1-800-999-9999 — hi@loremipsum.com

நாத்திகம் பேசி சம்பாதித்தவர் பெரியார் தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்லுலாபுதீன்

நாத்திகம் பேசி சம்பாதித்தவர் பெரியார்
தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்லுலாபுதீன்

பெரியார் நாத்திகம் பேசி சம்பாதிக்கவில்லை இன்னும் சொல்லபோனால் பொதுவாழ்விற்கு வந்த பிறகு கஞ்சனைப்போல நடந்துக்கொண்டவர் அவருக்கு வந்த எல்லா தொகையையும் சேர்த்துவைத்து அதை எங்கே தன் உறவுமுறை சொந்தங்களுக்கு சென்றுவிடுமோ என அஞ்சி மணியம்மையை மணந்து அறக்கட்டளையில் வாரிசாக்கியவர் அப்போது உறவுமுறை தான் அறக்கட்டளையை நடத்தமுடியுமென்ற சட்டமிருந்ததால் அப்படி செய்தார்

பெரியார் நாத்திகம்

பெரியார் நாத்திகம்

முதலில் ஒருவரைப்பற்றி குறை சொல்வதற்கு முன் அவரைப்பற்றி அறிந்திருக்கவேண்டும் சொல்லும் சொல்லில் உண்மையை மட்டுமே பேசுவதாக கூறி .. ஒரு மதத்தில் பிரிவினையை உண்டாக்கி அதன் மூலம் செல்வம் சேர்த்த யோக்கிய சிகாமணி சொல்லகூடாது.. தான் மட்டுமே சொல்வது சரியென்று பிதற்றி திரியும் எல்லாம் எனக்கு தெரியுமென .. எந்தகேள்விக்கும் விடைதெரியுமென .. எதையும் நேரடியாக பதிலளிக்காமல் சுற்றிவளைத்து ஒரு சமூகத்தையே மூளைச்சலவை செய்து பிரதான எதிரிகளுக்கு மறைமுக உதவி செய்து திரியும் மூடன் .. தன்னை நல்லவனென சொல்கிறவன் கூட நம்பலாம் தான் மட்டுமே நல்லவன் என்கிறவன் நம்ப முடியாது அப்படிபட்டவர் இந்த பி.ஜே

இஸ்லாமியர்களின் ஒற்றுமை

பெரியாரை இழிவாக பேசி திரியும் பாசிசத்திற்கு வலு சேர்க்க இந்த கைக்கூலி தன் பங்கிற்கு பெரியாரை வசைபாடுகிறது

இஸ்லாமியர்களின் ஒற்றுமையை சிதைத்து அவர்களுக்கு அடிதடி பகை உணர்வை உண்டுபண்ணி அதன் மூலம் பாசிச ஆர்எஸ்எஸின் வேலை சுலபமாக்கும் இந்த கேடுகெட்ட இஸ்லாமிய சமூகத்தின் விரோதி இன்றும் தன் பங்கிற்கு கொஞ்சம் கூவிவிட்டுபோகிறது வாங்கும் காசிற்கு வஞ்சனையில்லாமல்

பெரியார் மிகப்பெரிய செல்வந்தர் தன் சொத்துக்களை இந்த மண்ணிற்காக செலவிட்டவர் ஒரு சாரார் மட்டுமே உயர்ந்து கொண்டே போகிறார்கள் மற்றவர்கள் எழ முடியாமல் அடித்தமர்த்தபடுகிறார்களென என எண்ணி அதற்காக சமுதாய ஏற்றதாழ்வுகளை களைய இறுதி மூச்சுவரை போராடி உண்மையான போராளி நாத்திகம் பேசிதான் நாலுகாசு பார்க்கவேண்டுமென்பதில்லை

எனக்கு என்ன கடவுள் மேல் வெறுப்பா

நாத்திகத்தை அவர் கையிலெடுத்ததே இந்த கேடுகெட்ட வர்ணாசிரம நிலையை குழித்தோண்டி புதைக்கவேண்டுமென்பதற்காக தானே தவிர, அவரே சொல்கிறார் எனக்கு என்ன கடவுள் மேல் வெறுப்பா

இந்த ஏற்றதாழ்வை வர்ணம் கொண்டு பிரித்திரிப்பதை எடுத்துகளைய வேணிடுமென்றேன் அது வேதத்தில் இருக்கிறதென்றார் அந்த வேதத்தை புறநிதள்ளுவோமென்றேன் அது கடவுளின் மொழியென்றார் அந்த கடவுளையே எதிர்த்தேன் என்றார்

அவர் பெருந்தனக்காரர்களில் ஒருவர்

பெரியார் சிலைக்கு ஏன் மாலை போடுறீங்க என்று கேட்கும் அறிவிலியே பெரியாரை கும்பிடவில்லை மாறாக எம்மை சுயமரியாதையோடு வாழ வழிவகை செய்த அந்த மனிதரை போற்றுவதும் நன்றி பாராட்டிவதுமே தவிர

வணங்குவதல்ல
பெரியார் சோத்துக்கு என்ன செய்தாரென்கிறார்
அவர் இவரைப்போல படிப்பதற்கே அடுத்தவரின் உதவியை தேடியவரல்ல

சாப்பாட்டு வழியில்லாமல் மதரஸாவிலே சேர்த்து விட்டா சோறாவது கிடைக்குமென்று வந்தவரல்ல அவர் பெருந்தனக்காரர்களில் ஒருவர்
..
இப்போதுதான் ஒவ்வொரு ஸ்லீப்பர் செல்லாக வெளியே வருகிறது ஆரம்பத்தில் சில இஸ்லாமிய சமய பெரியவர்கள் பி ஜே வை ஆர்எஸ்எஸின் ஆள் என்றெல்லாம் குற்றம் சாட்டினார்கள் அது உண்மையென்று இப்போது வெளிப்படையாகவே தெரிகிறது.. ஆர்எஸ்எஸ் அஜந்தாவில் மிக முக்கியமானது

குறிப்பாக முஸ்லீம்களின் ஒற்றுமையை சிதைப்பது தமிழகத்தில் பெரியாரை மீறிய எதுவும் நடக்காமல் போவது கண்டு அவரை தொடர்ந்து சிறுமைபடுத்த முயற்சிப்பது

முதலாவதில் பி.ஜே ஒரு பகுதிவரை வெற்றிக்கண்டிருக்கிறார்.. சொந்த குடும்பத்திலேயே பிரிவினையை.. நேர்வழியென்ற பெயரில் பகை உணர்வை வளர்த்து விட்டிருக்கிறார்

அண்ணன் தம்பியும் அப்பனும் வெவ்வேறு வழிமுறைகளை பின்பற்றி  உறவுகள் சிதைந்து ஒற்றுமையின்று இஸ்லாமிய குடும்பங்களை காணலாம் அடுத்ததாக பெரியாரிடத்திற்கு வந்திருக்கிறார்.. பாவம் பெரியாரை சரியாக கணிக்காத தெரியாத .. அறிந்துக்கொள்ளாமல் உளறியிருக்கிறார்

பி.ஜே தன் சொந்த சமூதாயத்திற்கு கேடுவிளைவித்த நஞ்சு

உலகிலேயே தான் சொல்வதை சரியென்றுதான் அறிஞர்கள் ஞானிகள் மத பெரியவர்கள் மார்க்கம் பேசியவர்கள் எல்லோரும் சொன்னார்கள்  பெரியார் மட்டும்தான் நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றார் பெரியார் சேர்த்ததெல்லாம் அவருக்கு பிறகு ஆசிரியர் தலைமையில் நிர்வகிக்கபடுகிறது  அது அவர்களின் உடமையல்ல நிர்வாகிக்க ஊதியம் தவிர வேறேதும் பெறுவதில்லை காசுவாங்காமல் மதபிரச்சாரம் செய்வதாக சொல்லும் பி.ஜே அடுத்தவேளை சோத்துக்கில்லாதவர் இன்று கோடீஸ்வரனாக எப்படி ஆனாரென கேட்கமாட்டோம்

முதலில் சுற்றி வளைத்து பேசாமல் சரி தவறு என பட்டென்று சொல்ல பழகுங்கள்.. சுற்றிவளைத்து பேசுகிறவன்  உண்மையோடு பொய்யை கலக்கிறவன் அல்லது தான் சொல்லவந்ததை நியாயபடுத்தி ஏற்க செய்யும் மூளைச்சலவை செய்கிறவன்

பி.ஜே தன் சொந்த சமூதாயத்திற்கு கேடுவிளைவித்த நஞ்சு..

Aalanci Spm
ஆலஞ்சியார்

Need to Buy Property in Chennai?

%d bloggers like this: