/ஆண்களை போல் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு

ஆண்களை போல் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு

ஆண்களை போல் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு

-பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் தொடர்பாக, பல்வேறு புதிய கேள்விகள் எழுகின்றன இதில் குறிப்பாக, தந்தையின் சுய சம்பாத்திய சொத்து அல்லது, பரம்பரை சொத்தில் அவரது மகன், மகள் ஆகியோருக்கு, சம உரிமை உண்டு என்று தான், இதற்கு பொதுவான விளக்கம் அளிக்கப்படுகிறது
இந்த நடைமுறை. தாத்தாவின் பெயரில் இருக்கும் சொத்துக்கும் பொருந்துமா என்பதில், பலருக்கும், குழப்பம் நிலவுகிறது. சில இடங்களில் தந்தை சொத்தில் மட்டும் தான்
பெண்களுக்கு சம உரிமை என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.இது தொடர்பாக, சட்ட வல்லுனர்கள் கூறும் ஆலோசனைகள் தாத்தாவின் பெயரில் இருக்கும் சொத்து, அவரது சுய சம்பாத்திய சொத்தாகவும், பரம்பரை வழியாக, அவர் பெயருக்கு வந்த சொத்தாகவும் இருக்கலாம்
இதில், அவரது சுய சம்பாத்திய சொத்துக்கு ஒரு மாதிரியும், பரம்பரை சொத்துக்கு ஒரு மாதிரியும், விளக்கங்கள் கூறப்படுவதால், குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதில், தாத்தா உயிருடன் இருக்கும் போதே, சுய சம்பாத்திய சொத்து, யார் யாருக்கு சொத்து சென்று சேர வேண்டும் என்று, உயில் எழுதிவிட்டால், அதன் படியே பேரன், பேத்திகள் உரிமை பெற முடியும்
ஆனால், உயில் எழுதப்படாத நிலையில், அவரது சுய சம்பாத்திய சொத்தில், பங்கு பிரிப்பது சற்று சிக்கலானது தான் குறிப்பாக, தாத்தாவுக்கு மகன், மகள்கள் எத்தனை பேர், அவர்களில், யார், யாருக்கெல்லாம் வாரிசுகள் இருக்கின்றனர் என்பதை, பார்க்க வேண்டும்
அவரது உயில், எழுதப்படாத சுய சம்பாத்திய சொத்தை பிரிக்கும் போது, பாட்டி இருந்தால், அவருக்குள்ள உரிமையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பேரன் பேத்திகளுக்கு பெற்றோர் உள்ளனரா, பெற்றோரின் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர், அவர்களது வாரிசுகள் ஆகியோரின் உரிமைகளையும், கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது
பரம்பரை சொத்து எனில், அது, எந்த வழியில் அவருக்கு வந்தது என்பதை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் தான், அடுத்த வாரிசுகளுக்கான உரிமை உறுதி செய்யப்படும்
சில சமயங்களில், குறிப்பிட்ட சொத்தின் பரம்பரை உரிமை, தாத்தாவுடன் முடிவடையலாம். இப்படி முடிவடையும் போது, அது, அவரது தனிப்பட்ட சொத்தாகி விடவும் வாய்ப்புள்ளது.எனவே,
இந்திய சொத்துரிமை சட்டம், இந்திய வாரிசுரிமை சட்டம் ஆகியவற்றில், அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படையில், பேரன், பேத்திகள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டலாம்.