மனையடி சாஸ்திரம் என்றால் என்ன?

-மனையடி சாஸ்திரம் “மனை” என்பதற்கு வீடு என்றும் “சாஸ்திரம்” என்றால் மனை அமையவேண்டிய ஒழுங்குமுறைக்கு சாஸ்திரா என்றும் பொருள்படும்
மனையின் உள் , வெளி அளவுகளுடன் அதற்குண்டான பலன்களைக் கூறுவது. வீட்டின் ஓர் அறைபோல் , சோடசத்தின் ஒரு பகுதியே மனையடி சாஸ்திரம்
மனையானது சாஸ்திர முறைப்படி ஒரு குறிப்பிட்ட நீள அகலத்தைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும்
மேலும் அம்மனையில் கட்டப்படும் அறைகளும் அவ்வாறே சாஸ்திரப்படி சில குறிப்பிட்ட நீள, அகலங்களைக் கொண்டிருக்க வேண்டும்
அவ்வாறு சாஸ்திர விதிபடி கட்டப்படாத வீடுகள், கட்டிடங்கள் துன்பத்தையும் துயரத்தையும் தரும் என்பது சாஸ்திர விதி
சில வேறுபட்ட நீள, அகலங்களில் கட்டப்படும் வீடுகள் மட்டும் அறைகளில் நன்மை , தீமைகள் கீழ்க்கண்ட சில உதாரணங்கள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.6 அடி – அமைதியான வாழ்க்கை
7 அடி – செல்வத்தின் இழப்பு
8 அடி – மிகுந்த செல்வமும் வளமான வாழ்க்கையும்
9 அடி – செல்வத்தை இழப்பதோடு, மலைப்போன்ற துயரத்தை சந்திப்பார்கள்.
10அடி – குறைவில்லா வாழ்வு
11அடி – மிகுந்த ஆரோக்கியமும், செல்வமும்
12 அடி- குழந்தைகள் மரணம்
13 அடி- தீராத நோய்

Want To Benefit From Property Investment?   Ad Business To Google   Get Offer For Mobile

வாஸ்து” என்றசொல்

வாஸ்து” என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்

வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப்பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்

வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கொங்கிறீற்றாலும் கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை

வாஸ்து புருஷ மண்டலமும், வாஸ்து புருஷனும்

கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப் படுத்துகின்றது. இந்த உருவகம் குறியீட்டு வடிவில் தரப்படும்போது, வடகிழக்கில் தலையும், தென் மேற்கில் காலும் இருக்க வாஸ்து புருஷ மண்டலத்தைக் குப்புறப் படுத்தபடி ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஆண் உருவமாக வாஸ்து புருஷன் விபரிக்கப்படுகிறான்


 

சோடச மனைப்பொருத்தம்

மனைக்கு உண்டாக கருப்பம் , ஆதாயம் , விரையம் , யோனி , வாரம் , திதி , நக்ஷ்த்ரம் , இலக்கினம் , அமிசம் , வமிசம் , நேத்திரம் , சூத்திரம் , வயது , யோகம் , பஞ்சகம் ஆகிய 15 பொருத்தம் பார்த்து அமைப்பது.

பஞ்ச பூதங்களால் ஆனது உலகு
பஞ்ச பூதங்களால் ஆனது உடல்
பஞ்ச பூதங்களின் பலமறிந்து மனை அமைத்து பலன் பெறுவது
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

எனும் வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப இன்றைய சூழ்நிலையில் இல்ல(ற)ம் இனிமையாய் அமைந்து வாழ்வில் வெற்றி பெற முன்னோர் நமக்களித்த முத்தான சோடச மனைப்பொருத்தத்தை பின்பற்றி வளம் காண்போம்.
வாழ்க்கை என்னும் விதியை மனைப்பொருத்தம் எனும் மதிகொண்டு வளப்படுத்திடுவோம். வாழ்வில் வசந்தம் காண்போம். மயன் சாஸ்திரப்படி மனை அமைத்து பயன் பல பெறுவீர்

வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம்

Publish Free ads in Real E

cropped-cropped-cropped-04.jpg
Property agents in Chennai

state

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *