1-800-999-9999 — hi@loremipsum.com

பத்திரம் பதிவு செய்ய போராட்டம் தொடரும்

 

பத்திரம் பதிவு செய்ய போராட்டம் தொடரும்

பத்திரம் பதிவு செய்ய போராட்டம் தொடரும்

AIREWA வின் முக்கிய அறிவிப்பு:

(அரசு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. இனிவரும் காலகட்டத்தில் பட்டா மனைகளையும், பட்டா மனைகளில் உள்ள வீடுகளையும் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்று வாட்ஸ்அப் மற்றும் முகநூல்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.)

விளை நிலத்தை வீட்டு மனையாகப் பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை வழக்கு இன்று 21.10.2016 11.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் பத்திரப்பதிவு துறை உயரதிகாரிகள், C.M.D.A மற்றும் D.T.C.P உயரதிகாரிகள் தங்களின் துறை சார்ந்த விளக்கங்களைச் சரியான முறையில் நீதியரசரிடம் முறையாகச் சமர்ப்பிக்கவில்லை. அரசு வழக்கறிஞர் திறமையான முறையில் வாதிடவும் இல்லை. வழக்கு சம்மந்தமாகத் தேவைப்படும் கோப்புகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தினாலும், ஆவணங்களைச் சமர்ப்பிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் இரண்டு வாரக் காலம் தேவை என்றதால் தான் இந்த வழக்கு வரும் 16.11.2016 அன்று விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

தமிழக அரசு பட்டா நிலங்களைப் பத்திரப்பதிவு செய்யும் வரை நம் போராட்டம் தொடரும்….

மேலும் நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் அகில இந்திய தலைவர் திரு.வியாசை K.கிருஷ்ணா அவர்களும் மற்றும் அகில இந்திய லேஅவுட் புரோமோட்டர்ஸ் மற்றும் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் தேசிய தலைவருமான திரு. அன்னை S.சரவணன் அவர்களின் தலைமையில் 20.09.2016 அன்று தமிழக அரசை வலியுறுத்தி “கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும்”, அதைத் தொடர்ந்து 04.10.2016 அன்று அனைத்து கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த மாபெரும் “உண்ணாவிரத போராட்டமும்” கடந்த 18.10.2016 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணிக்குச் சென்னை பாரிஸ் சிங்காரவேலன் மாளிகை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கருப்பு துணி அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது போல மீண்டும் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதற்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரியல் எஸ்டேட் சங்கங்களும் நமது AIREWA கூட்டமைப்புடன் இணைந்து ஒற்றுமையாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளமையால் இதனை ஆதரித்துப் பட்டா நிலங்களை வைத்துள்ள அனைத்து பொதுமக்களும், சாதிக்க துடிக்கும் அனைத்து சிறிய மற்றும் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டிட தொழிலாளர்களும், பத்திரப்பதிவு செய்யும் எழுத்தாளர்களும், அதைச் சார்ந்துள்ள தொழிலாளர்களும், மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலைச் சார்ந்த அனைத்து வகையான தொழிலாளர்களும் ஒன்று திரண்டி சென்னை நோக்கிப் பயணம் மேற்கொள்ளுங்கள்.

எங்கள் நிலங்களை நாங்கள் விற்பதற்கு ஏன் நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் என்றும், எங்களின் இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏன் மற்றவர்களிடம் நாங்கள் கடன் பெற வேண்டும்.

என்ற கருத்தை இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம்மூலம் தமிழக அரசிற்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் நாம் தான் தெரியப்படுத்தி ஒரு நல்ல முடிவு காண வேண்டும்.

எனவே அனைவரும் வாரீர்… வாரீர். வாரீர்… மேலும்

வெளிமாவட்டங்களில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் நண்பர்கள் அனைவரும் தபால் மூலம் போராட்டம் நடத்த விரும்பினால் அனுப்புநர்: இடத்தில தங்களின் பெயர், ஊர், மாவட்டம் அதில் குறிப்பிட்டு பெறுநர்: இடத்தில் கீழ்வரும் அதிகாரிகளுக்குப் பதிவு தபால் மூலம் அனுப்பும் போராட்டம் வாயிலாகக் கீழே அட்டவணைப்படுத்தியுள்ள கோரிக்கைகளைச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பும்படி AIREWA கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். நமது தொழிலைக் காப்போம்… தொழிலாளர்களின் நலனைக் காப்போம்…

1. மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை-104

2. உயர்திரு பத்திரப்பதிவுத்துறை தலைவர் தலைமை அலுவலகம், சாந்தோம் சாலை, சென்னை -04

3. உயர்திரு தலைமை உறுப்பினர் அவர்கள் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைமை அலுவலகம் சென்னை, எழும்பூர் – 08 மேலும் தகவல் அறிய கீழ்கண்ட தொலைபேசிக்குத் தொடர்புகொள்ளவும் அல்லது AIREWA கூட்டமைப்பின் மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. (ஈமெயில் : airewa322@gmail.com)

கோரிக்கைகள் பத்திரம் பதிவு செய்யப் போராட்டம் தொடரும்

1.தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் பல தலைமுறைகளாக, பட்டா பெற்று வீடுகட்டிக்கொண்டு மனைவரி, வீட்டுவரி, குடிநீர் வடிகால் வரி, மின் இணைப்பு பெற்று அனுபவித்து வரும் சொத்துக்களை பத்திர பதிவு செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. தமிழகத்தில் பட்டா மனைகளை விற்பனையாளார்களிடம் கிரையம் பெற்று, தமிழக அரசிற்கு செலுத்த வேண்டிய முத்திரை கட்டணத்தையும், பதிவு கட்டணத்தையும் செலுத்தி அனுபவித்து வரும் வீட்டுமனைகளை விற்பனை செய்யவோ, செட்டில்மெண்ட் செய்யவோ, அடமானம் வைக்கவோ பத்திரம் பதிவு செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. தமிழகத்தில் உள்ள பட்டா மனைகளை லே-அவுட் செய்து, பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்று, பதிவு அலுவலகத்தில் சதுரடிக்கு பதிவாளரால் விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்து வந்த மனைகளில் பத்திரம் பதிவு செய்தது போக மீதமுள்ள பதிவு செய்யாத மீதி மனைகளையும் பத்திரம் பதிவு செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. தமிழகத்தில் உள்ள சட்டப்படியான விவசாய நிலங்களைத் தவிர மற்ற நிலங்களை, வீட்டுமனைகளாகப் பிரித்து எளிய முறையில் அரசு அங்கீகாரம், C.M.D.A, D.T.C.P, மற்றும் பஞ்சாயத்து அங்கீகாரம் அளித்துப் பத்திரம் பதிவு செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பத்திரம் பதிவு செய்யப் போராட்டம் தொடரும்

இப்படிக்கு
அகில இந்திய ஊடக பிரிவுச் செயலாளர்
பெரம்பூர் ஸ்ரீதர்

%d bloggers like this: