பணக்கார மதம்தமிழ் ஆன்மிகம் 

உலகிலேயே முதல் பணக்கார மதம் யூதமதம்

உலகிலேயே முதல் பணக்கார மதம் யூதமதம்

, இரண்டாவது பணக்கார மதம் இந்துமதம் , மூன்றாவது பணக்கார மதம் பிரஸ்பைடேரியன் கிறுஸ்தவம்

உலகிலுள்ள யூத சைனகோக்ஸ் எத்தனையுள்ளது என்பது இதுவரை சரியாக எண்ணிக்கைகளுக்குட்படவில்லை. அமெரிக்காவில் 4,000 யூத கோவில்களும், இஸ்ரேலில் 10,000மும், ஐரோப்பா- ஆசியா நாடுகளில் மொத்தம் 3,500 கோவில்கள் மட்டுமே கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது

ஜெருசலமிலுள்ள பெல்ஸ் கிரேட் யூதகோவில் தான் உலகிலேயே பெரிய கோவில்.

இந்தியாவில் வாழும் யூதர்கள் எண்ணிக்கை 4,500, இதில் 50 பேர் பக்தாதி யூதர்கள், மற்றையோர் பனூ இஸ்ராயில். கொச்சியில் இவர்களை அதிகம் காணலாம்

உலகின் மிக பழமையான இந்து கோவில்

உலகின் மிக பழமையான இந்து கோவில் பிகாரின், கைமூர் மாவட்டத்தில் உள்ள முன்டேஸ்வரி சிவன்-சக்தி கோவில் ஆகும் . கிபி.625 ல் அது கட்டப்பட்டு தற்போதும் பயன்பாட்டில் உள்ளதாக இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோபுரங்கள் இல்லாத நகாரா மாதிரி வடிவத்தில் அக்கோவில் உள்ளது.

இந்தியாவில் மொத்தம் 20 லட்சம் இந்து கோவில்கள் உள்ளன, அவற்றில் கேரளாவில் மட்டும் சுமார் 28,000 பகவதி கோவில்கள் அடங்கும், கேரள தேவசம் போர்டுக்கு கீழாக 1,800 கோவில்கள் இயங்குகின்றன. ஆந்திரா,தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா,கர்நாடகத்தில் மட்டும் 10 லட்சத்தி 8 ஆயிரம் கோவில்கள் உள்ளன.

இந்தியாவில் விஷ்ணுவிற்கு தான் அதிக கோவில்கள் காட்டப்பட்டுள்ளது. திருப்பதி கோவில் தினமும் 1 லட்சம் பார்வையாளர்களை பெற்ற பிரசித்தமிக்க கோவில். உலகெங்குமுள்ள இந்து மக்களால் விரும்பி பெறப்படும் பிரசாதம் திருப்பதி லட்டு, இரண்டாவது பழநி பஞ்சாமிர்தம்.

உலகின் பணக்கார புனித ஸ்தலம் கேரளாவின் பத்மநாபசுவாமி கோவில், அதன் மதிப்பு 1.2 லட்சம் கோடியாகும்… அதுபோக வெளிவராத பொக்கிஷங்களின் மதிப்பு 50,000 ஆயிரம் கோடி . உலகில் அதிகம் மக்கள் வந்துபோன ஒரு இடம்.

உலகில் 3 கோடியே 70 லட்சம் கிறுஸ்தவ தேவாலயங்கள் உள்ளது.

உலகில் சுமார் 3 கோடியே 8.5 லட்சம் பள்ளிவாசல்கள் உள்ளது , இதில் 8 லட்சம் பள்ளிவாசல்கள் இந்தோனேசிய நாட்டிலும், 4 லட்சம் பள்ளிவாசல்கள் இந்தியாவிலும் , 2.5 லட்சம் பள்ளிவாசல்கள் பங்களாதேஷிலும் உள்ளது.

நாட்டில் ஒரேயொரு பள்ளிவாசலை உடைய நாடு வடகொரியா. பியூங்யாங்கில் உள்ள அர்’ரஹ்மான் பள்ளிவாசல்

பள்ளிவாசலே இல்லாத நாடு வாடிகன்

பள்ளிவாசலுக்கு அனுமதியளிக்காத நாடு ஸ்லோவாக்கியா. ஸ்லோவிக்கியாவில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு அனுமதியில்லை. ஆனாலும் அங்கே இஸ்லாமிய மக்கள் கொஞ்சமாக இருக்கிறார்கள்

1,500 முஸ்லிம்களையுடைய எஸ்டோனியாவில் பள்ளிவாசல் கிடையாது, தனியார் வீடுகளில் தொழுகை நடக்கும்.

இத்தாலியின் சான்மரினோ, ஐரோப்பாவின் மொனாக்கோ, தென்னமரிக்காவின் உருகுவே மற்றும் ஆப்பிரிக்காவின் சா’தோம் மற்றும் பிரின்சிபியில் பள்ளிவாசல்கள் கிடையாது

நிறைய கரிபியன் மற்றும் பசிபிக் தீவிகளில் முஸ்லிம்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் இருந்தும் பள்ளிவாசல்களே கிடையாது.

உலகின் மிகச்சிறிய பள்ளிவாசல் துருக்கியின் சாவேஸ் பகுதியிலும், வட சஹாராவின் சஹ்ராவியாவிலும், இந்தியாவில் போபாலிலும் உள்ளது. மிகச்சிறிய வெறும் 10 சதுர அடி பள்ளிவாசல் ஐதராபாதில் உள்ளது.

ஆசியாவின் பெரிய பள்ளிவாசல் இந்தியாவின் மபி மாநிலம் போபாலில் உள்ள தாஜ்’ அல் – மஜாஸித் ஆகும்.

உலகின் பெரிய பள்ளிவாசல் மக்காவின் மஸ்ஜித் அல்’ ஹரம் ஆகும்.

இது அனைத்தும் போக உலகில் நூற்றுக்கணக்கான ரகசிய மதங்களும் அதன் வழிபாட்டாளர்களும் உண்டு.

Rosy S Nasrath

Related posts

%d bloggers like this: