பூமி அதிர்ச்சி உண்டாகும் சமயங்களில் தடுப்பு முறைகள்

பூமி அதிர்ச்சி உண்டாகும் சமயங்களில் தடுப்பு முறைகள்

பூகம்பம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின என்ற செய்தியை அவ்வப்போது நாம் செய்திகளில் படிப்பதுண்டு. புவியியல் நிபுணர்களால் குறிப்பிடப்பட்டுள்ள 3–ம் நிலை இடங்களில் பல பகுதிகள் நமக்கு அருகில்தான் இடம் பெற்றுள்ளன. 1–ம் நிலை மற்றும் 2–ம் நிலைகளில் இடம் பெற்றுள்ள பகுதிகளை விடவும் 3–ம் நிலை பகுதிகளில் நிலநடுக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இயற்கையாக நிகழும் பாதிப்புகளில் இருந்து நம்மையும் நமது உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள கட்டமைப்புகளின் தொடக்க நிலையிலேயே பல தொழில்நுட்ப அம்சங்களை கடைபிடிக்கவும் அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

பூமிக்கு அடியில் ஏற்படும் நில அதிர்ச்சியானது கட்டிடங்களின் அஸ்திவாரத்திலிருந்து ஆரம்பித்து மேல்நோக்கி செல்கிறது. கட்டமைப்புகள் உயரமாகவும், செங்குத்தாகவும் இருப்பதால் அஸ்திவாரம் முன்பின்னாக நகரும்போது அவற்றில் விரிசல்கள் ஏற்படுகின்றன. நில அதிர்வுகளின் அளவைப்பொறுத்து உண்டாகும் கட்டிட விரிசல்கள்தான் கட்டிடத்தின் பாதிப்புகளை நிர்ணயிக்கின்றன. அதுபோன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காக கட்டமைப்பு வல்லுனர்களால் பரிந்துரைக்கப்படும் முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.

பூமி அதிர்ச்சி உண்டாகும் சமயங்களில்  தடுப்பு முறைகள்

பாதிப்புகள் மூன்றுவிதம்

பூமி அதிர்ச்சி உண்டாகும் சமயங்களில் ஏற்படும் சக்தியானது மூன்று விதங்களில் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றின் விபரங்கள்:

1. மேல் நோக்கு அதிர்வு

(வெர்ட்டிகல் வைப்ரேஷன்)

2. பக்கவாட்டு அதிர்வு

(லேட்டரல் வைப்ரேஷன்)

3. எதிர் முடுக்க விசை

(இனெர்ஷியா போர்ஸ்)

மேல் நோக்கு அதிர்வு  

தற்போது அஸ்திவார அமைப்பும், அதன்மீது கட்டப்படும் சுவர்களும் கட்டமைப்பின் ஒட்டுமொத்த எடையை தாங்கக்கூடிய தன்மையுடன் கச்சிதமாக அமைக்கப்படுகின்றன. அதனால் மேல் நோக்கிய அதிர்வுகள் காரணமாக கட்டமைப்புகள் அவ்வளவாக பாதிக்கப்படுவதில்லை. வலுவான அஸ்திவாரம் மற்றும் கச்சிதமான எடைப்பரவல் காரணமாக ‘வெர்ட்டிகல் வைப்ரேஷன்’ ஏற்படுத்தும் பாதிப்புகள் குறைவாகத்தான் இருக்கும்.

பக்கவாட்டு அதிர்வு

கட்டிடங்களில் பக்கச்சுவர்கள் பொதுவாக 9 அங்குலத்தில் இருப்பதுபோல அமைக்கப்படுகின்றன. அவற்றின் சிமெண்டு பூச்சுகளையும் சேர்த்தால் மொத்தமாக சுவரானது 10 அங்குலமாக இருக்கும். அந்த சுவர்கள் உயரவாக்கில் நன்றாக பளு தாங்கும் திறன் கொண்டவையாக இருக்கும் அதே சமயத்தில் பக்கவாட்டில் அவற்றை சாய்த்துவிடுவது எளிதானது. அதனால்தான் ‘லேட்டரல் வைப்ரேஷன்’ எனப்படும் பக்கவாட்டு அதிர்வுகளால் அவற்றில் விரிசல்கள் எளிதில் உண்டாகி விடுவதோடு சுவரின் கட்டமைப்பும் பலவீனமடைகிறது.

எதிர்முடுக்க விசை

பூமி அதிர்ச்சியால் கட்டிடம் கீழே சாய்வதற்கான முக்கிய காரணியாக இருப்பது ‘இனெர்ஷியா போர்ஸ்’ எனப்படும் எதிர்முடுக்க விசையாகும். அதாவது பூமி அதிர்வுகளால் தரைக்கு கீழே இருக்கும் அஸ்திவாரமானது எந்த திசையை நோக்கி தள்ளப்படுகிறதோ, அதற்கு எதிரான திசையில் மேலேயுள்ள கட்டமைப்புகள் தாமாகவே நகர்கின்றன. கட்டிடங்கள் தரைமட்டமாவதற்கு இவ்விசைதான் முக்கிய காரணியாக இருக்கிறது. அறிவியல் பார்வையில் அதை ‘மூமெண்ட் ஆப் இனெர்ஷியா’ என்று சொல்லப்படுகிறது.

தடுப்பு முறைகள்

1. அழுத்தத்தை தாங்கும் ‘பிரிட்டில் மெட்டீரியல்ஸ்’ வகைகளான செங்கல், களிமண், சிமெண்டு போன்ற பொருட்களையும், வளையக்கூடிய தன்மையுள்ள ‘டக்டில் மெட்டீரியல்ஸ்’ வகைகளான இரும்பு, அலுமினியம், செம்பு போன்ற பொருட்களையும் ஒன்றாக இணைத்து பயன்படுத்துவது அவசியமான ஒன்றாகும். அதன் மூலமாக கட்டமைப்புகள் தக்க நெகிழ்வுத்திறம் பெற்றதாக இருக்கும்.

2. கட்டமைப்புகளில் அஸ்திவாரம் அமைக்கும்போது வழக்கமான முறையை தவிர்த்து அதிர்வுகளை தாங்கக்கூடிய விதமாக ‘பேஸ் ஐசோலேஷன்’ என்ற முறை கையாளப்படுகிறது. அதாவது அஸ்திவாரம் முன்பின்னாக அசைந்தாலும் கட்டிடங்கள் அதனால் பாதிக்கப்படுவதில்லை. மேலும், சுவர் அமைப்புகளில் ‘பிரிக்ஷன் டேம்பர்’, ‘மெட்டாலிக் டேம்பர்’, ‘புளூயிட் விஸ்கோஸ் டேம்பர்’, ‘விஸ்கோ எலாஸ்டிக் டேம்பர்’ ஆகிய அதிர்வு தடுப்பு முறைகளும் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன  பூமி அதிர்ச்சி உண்டாகும் சமயங்களில்  தடுப்பு முறைகள்..

Publish Free ads