தமிழக ரியல் எஸ்டேட்

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்த ஒரு பெண்ணின்

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்த ஒரு பெண்ணின்

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்த ஒரு பெண்ணின்?

நியூஸ் 18 தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். பல்வேறு செய்திகளுக்கு நடுவே ஒரு செய்தி என்னைப் பல விஷயங்களை யோசிக்க வைத்தது.

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்த ஒரு பெண்ணின் வீட்டை வருவாய்த் துறையினர், காவல்துறையினர் உதவியோடு வீட்டை இடிக்க முயற்சி செய்ததை எதிர்த்து அந்தப் பெண் தற்கொலை செய்ய முயன்றார். மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டார். கிணற்றில் குதித்தார். பத்து பேர் சேர்ந்து மிருகத்தனமாக போட்டு அழுத்துகிறார்கள்.

பல கிலோமீட்டர் வளைத்துப் போட்டவனெல்லாம் ஹாயாக ஹம்மர் காரில் வலம் வருகிறான். அந்தம்மா மிஞ்சிப் போனால் ஒரு 300 சதுர அடி வளைத்துப் போட்டிருக்கும். போயஸ் கார்டனில் வேதா இல்லத்தையா வளைத்துப் போட்டிருக்கிறது?

மினி பஸ்ஸே போகாத ஒரு குக்கிராமத்தில் 300 சதுர அடி. யோசித்துப் பாருங்கள். அரசுப் புறம் போக்கு நிலத்தில் குடிசை போட்டு வாழும் மக்களுக்கு பட்டா வழங்கவில்லை. ஆனால் சாமியார் ஒருத்தருக்கு நிலத்தை வளைத்துக் கொடுக்கிறோம்.

இது வெறும் ஆக்கிரமிப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. நிலத்தில் ஒரு கோடு கிழித்துப் பிரிப்பதில்லை இது. தலைக்கு மேல் ஒரு கூரை. உடலுக்கு மேல் ஒரு சேலை எனலாம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அண்ணே குளிக்கிறதுக்கு இடமில்லைண்ணே என கல்லூரிப் பெண் ஒருத்தர் இந்த இருக்கிற ஒரு சிறு நகரத்தில் இருந்து வந்து நின்றது. காசு கலெக்ட் பண்ணி பாத்ரூம் கட்டிக் கொடுத்தோம். இன்னமும் பழனி பகுதியில் காட்டுக்குப் போய் கடன்களைக் கழிக்கும் நிலையில்தான் கிராமப்புற பெண்கள் இருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான் வீடு என்பதன் அவசியத்தைப் புருந்து கொள்ள வேண்டும். இதைத்தான் அவசியம் பேசியாக வேண்டும். அந்தச் செய்தியில் ஒரு பெண் மட்டும் போராடுகிறார். அது மையச் செய்தியாக ஆவதைப் பார்க்கச் சந்தோஷமாக இருக்கிறது. இந்தயிடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லத் தோன்றுகிறது.

நண்பர் குணசேகரன் ஒரு முறை முக்கியமான விஷயம் ஒன்றைச் சொன்னார். அரசு கட்டிக் கொடுத்த காங்கரீட் வீடுகள் பற்றிப் பெண்கள் சொன்னதைக் குறிப்பிட்டார். அவரது கள அனுபவத்தைச் சொன்னார். “சாமி இப்பத்தான் பயமில்லாமல் தூங்கறோம். இல்லாட்டி கூரை மேல எப்ப கல்லு விழும்ணு பயந்துகிட்டே கிடப்போம்” என்றார்களாம். தமிழகத்தின் அவநிலை இது.

புறம்போக்கு நிலத்தில்
புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்த ஒரு பெண்ணின்

இப்போது ஒளிபரப்பான தற்கொலை செய்ய முயன்ற அந்தப் பெண் குறித்த செய்தியையும் இந்தப் பின்புலத்தில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். சாமானியர்கள் குறித்த செய்தியும் முதன்மையான இடத்தைப் பெறுவது நல்லதிற்கான அறிகுறி. மக்களின் மதிப்பை வெல்லும்.

Saravanan Chandran

Comments

0 comments

Related posts

அடுக்குமாடி வீட்டில் குடியிருப்போர் நல சங்கம்

Koovam Tamil News headline

கோவை மாவட்டத்தில் அனைவருக்கும் சொந்த வீடு

admin

விலை அதிகமான வீடுகளை வாங்குவோர்

admin
%d bloggers like this: