Tamil Political news

பாஜக சிதைத்துக் கொண்டிருக்கும் துறைகளை பற்றிய ஓர் சிறு அணிவகுப்பு

ஜெய் ஸ்ரீ ராம்

பாஜக சிதைத்துக் கொண்டிருக்கும் துறைகளை பற்றிய ஓர் சிறு அணிவகுப்பு

பாஜக  சிதைத்துக் கொண்டிருக்கும் துறைகளை பற்றிய ஓர் சிறு அணிவகுப்பு பக்தாஸ் முக்கியமா படிக்கவும்!  ரியல் எஸ்டேட், அடுக்குமாடி குடியிருப்பு போன்றவை புதிய Project களை எடுப்பதை நிறுத்தி 1 1/2 வருடத்திற்கு மேல் ஆகிறது!
தென் இந்தியாவின் Apartments விற்பனை முன்னோடிகளில் பலர் அடுத்த திட்டங்களை தொடங்கப் போவதில்லை எனக் கூறி Engineer -களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர்!

இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அறிந்த A.M.Naiyak (L & T -ன் தலைவர்) வெளியில் வந்து கட்டுமானத்துறை சரிவை சந்தித்து உள்ளது…, அரசு அறிவித்த Make In India திட்டம் எந்த வகையிலும் உதவவில்லை என்கிறார்!

பாஜக சிதைத்துக் கொண்டிருக்கும் L & T

ஒரு Hardcore பாஜக சொம்பாகவே இருந்தாலும் L & T எப்படியான நிறுவனம், A.M.நாயக் பேசும் வார்த்தைகளின் மதிப்பு என்ன என்பதெல்லாம் நன்றாகவே உறைக்கும்!

#வாகனம் ;- Tata Motors  Hero Motor corps TVS Lay off க்கு நாள் பார்த்துக் கொண்டு உள்ளனர்!
சென்ற வாரத்தில் தான் தொடர் விடுமுறை அறிவித்தார்கள் என நினைத்து மனதை தேற்றிக் கொள்ளலாம் என பார்த்தால்……,
9 மாதங்களாக இதே நிலமை தான், எப்போது சம்பளம் இல்லாத விடுமுறை விடலாம் என நாள் பார்த்துக் கொண்டிருந்தோம் என வெடி வைக்கிறார்கள்!

Hyundai, Maruthi Mahindra & Mahindra Toyota Kirlosker

என பல நிறுவனங்களும் தங்களின் சம்பளம் இல்லாத விடுமுறை நாளை சென்ற வாரம் அறிவித்தனர்!
இது எல்லாமே பல மாதங்களாக இருந்த Pressure- ன் வெளிப்படு தான், யார் முதலில் கையை தூக்குவது என்று Reputation Issue தான் இத்தனை நாள் வெளியே தெரியாமல் தாக்குப்பிடிக்க காரணம்.., நாட்கள் ஆக.., ஆக இது இன்னும் அதிகரிக்கும் என்பதே இத்துறை வல்லுநர்களின் கூற்று!

#Snacks & #Biscuits:-5 ரூபாய் /_ செலவு செய்து மக்கள் பிஸ்கட் வாங்க தயங்குகிறார்கள்

5 ரூபாய் /_ செலவு செய்து மக்கள் பிஸ்கட் வாங்க தயங்குகிறார்கள் என.., Britannia நிறுவன M.D வருண் பெர்ரி அதிர வைக்கிறார்.,

10 – 11% இருந்த எங்களின்
சராசரி கால் ஆண்டு வளர்ச்சி இப்போது 6% ஆக வீழ்ச்சியை சந்தித்து உள்ளது!

இன்னொரு பக்கம்.., Parle நிறுவனம் 10 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கும் பட்டியலை தாயார் செய்து அறிவித்தே விட்டது!

GST வந்த பிறகு ஒட்டு மொத்த தொழிலும் நசிந்து விட்டதாக கொதிக்கிறார்கள்!
12 % இருந்த வரியை GST என்ற பெயரில் 18% ஆக உயர்த்தி விட்டனர்!

இதை முற்றிலுமாக குறைக்க சொல்லவில்லை, 100 கிலோ வுக்கு குறைவான Biscuits பெட்டிகளுக்கு GST போடாதீர்கள்..,
இதனால் கிராமங்கள் வரை சிறு சிறு கடைகளில் குறைந்த அளவில் வாங்கி சில்லரை விற்பனை செய்தவர்கள் கூட வாங்க தயங்குகிறார்கள் இது அவர்களின் லாபத்தில் இல்லாமல் முதலில் (Capital)-லேயே அரசு கை வைப்பதாக அமைகிறது!

இந்திய ஜவுளித் துறையை கூறலாம்!

எங்களின் கோரிக்கையை அப்போதே மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விட்டோம்!

இதற்கு மேல் இந்த வார இறுதிக்குள் அரசு நடவடிக்கை எடுக்கவிடில்.., வாரம் 100 பேர் என இந்தியாவின் ஒவ்வொரு Factory-யில் இருந்தும் ஆட்களை வெளியேற்றும் பணியை தொடர உள்ளோம்., என்கிறது PARLE ..! #Textiles:-

கழுதை தேஞ்சு கட்டறும்பு ஆன கதை என்பதற்கு சரியான கண் முன்னான உதாரணம் இந்திய ஜவுளித் துறையை கூறலாம்!

இரண்டு நாள் முன்பாக வடக்கத்தி மாநிலங்களின் Mills Association ஓர் தகவலை செய்தி தாள்களில் விளம்பரமாக வெளியிட்டு உள்ளது..! அதில்

2018 -ல் நடந்த Export க்கும் 2019- ல் செய்யப் பட்டு வரும் Export க்கும் இடையே நடந்த வீழ்ச்சி விகிதாச்சாரம் 50.1%.
TV எல்லாம் அரசுக்கு சாமரம் வீசுவதிலும், பாக்கிஸ்த்தான்-யை குறை சொல்வதிலுமே கவனம் செலுத்துவதால் தான் செய்தி தாள்களில் தனியார் விளம்பர பகுதிகளில் இதை விளம்பரமாக கொடுக்கும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம் என்கிறார்கள்!

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை முடக்கியதே இதன் முக்கிய காரணம்

தமிழகத்தில் 2017 – 18 -ல் மட்டும் 1,20,000 (ஒரு லட்சத்தி இருபதாயிரம்) பேர் வேலை இழந்து உள்ளனர் என்றும்.., 2017-ம் ஆண்டில் 225 நூற்ப்பாலை-கள் (Spinning Mills) தமிழகம் முழுக்க மூடப் பட்டு உள்ளன!
அதே ஆண்டில் இந்தியா முழுக்க 605 ஆலைகள் மூடப்பட்டன..!
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை முடக்கியதே இதன் முக்கிய காரணம் என்கிறார் Open-end Spinning Mills Association (OSMA) -ன் தலவர் திரு.ஜெயபால் !

இன்றைய நிலையில் இந்தியா முழுக்க 3 கோடி பேருக்கு ஏற்கனவே செய்து கொண்டு இருந்த Textile துறையில் வேலை இன்றி வெளியேற்றப் பட்டு உள்ளனர்!

கடந்த 10 வருடங்களில் இப்படி ஓர் நிலை இதுவே முதல் முறை!

வைகோ 23 வருடங்களுக்கு பிறகு பாராளுமன்றத்தில் பதவி ஏற்ற உடனேயே முதலில் பேசியது இதைத்தான்.., பங்களாதேஷ் இந்தியா-வின் வேலையை பிடுங்கி கொண்டு உள்ளது..,

GST – யால் நாடு முழுக்க Textile துறை நலிவடைந்து வீழும் நிலை உள்ளது.., அதை மீட்க வரி கொள்கையை மாற்றி அமையுங்கள் என்றார்!

பெருக்கு பின்னாடி டிகிரி போடுறவங்களுக்கு புரியறதுக்கு வாய்ப்பில்லை தான்!

அந்த கேள்விக்கு பதில் சொன்ன துறையின் அமைச்சர்
ஸ்மிரிதி ராணி.., அப்படி எந்த பிரச்சனையும் இல்லை, Textiles நல்லா தான் இருக்கு என ஆர்வம் இல்லாமலேயே பதில் கூறினார் !
இப்போதும் அதே பதில் தான் அவரிடம் வருகிறது!
இதெல்லாம் கடினமா படிச்சு உழைச்சு மேல வந்தால் அடுத்தவனோட துன்பம் புரியும்!
FAKE Certificate -யை காட்டி பெருக்கு பின்னாடி டிகிரி போடுறவங்களுக்கு புரியறதுக்கு வாய்ப்பில்லை தான்!

அடுத்து நீங்க பார்க்க போறது தான் முக்கியமான ஓர் துறை

#காயலான்கடை :-

சிரிக்காதீங்க, உண்மையிலேயே காயலான்கடை என்பது இந்தியா முழுக்க 250 நகரங்களில் கண்ணுக்கு தெரியாமல் இயங்கி வரும் மாபெரும் தொழில்..,!
நீங்கள் Steel, Lorry, Metal Foundry, லேத் இப்படி ஏதாவது ஒரு தொழிலில் ஒன்றி இருந்தால் Scrap Business -ன் தாக்கம் தெரியும்!
இந்த துறை நாடு முழுதும் ஒரு சுறு சுறுப்பாக இயங்குகிறது என்றால்..,
அனைத்து தொழில்களும் தங்கு தடை இன்றி இயங்குகிறது என்று பொருள்!

அடுப்பில் பூனை தூங்குகிறதா? பாத்திரத்தை உருட்டுகிறதா?

அடுப்பில் பூனை தூங்குகிறதா? பாத்திரத்தை உருட்டுகிறதா? என்பதில் இருக்கிறது ஓர் வீட்டின் வளமும் செல்வமும்.., இங்கேயும் அதே தான்!

கடந்த இரண்டு மாதங்களில் பெரும் அளவுக்கு Steel Waste வருகை குறைந்து விட்டதாக கோவை சிறு நிறுவன முதலாளிகள் தெரிவிக்கின்றனர்!

80% சிறு குறு நிறுவனங்கள் பெரும் நட்டத்தை நோக்கி நகர்வதாக..,
Institute of Indian Foundrymen – ன் கோவை தலைவர் திரு.எழில் தெரிவிக்கிறார்!

இது நேற்று(21-8-19) வரை வெளியில் தெரிந்தவை!

இன்னும் நிறைய வரும், என்ன செய்யப் போகிறீர்கள் வாருங்காலத்தை காக்க…., என்று சிந்திக்க வேண்டியது நீங்கள் தான்!

#BJPKillsEconomy

– பிறை கண்ணன்
Satheesh Kumar

Comments

0 comments

Related posts

ஜல்லிக்கட்டு போரட்டம் எப்போதும் கண்டிராத கூட்டம்

admin

ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம் ஒரு புதிய எழுச்சி

admin

உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது.

admin
%d bloggers like this: