸ்தானத்தையே புரட்டிப் போட்டது நாஞ்செலியின் தியாகம்.
இந்தச் சூழ்நிலையில் தான் சீர்திருத்த கி.பி. 1806-ல் இம்மண்ணில் கிரித்துவ மதம் கால் பதித்தது. மதம் பரப்ப வந்த கிரித்துவ மதத்தால் இந்தத் தாழ்த்தப்பட சமூகம், குறிப்பாக நாடார் மக்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் நாகரிகத்திலும் எதிர்பாராத வண்ணம் வளர்ச்சியடைந்தனர்.
அறிவுபூர்வ வளர்ச்சியால், 1822 –ல் புலிப்புனம் இசக்கி மாடன் தண்டல்காரன், மருதூர்குறிச்சி குஞ்சுமாடன் மண்டல்காரன், ஆற்றூர் கருமன், தச்சன்விளை வேதமாணிக்கம் போன்றோர் நாடார் மக்களின் விடுதலை வேண்டி உயிர்த்தியாகம் செய்ய வேண்டியதாயிற்று,
எனினும் நாடார்களுக்கு மலையாளி மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளிலிருந்து
முழுமையான விடுதலையைப் பெற்றுத்தந்தவர் விளவங்கோட்டு வீரன் ஏ. நேசமணி ஆவார். எனவே ம.பொ. சிவஞான கிராமணியார் எண்ணுகின்றதைப் போன்று, இது தெற்கெல்லை மீட்பு போராட்டமோ,
அல்லது தமிழகத்தின் எல்லை விரிவாக்கத்திற்கான போராட்டமோ, அல்லது தமிழ் மொழியின்பால் உருவான பாசமோ அல்ல
அது மலையாளி ஆதிக்கத்திற்கு எதிராக நாடார்களால் நடத்தப்பட்ட இறுதிப் போராட்டமாகும். அப்போராட்டதை தலைமையேற்று செல்வனே நடத்தி விடுதலையை பெற்றுத் தந்தவர் மார்ஷல் எ. நேசமணி அவர்கள். இல்லா விட்டால் கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்தோடு போயிருக்கும்.

           தன்னைத் தரம் உயர்த்திக் கொண்டது எப்படி?

200 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு சமூகம், கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம்  இன்று அரசின் சலுகைக்காகத் தான் தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவன் எனக் கூக்குரல் போடாமல் பிற்பட்ட வகுப்பாகத் தன்னைத் தரம் உயர்த்திக் கொண்டது எப்படி?
தனது சமுதாயத்தின் வளர்ச்சியை நிர்ணயிப்பது பொருளாதாரம் தான் என்பதை உணர்ந்து சிறுகச் சிறுக தமக்கென ஒரு கூட்டு நிதியை உருவாக்கி அதனைத் தனது இனத்தின் வளர்ச்சிக்குச் செலவிட்டு தனக்கு அனுமதி மறுக்கப் பட்ட கோவில்களை ஒதுக்கி தமக்கெனக் கோவில்களையும், கல்வி மறுத்தவர்களின் முன்பாக தமக்கெனக் கல்வி நிறுனங்களையும் உருவாக்கி இன்று தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இந்தச் சமுதாயதின் கல்விப் பங்கு மகத்தானது
நாடார் சமுதாயம் க்கான பட முடிவுமீண்டும் சொல்கிறேன் இந்தச் சாதியின் மீது சில பல குற்றச் சாட்டுகள் இருந்தாலும் தன்து சமுதாய வளர்ச்சிக்காக இவர்களின் கடின உழைப்பு, ஒற்றுமை, தன்னம்பிக்கை வியப்புக்குரியது
தாழ்த்தப் பட்டவன், பட்டியல் இனம் என அரசால் அடையாளப் படுத்தப் படுபவன் அரசு கொடுக்கும் சலுகைக்காகத் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாமல் தாழ்வுமனப்பான்மையை விட்டு வெளியே வந்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கு நாடார் சமுதாயம் ஒரு எடுத்துக்காட்டு.
#குறிப்பு: நான் நாடார் சமுதாயம் அல்ல.
–   Written & Thanks தங்கப்பாண்டியன்

மேலே மேலாடை இல்லாத படங்கள் உங்கள் பார்வைக்காக இருக்கிறது, அது எந்தவிதத்திலும் நாடார்களை குறைத்து மதிப்பிடப்போறது இல்லை அந்த புகைப்படங்களின் பின்பு அவர்கள் உரிமைக்காக போராடிய ரத்தம் சரித்திரம் இருக்கிறது 

 
Need to sell your Property 

Leave a Reply