நில உரிமை சட்டம்

பாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது

பாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது

பாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது

பாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது சட்ட ஆலோசனைகள் பெற குறிப்புகள் என்ன?

பாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது சட்ட ஆலோசனைகள் பெற

  1. சரிசமமாக பிரித்து கொள்கிறோம் என்பது பல பங்குகளாக பிரித்து கொண்டு, ஒருவருக்கு மட்டும் அதில் மதிப்பு குறைவானதாக சொத்து கிடைத்தால், அந்த பாகப் பிரிவினையை எதிர்த்து கோர்ட்க்கு சென்று அந்த பாகப்பிரிவினை செல்லாது என்றும் நியாயமாக பிரிக்கவில்லை என்று டிகிரி வாங்கலாம்.

2. எல்லோருக்கும் சமமாக பங்கு பிரிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஒருவருக்கு கூட, ஒருவருக்கு குறைய இருக்கலாம் ஆனால் அதற்கு சரியான விளக்கம் பாகப்பிரிவினை பத்திரத்தில் இருக்க வேண்டும்.

3. பிரிக்க முடிந்த சொத்தை சுலபமாக பாகம் பிரித்துக் கொள்ளலாம். பிரிக்க முடியாததை பிரித்தால், மிக சிறிய பங்காகி விடும் என்று கருதினால் அதனை, (NOT DIVISIBLE BY METES AND BOUNDS) அதாவது, நீள அகலத்துடன் பிரிக்க முடியாத சொத்து என்று சொல்லபடுகிறது.

4. பிரிக்க முடியாத சொத்தை யாராவது ஒருவர் யாருக்காவது விட்டு கொடுத்துவிட்டு அதற்கேற்ற பணத்தை பெற்று கொண்டு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்து சொத்தில் இருந்து வெளியேறலாம். (இப்பொழுது பாகப்பிரிவினை பத்திரம் தேவையில்லை.)

5. பிரிக்க முடியாத சொத்தை, யாரும் யாருக்கும் விட்டு கொடுக்க மனம் இல்லை, பகை முரண்களில் சகோதர சகோதரிகள் சிக்கிக் கொண்டு அனைவரும் சொத்து எனக்கு வேண்டும் என்று சொன்னால் அந்த சொத்தை பொது ஏலத்திற்கு தான் கொண்டு வர வேண்டும். அதில் வரும் தொகையை அனைவரும் பிரித்து கொள்ள வேண்டும்.

6. பாகம் பிரிக்கும் சொத்துக்களில் இருக்கும் கடன்களை, ஒருவர் மட்டும் மீட்டு இருந்தால், அதற்கான பணத்தை பெற அவருக்கு உரிமை உண்டு.

7. மேற்படி சொத்துக்களில் மற்ற பாகஸ்தர்களின் சம்மதத்தோடு அதில் ஒரு மாடியோ, சுற்று சுவரோ கட்டி இருந்தால் அதற்கான பணத்தை பெறலாம்.

8. மற்ற பாகஸ்தரர்கள் முதலில் ஒப்புக்கொண்டு விட்டு பிறகு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், அதற்கு பங்கு கேட்பதும் முடியாத காரியம்.

9. பாகப்பிரிவினையில் எப்போது மூத்தவர்கள் தான் விட்டு கொடுக்க வேண்டும். இளையவர்களும் விட்டுக் கொடுக்கலாம். ஆனால் நம் முன்னோர் மரபு “வலுத்தவர்கள் விட்டு கொடுக்க வேண்டும் என்பதே”! அதனால் வயதில் பெரியவர்களையே விட்டு கொடுக்க சொல்லி இருக்கின்றனர்.

10. சொத்தை பங்கிடும் போது கிழமேலாகவோ அல்லது தென் வடக்காகவோ பங்கிடலாம். அவ்வாறு பங்கிடும் போது கிழமேலிருந்தால் கிழக்கு ஓரத்தின் முதல் பங்கு கடைசி குட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

11. அதற்கு அடுத்தவர் அதற்கு அடுத்த பங்கு, இப்படியாக மேற்கு கடைசி பங்கு மூத்தவர் எடுத்து கொள்ளலாம். இதேபோல் வடக்கிலிருந்து பிரிக்கும் போது வடக்கின் முதல் பாகம் கடைசி தம்பிக்கும், தெற்கின் இறுதி பங்கு மூத்தவர்க்கும் கிடைக்கும்.

12. இளையவன் அதிக சலுகை பெற்றால் எதிர்காலத்தில் மூத்தவர்கள் வயதாகும் போது இளையவன் தோள் கொடுப்பான் என்று இந்த மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.

இது போன்ற சட்ட ஆலோசனைகள் பெற

வானமே வீழினும் நீதி நிலவுக
தளத்தினை ஃபாலோ பண்ணவும் 🙏🏻

சொத்துக்கள் வாங்கும் போது யார் யாரிடம் ஆலோசனைகள் ?கருத்துகளை பெற வேண்டும்?
பெரும்பாலும், மனைகளோ! சொத்துக்களோ வாங்கும் போது நெருங்கிய நண்பரை நம்பி இருந்துவிட்டேன், யாரிடமும் எந்தவிதமான கருத்துக்களையும் பெறவில்லை.

எனக்கு ரியல் எஸ்டேட்டை பற்றி நிலத்தை பற்றி ஆழமாக தெரியாது.அதனால் அந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட் சொன்னதை கேட்டேன், என்று பலர் சொல்வதை கேட்டு இருக்கிறேன்.

மேற்படி செயல்கள் முற்றிலும் தவறானது நிறைய பேருடைய கருத்துக்களை கேட்டபிறகு முடிவு நீங்கள் எடுத்தாக இருக்க்க வேண்டும். சொத்தில் தவறுகள் இருந்தாலும் நீங்கள் தெரிந்தே வாங்கி இருக்க வேண்டுமே தவிர தவறு இருப்பது தெரியாமல் வாங்க கூடாது என்ற முடிவை எடுங்கள்!

சொத்துக்களை நீங்கள் வாங்கி இருக்க வேண்டுமே தவிர சொத்துக்கள் உங்களுக்கு விற்கப்பட்டு இருக்க கூடாது என்ற உண்மையை உணர்ந்து செயல்படவேண்டும்.அதற்கு கீழ்கண்ட நபர்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பெறுதல் வேண்டும்.

கிராம நிர்வாக அதிகாரியிடம் பேற வேண்டிய கருத்துக்கள்:

ஒரு இடம் வாங்க போகும் போது அந்த கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று மேற்படி வாங்க போகும் சொத்து விவரத்தை சொல்லி சொத்தில் நில உச்ச வரம்பு,நகர நில உச்ச வரம்பு, அரசு நில எடுப்பு, அரசு ஜப்தி இருக்கிறதா! கிராம கணக்கு பயிர் பதிவேட்டில் வேறு யார் பெயராவது இருக்கிறதா? அ. பதிவேட்டில் உள்ள பெயரோடு நாம் வாங்க போகும் சொத்தின் உரிமையாளருக்கு தொடர் இணைப்பு (லிங்க்) சரியாக இருக்கிறதா? அரசு உத்தரவுகள் எதவாது மேற்படி பகுதியில் இருக்கிறதா? என்று கிராம நிர்வாக அதிகாரியிடம் கருத்துக்களை பெற வேண்டும்.

சர்வேயரிடம் பெற வேண்டிய கருத்துக்கள்:

இடம் கூட்டுப்பட்டாவில் இருந்தால் பட்டாவை உட்பிரிவு செய்யவும், தனிபட்டா பெறவும், ஏதாவது சிக்கல்கள் இருக்கிறதா? இடம், உருவ பிழை, அளவு பிழை, உபரி நிலம் என ஏதாவது சிக்கல்கள் இருக்கிறதா என்று கருத்துக்களை பெற வேண்டும்.

வழக்கறிஞரிடம் பெற வேண்டிய கருத்துக்கள்:

இடத்தின் ஆவணங்களை கொடுத்து ஆவணங்களில் சட்ட குழப்பங்கள் இருக்கிறதா? ஒரு ஆவணத்துக்கும் இன்னொரு ஆவணத்துக்கும் சொத்து இறங்குவதில் ஏதாவது தடைகள் இருக்கிறதா? என்று கேட்க வேண்டும், உயில், தானம், பாக பிரிவினை பவர் போன்ற பத்திரங்கள் இருந்தால் அதிக சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வழக்கறி்ஞரின் கருத்துக்களை பெற வேண்டும்.

சார்பதிவாளரிடம் பெற வேண்டிய கருத்துக்கள்

வாங்க போகும் சொத்து இருக்கிற சார்பதிவகம் சென்று நிலத்தின் / கட்டிடத்தில் அரசு வழிகாட்டி மதிப்பு! முன் பத்திரங்கள் பிரிவு 47caன் படி முத்திரைதாள்கள் நிலுவையில் இருக்கிறதா! அந்த மேற்படி பகுதிகளில் பத்திர பதிவில் ஏதாவது தடை இருக்கிறதா என்று கருத்துக்கள் பெற வேண்டும்.

அங்கீகார அலுவலகம்

CMDA, DTCP, LPA போன்ற அங்கீகார அமைப்புகளின் அலுவலகத்திற்கு சென்று மனையின்/ கட்டிடத்தின் அங்கீகாரத்தின் மெய் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டிடம் பெற வேண்டிய கருத்துக்கள்:

அந்த பகுதியில் என்ன விலைக்கு இறுதியாக இடம் முடிந்து இருக்கிறது. இதற்கு முன் வாங்க போகும் சொத்துக்களை யாராவது வாங்க முயன்றார்களா? சொத்து விற்பவர் நில வியாபாரியா? சம்சாரியா? முதலீட்டாளாரா? என்று விசாரித்தல் வேண்டும்.

அக்கம் பக்கத்தினர் பெற வேண்டிய கருத்துக்கள்:

சொத்து இருக்கும் இடத்தில் உள்ள அக்கம் பக்கத்தினர் சொத்து விற்பவர் வீட்டுக்கு அருகில் அக்கம் பக்கத்துகாரரிடம் சொத்து விற்பவருக்கு எத்தனை வாரிசுகள் சின்ன வயதிலேயே காணாமல் போன, அல்லது தொலைந்து போனவர்கள் இருக்கிறார்களா? பெண் வாரிசுகள் யாரேனும், வீட்டுக்கு பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தாரருடன் தொடர்பில் இல்லாமல் தொலை தூரத்தில் இருக்கிறார்களா? சொத்து விற்பவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள்! முறையற்று பிறந்த குழந்தைகள் இருக்கிறர்களா? என்பன போன்ற கருத்துகளை பெற வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்புரைகள் பற்றிய கருத்துகள்:

மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் வரையறுக்கப்பட்ட விஷயங்கள் ஆகும். ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரை இன்னும் முடிவு கிடைக்காத சிக்கல்கள் சட்டகுழப்பங்கள் பல இருக்கின்றன.அவற்றில் பல தீர்ப்புரைகள் வந்து இருக்கிறது.இன்னும் பல விஷயங்களுக்கு தீர்ப்Support Signsபுகள் உச்சநீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது.மேற்படி அதிக சட்டசிக்கல்கள் வாங்கபோகும் சொத்துக்களில் இருந்தால் மேற்படி நீதீமன்ற தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு சொத்துக்களை வாங்க வேண்டும்.

குறிப்பு:
அன்பு வாசகர்களுக்கு !

உங்கள் ஊர்களில் மனைகள், நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி,வீடீயோகால்,மெயில் மூலமான ஆலோசனைகள் எத்தனை முறை என்றாலும் முற்றிலும் இலவசம்!!

சைட்டை பார்வையிடுவதும் ,நிறைய ஆவணங்களை படித்து தீர்வுகள. கண்டுபிடிப்பது நிலங்களை வாங்கும் மற்றும விற்கும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கும்
தேவைபட்டால் இரண்டு மூன்று நாட்கள் தங்கி சரி செய்து கொடுக்கிறேன்.
முழுவதுமான இச்சேவைக்கு நியாயமான முறையில் கட்டணம் வாங்கப்படும்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672

வாட்சப் 1

https://chat.whatsapp.com/K9waKxs15ruHtEOIG54zmw

வாட்சப் 2

https://chat.whatsapp.com/DES1hFB4mtR8gO4ocey9yU

https://www.facebook.com/

வாட்சப் 3

https://chat.whatsapp.com/IqOCeCjW5U72lDBwZ4azlh

வாட்சப் 4

https://chat.whatsapp.com/G6tX4uPJT6f5rJ38JP0exO

வாட்சப் 5

https://chat.whatsapp.com/Fcec7cM2OTaG2qGFL7nYut

வாட்சப் 6

https://chat.whatsapp.com/GcjzMz24aZ8BhpossfXbVR

வாட்சப் 7

https://chat.whatsapp.com/KB5XBmbto7gHZKyLsKxuv8

வாட்சப் 8

https://chat.whatsapp.com/K05OEbukw0IB5hSRVTMDBd

வாட்சப் 9

https://chat.whatsapp.com/ChQnaSL3yr2Hzipr2h8z7x

Comments

0 comments

Related posts

இந்திய அடிப்படை சட்டங்கள் மிக முக்கிய சட்ட ஆலோசனை

Koovam Tamil News headline

உரிமையியல் நடைமுறைச் சட்டம் | நீதிப்பேராணையை நிறைவேற்ற

admin

கட்டுமானங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளில் கரையான்கள் அரிப்பு

%d bloggers like this: