ஆளுமைகள்

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவி செய்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவி

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவி செய்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தலைமைச் செயலகக் காலனி ஜி5 காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்துவருபவர் ராஜேஸ்வரி இவர் நேற்று நள்ளிரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் 

அப்போது 2 மணி அளவில் ஓட்டேரியில் உள்ள கே.ஹெச் சாலையில் வயதான பெண்மணி ஒருவர், கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார்

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவி

இதைப்பார்த்த ஆய்வாளர் ராஜேஸ்வரி, வண்டியை நிறுத்தச்சொல்லி அவரிடம் என்ன நடந்து என்று விசாரித்துள்ளார்
அப்போது அந்தப் பெண் பெயர் சகுந்தலா என்பதும், அவரது மகள் ஷீலா பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருப்பதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகனம் கிடைக்குமா எனப் பார்க்க வந்ததாகக் கூறியுள்ளார்

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உதவி

உடனே அவரை அழைத்துக்கொண்டு நம்மாழ்வார்பேட்டை பர்கா சாலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்
அப்போது அங்கு பனிக்குடம் உடைந்து பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கும் ஷீலாவைக் கண்டவர்,

உடனடியாக 108 ஆம்புலன்ஸூக்கு தொடர்பு கொண்டுள்ளார் ஆனால், குறுகிய பாதையால் அங்கு ஆம்புலன்ஸ் வர இயலவில்லை

உடனே ராஜேஸ்வரி காவல்துறை வண்டியிலே பெண்மணி ஷீலாவை ஏற்றிக்கொண்டு, ஆம்புலன்ஸ் நின்றிருந்த இடத்துக்குச்சென்று ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியிடம் பேசினோம். “ரோந்துப் பணியில் இருக்கும்போதுதான் இந்தச் சம்பவம் நடந்தது

பனிக்குடம் உடைந்த நிலையில், பிரசவ வலியில் அந்தப் பெண் துடித்துக் கொண்டிருந்தார். உடனே வாகனத்தில் ஏற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்

சுகப்பிரசவம் நல்லபடியாக முடிந்தது-மக்களுக்காக்கத்தானே காவல்துறை

இதில் என்ன இருக்கிறது  காவல்துறையினர் பணியே மக்களை காப்பதுதானே மக்களுக்காக்கத்தானே காவல்துறை

என் பணியை நான் செய்தேன் என்றார் இயல்பாக
ஷீலாவின் தயாரிடம் பேசினோம் சரியான நேரத்தில் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி அப்பகுதிக்கு வந்தார்

உடனே தாமதிக்காமல், கொண்டு சென்றதால், சுகப்பிரசவம் நல்லபடியாக முடிந்தது

அவருக்கு எனது நன்றிகள் தாயும் சேயும் நலமுடன் இருக்கின்றனர்” என்றார். நாமும் பாராட்டுவோம்

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவிபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவிபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவி

Comments

0 comments

Related posts

சுட்டெரிக்கும் வெயிலில் நாகை MLA தமிமுன் அன்சாரி கள ஆய்வு

admin

பொன்.ராதா பாவம் தன்னிலை அறியாத தற்குறி

admin

வயது முதிர்ந்த பெரியவரின் சோகம்

admin
%d bloggers like this: