பாவேந்தன் (Paaventhan Rajagopal ) உடல் நலக்குறைவால் காலமானார்
ஆளுமைகள்

பாவேந்தன் (Paaventhan Rajagopal ) உடல் நலக்குறைவால் காலமானார்

பாவேந்தன் (Paaventhan Rajagopal ) உடல் நலக்குறைவால் காலமானார்

பாவேந்தன் (Paaventhan Rajagopal ) உடல் நலக்குறைவால் காலமானார்

நேற்று திருச்சி செல்ல விமானத்தில் இருந்தபோது அந்த தொலைபேசி அழைப்பு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அண்ணன் பாவேந்தன் (Paaventhan Rajagopal ) உடல் நலக்குறைவால் காலமானார் என்கிற துயரத் தகவலை தெரிவித்தார் மருத்துவர் இளவஞ்சி

சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்… தமிழார்வலர்… முக்கியமான மக்கள் பிரச்னைகள் குறித்து அவ்வப்போது குறுஞ்செய்திகள் அனுப்புவார்… தொலைபேசி வாயிலாகவே வளர்ந்த நட்பு

 பாவேந்தன் தன் தனிப்பட்ட தேவை குறித்து பேசியதில்லை.

கோவை வேளாண் கல்லூரியில் பணியாற்றிய பாவேந்தன்தன்னை சுற்றி இருப்பவர்களின் பிரச்னைகளுக்காக அதிகம் பேசியிருக்கிறார் தன் தனிப்பட்ட தேவை குறித்து பேசியதில்லை.

கல்லீரல் செயலிழந்த நிலையில் சிகிச்சை செலவுகளுக்கும், மாற்று கல்லீரல் தானத்திற்கும் சிரமப்பட்டிருக்கிறார் ஆனால் தன் சிரமம் குறித்து ஒரு நாளும் சொன்னதில்லை.

நேற்று காலை தனியார் மருத்துவமனை ஒன்றில் மறைந்த பாவேந்தனின் உடல் சென்னையில் இருந்து சொந்த ஊரான திருச்சி கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

அஞ்சலி செலுத்த சென்றபோதுதான் பாவேந்தன் தந்தையாரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களப்பணிகளில் அதிகம் ஈடுபட்டவர் என்பதை தெரிந்து கொண்டேன்.

ஐந்து ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டே செய்யப்பட்டிருக்க வேண்டிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை… பொதுத்தேர்வு எழுதிய தன் முதல் மகள் மனதளவில் எந்த பாதிப்புக்கும் உள்ளாகிவிடக்கூடாது என தள்ளிப் போட்டிருக்கிறார்

அத்தனை அன்பை பொழிந்த அப்பாவை உயிரற்ற உடலாக பார்க்க நேர்ந்த அவரின் இரண்டு பெண் குழந்தைகளின் துயரம் வார்த்தைகளில் எழுதமுடியாதது.

அப்பாவை போலவே சமூகம் சார்ந்து சிந்திக்கும், எழுதும் பாவேந்தனின் மகளுக்கு மன உறுதி அதிகரிக்கட்டும். அப்பாவின் நண்பர்கள் உனக்காக எப்போதும் உறுதுணையாய் நிற்பார்கள் மகளே..

By KathikaiSElvan

Comments

0 comments

Related posts

விஜய் அஜித் ரசிகர்களே சோறு தானே திங்கிறீங்க

admin

PASSIONS OF THE TONGUE இப்புத்தகத்திற்கான முன்னுரை

admin

ஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து

admin
%d bloggers like this: