மாட்டுக்கறி உணவு உண்ணாத வாழ்கை ஒரு வாழ்க்கையா
உணவு ரகசியம்

மாட்டுக்கறி உணவு உண்ணாத வாழ்கை ஒரு வாழ்க்கையா

மாட்டுக்கறி உணவு

மாட்டுக்கறி உணவு உண்ணாத வாழ்கை ஒரு வாழ்க்கையா

-மட்டுக்கறி யோ மீனோ எப்படி இருக்கும், எப்படி ருசிக்கும் என்பதை உணராமலேயே சாகப்போகிறார்களே,” என்று பாவமாக இருக்கும்

உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் நான்கே நான்கு நோக்கங்கள்தான் அடிப்படை. பிறப்பு, உண்ணுதல், இனப்பெருக்கம், இறப்பு

ஆனால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு

விலங்குகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தாங்கள் தின்றதையேதான் இன்றுவரை தின்று கொண்டிருக்கின்றன

பசியைத் தீர்ப்பதோடு நின்றுவிடுகின்றன  ஆனால் மனிதன்தான் ருசியையும் தீர்த்துக்கொள்கிறான்

புதிதுபுதிதாக ரசித்து ருசித்து மாட்டுக்கறி உணவு

சமையல் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து புதிதுபுதிதாக ரசித்து ருசித்து உண்பதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறான்

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பலவகைச் சுவைகளின் மீதான அவன் தேடலோ ஆசையோ நிற்கவே இல்லை

காமம் என்பது அடிப்படையில் சோம்பேறியான மனிதனை எப்படியாவது இனப்பெருக்கம் செய்ய வைக்கவேண்டும் என்பதற்காக இயற்கை கண்டுபிடித்த ஒன்று

ஆனால் அதற்கு இணையாக மனிதன் கண்டுபிடித்த ஒன்றுதான் விதவிதமான உணவுகளை விதவிதமாக ருசிப்பது

TLC, Fox Traveller, Travel XP போன்ற சேனல்களில் உலகெங்கும் உள்ள உணவு வகைகளையும், அதை ரசித்துச் சமைக்கும் அல்லது உண்ணும் மக்களையும் காட்டுவார்கள்

அதிலும், “இது ரொம்ப நல்லா வெந்திருக்கு,” “இது நல்லா மொறுமொறுப்பா சுவையா இருக்கு,” “பன்றி இறைச்சி நல்ல பிரவுன் நிறமா ரோஸ்ட் ஆகிருக்கு

வாசம் அருமையா வருது,” போன்ற அழகான தமிழ் வர்ணனைகளுடன் பார்த்தால் நாக்கில் லிட்டர் கணக்கில் எச்சில் சுரக்கும் டிவி போட்டாலே நான் பார்ப்பது இப்படியான நிகழ்ச்சிகளைத்தான்

பார்க்கும்போதெல்லாம், சாவதற்குள் எப்படியாவது உலகில் உள்ள பிரபலமான அனைத்து வகை உணவுகளையும் (delicacies) ஒருமுறையாவது சாப்பிட்டுப் பார்த்துவிட வேண்டும் என நினைப்பேன்

நமக்குக் கிடைத்திருக்கும் கொஞ்ச வாழ்க்கையில் உலகில் உள்ள மகிழ்ச்சி தரும் விஷயங்களை எல்லாம் முடிந்த அளவு அனுபவித்துவிட வேண்டும் என்பதுதான் நமது ஆசையாக இருக்கிறது. உணவில் இருந்து சுற்றுலா செல்வதுவரை அப்படித்தான்

மாட்டுக்கறி எப்படி ருசிக்கும் என்பதை உணராமலேயே சாகப்போகிறார்களே

முன்பெல்லாம், சைவம் மட்டுமே சாப்பிடும் ஆட்களைப் பார்க்கும்போது, “வாழ்க்கையே கொஞ்சகாலம்தான் அதிலும் கடைசிவரை மட்டனோ, சிக்கனோ, மாட்டுக்கறி மீனோ எப்படி இருக்கும், எப்படி ருசிக்கும் என்பதை உணராமலேயே சாகப்போகிறார்களே,” என்று பாவமாக இருக்கும்

இப்படி ஒருநாள் நினைக்கையில்தான் நானும் கூட உலகில் பெரும்பாலானோர் உண்ணும் பீஃப், போர்க் போன்றவற்றைச் சாப்பிட்டே பார்த்ததில்லையே, நானும்கூட ‘பாவம்’தான் என உணர்ந்தேன்

அதென்னமோ சின்னவயதில் இருந்தே மாட்டுக்கறி என்றால் நாற்றமடிக்கும், புழு இருக்கும், அது இது என்று ஏதேதோ புரளிகளைச் சொல்லித்தான் நம்மை வளர்க்கிறார்கள்.

ஆனால் அந்தப் புரளிகளை நான் கேட்டு வளர்ந்த காலத்திலும்கூட பக்கத்து வீட்டில் ஆங்கிலோ இந்தியர்கள் பீஃப் சமைத்து ருசித்துச் சாப்பிடுவதைப் பார்த்திருந்தாலும் எனக்கு ஏதோ அதைப் பார்த்தால் ஒரு ஒவ்வாமை. எல்லாமே பழக்கத்தால் வருவதுதானே.

அப்போதெல்லாம் உடைக்காத அந்த ஒவ்வாமையை சில ஆண்டுகளுக்கு முன்பு தென்காசிக்கு நண்பர்களோடு சென்றபோது உடைத்தேன் பீஃப் பிரியாணி எல்லாரும் ஆர்டர் செய்தார்கள் நானும் சரி என்று சொல்லிவிட்டேன்

மாட்டுக்கறி உணவு ஆனாலும் முதல்முறை சாப்பிட்டபோது

ஆனாலும் முதல்முறை சாப்பிட்டபோது பெரிய பெரிய பீஸ்களாக இருந்ததால் ரசித்துச் சாப்பிட முடியவில்லை. மாட்டின் பெரிய உருவம் கண்முன் வந்துவந்து போனாது. அதன்பின்னர் பலநாட்கள் கழித்து நண்பர் ஜோ மில்டன் வீட்டில்தான் பீஃபை ரசித்துச் சாப்பிட முடிந்தது

ஆப்பம், சிக்கன் குழம்பு, ஃபீப் ரோஸ்ட் செய்திருந்தார்கள் அவ்வளவு ருசியாக இருந்தது. இப்போதெல்லாம் பீஃப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. கேரள உணவங்களுக்குச் சென்றால் பரோட்டாவும், பீஃப் ரோஸ்ட்டும்தான்

இதேபோலத்தான் போர்க்கும்(Pork). முதல்முறை நானே வாங்கி க்ரில் செய்தேன். சரியாக வரவில்லை. ஆனால் இரண்டாம் முறை ஒரு இயக்குனரின் பிறந்தநாள் விருந்தில் Rice with Pork Vindaloo பரிமாறினார்கள்

செமி கிரேவியாகச் செய்யப்பட்டிருந்த கொழுப்பு நிறைந்த அந்த பன்றிக்கறியை சோற்றுடன் கொஞ்சம் கொஞ்சமாகக் கிளறி சாப்பிட்ட அந்த அனுபவம் இருக்கிறதே!!! யப்பா!! இப்போது நினைத்தாலும் அப்ப்ப்படி இருக்கிறது!

ஆனால் மதங்களும், மதநம்பிக்கைகளும் போடாத முட்டுக்கட்டைகளே இல்லை. செவ்வாய்க்கிழமையும், வியாழக்கிழமையும் மட்டும் அசைவம் சாப்பிடவில்லை என்றால் கடவுளை ஏமாற்றிவிடலாம்

ஆட்டை சாப்பிடலாம் ஆனால் அதன் அண்ணன் மாடு கடவுள். அதிலும் எருமை மாடு கடவுள் அல்ல, பசுமாடுதான் கடவுள். எல்லாவற்றையும் சாப்பிடலாம் ஆனால் பன்றியைச் சாப்பிடக்கூடாது. இப்படி எத்தனை வெரைட்டியான முட்டாள்த்தனங்கள்!

மதநம்பிக்கைகள் இருப்பதோ, அதையெல்லாம் நம்பி சங்கிலியில் கட்டப்பட்டதைப்போல ஒரு லிமிட்டுக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வாழ்வதோ அவரவர் விருப்பம்

அதைப் பரப்புரை செய்யத்தான் எல்லோருக்கும் உரிமை இருக்கிறதேயொழிய அடுத்தவர் தட்டில் போய் கைவைக்கவோ, சாப்பிடுகின்றவரின் மேல் கைவைக்கவோ இல்லை

மிருகங்கள் கூட அதைச் செய்வதில்லை. ஒருவேளை அனிதா தூக்கில் தொங்கிய நாளன்று நாலுபேர் போய் பாஜககாரன்களின் மேல் கையை வைத்திருந்தால் அது நியாயம். ஆனால் அனிதாவுக்கு வராத கோபம் மாட்டுவால் சூப்புக்கு வருகிறதென்றால் பைத்தியம் பிடிச்சிருச்சு என்று பொருள்

மனிதன் வாழ்க்கையை ரசிப்பதற்கான (வாழ்வதற்கான அல்ல ரசிப்பதற்கான) அடிப்படை டிரைவ் உணவும், காதலும். இருக்கப்போவதும் ரொம்ப கொஞ்சகாலம் அதில் கொஞ்சம் நிம்மதியாக, சந்தோசமாக வாழ்ந்துதான் தொலைங்களேன்!!

டான் அசோக்
ஜூலை 13, 2019 #Beef4Life

Comments

0 comments

Related posts

சமைக்காமல் அப்படியே சாப்பிட வேண்டிய உணவுகள்

admin

கருங்காலிக் கசாயம் உடல் எடையைக் குறைக்க

admin

விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்

%d bloggers like this: