தமிழக ரியல் எஸ்டேட்

புழல் ஏரி தண்ணீர் மாசு| செங்குன்றமே அலங்கோலமாகி வருகின்றது

புழல் ஏரி

புழல் ஏரி தண்ணீர் மாசுபட்டு வரும் சூழ்நிலை செங்குன்றமே அலங்கோலமாகி வருகின்றது

புழல் ஏரி தண்ணீர் மாசுபட்டு வரும் சூழ்நிலை செங்குன்றமே அலங்கோலமாகி வருகின்றதுசென்னை செங்குன்றம் நெல் அரிசி வணிகத்திற்கு மிகவும் புகழ்பெற்ற ஊர்  ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல மாநிலங்களிலிருந்து இங்கு வருகை தந்து நெல் – அரிசிகளை வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு அருகிலேயே சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும்  ஏரி Image may contain: outdoor

இந்த ஊரின் எல்லைப் பகுதிக்குள் நுழைந்தால் குப்பைகளிலிருந்து வெளியேறும் துர்நாற்றம், குப்பைகளை எரிப்பதனால் ஏற்படும் புகை. இதன் மூலம் ஏற்படும் மாசு சுற்றுச்சூழல், புழல் ஏரி தண்ணீர் மாசுபட்டு வரும் சூழ்நிலை என்று செங்குன்றமே அலங்கோலமாகி வருகின்றது. நாரவாரிக்குப்பம் (செங்குன்றம்) பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

தினந்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் பகுதியைத் தாண்டி சென்னைக்கும் மற்ற பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். இதன் மூலம் பொதுமக்களுக்கும், அருகில் வணிகம் செய்கின்ற வியாபாரிகளுக்கும் மனஉளைச்சலையும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விரைவில் மிகப் பெரிய போராட்டத்தை கையிலெடுக்க இருப்பதாக கூறி வருகின்றனர். இதன் மூலமாவது தீர்வு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இப்பிரச்னையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும், உள்ளாட்சித்துறை அமைச்சரின் கவனத்திற்கும் எடுத்துச் சென்று தீர்வு காண வேண்டுமென்றும் பொதுமக்கள் விரும்புகின்றனர்

Search for Redhills Property 

http://www.koovam.in/%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/

Comments

0 comments

Related posts

பத்திர பதிவு தடை நீங்கியது/ உயர்நீதி மன்றம் உத்திரவு

admin

கண்ணீர் விட்டு கதறிய விருகை கண்ணன்

Koovam Tamil News headline

வீட்டின் அனைத்து அறைகளிலும் புகைப்படங்களைக் கொண்டு அலங்கரிக்கலாம்

admin
%d bloggers like this: