1-800-999-9999 — hi@loremipsum.com

மிசா நாட்கள் இந்தியாவின் கருப்புபக்கங்கள்

மிசா நாட்கள் இந்தியாவின் கருப்புபக்கங்கள் அதற்கு சற்றும் குறையாத கருப்பு நாட்களாய் இப்போதைய ஆட்சி நடக்கிறது 

அவசரநிலை இருண்டகாலமென்கிறார் மோடி மறுப்பதற்கில்லை மிசா நாட்கள் இந்தியாவின் கருப்புபக்கங்கள் தான் அதற்கு சற்றும் குறையாத கருப்பு நாட்களாய் இப்போதைய ஆட்சி நடக்கிறது ஆனால் அப்போது கூட பத்திரிக்கைகள் சுதந்திரமாய் முழு வலிமையோடு எதிர்த்தன  கட்டுபாடுகள் விதித்த போதும் மறைமுக தாக்குதல் தர தயங்கியதில்லை எந்த ஊடகத்தையும் இந்திராவால் தடுத்திட முடியவில்லை கெடுபடிகள் கடுமையான போதும் ஊடகம் அறத்தை மீறி செயல்படவில்லை சில ஊடகங்கள் கட்சி சார்பில் இந்திராவை பின்துணைத்தபோதும் அடிமைசாசனம் எழுதி தரவில்லை..

தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது மோடி அரசு

சட்டத்தை கடுமையாக்கி கைது மிரட்டல் சிறை என்று MISA வில் ஜனநாயக குரல்வளையை நெரித்தார் அதற்கும் சற்றும் குறைவில்லாமல் இருண்டகாலமாக ஜனநாயக மரபுகளை குழித்தோண்டி புதைத்துவிட்டு தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது மோடி அரசு..

மிசா நாட்கள் இந்தியாவின் கருப்புபக்கங்கள் தான் அதற்கு சற்றும் குறையாத கருப்பு நாட்களாய் இப்போதைய ஆட்சி நடக்கிறது.. எதை உண்ணவேண்டுமென அவசரநிலையில் கூட யாரையும் கொன்றதில்லை .. கருத்து சுதந்திரத்திற்கான தடை ஏறக்குறை மிரட்டபடுகிற அவலநிலை .. தனக்கு பிடிக்காதவர்கள் தன் கருத்தில் கொள்கையில் உடன்படாதவரை அச்சுறுத்தும் நிலை.. இந்தியர்களின் கடைசி நம்பிக்கை என நம்படுகிற நீதிமன்றங்களில் நேரடியாக தலையீடு.. நீதிபதிகளை மிரட்டல் கொலை .. சிறையென ஒருவித பீதியோடு இந்திய நீதிமன்றங்கள் .. மனசாட்சியோடு கதைப்பதாக சட்டத்தை காவு கேட்கின்ற நிலை.. தேர்தலில் இந்திராவையே தோற்கடித்த ஜனநாயக நாட்டில் வாக்குபதிவு இயந்திர தில்லுமுல்லுகள்.. தணிக்கத்துறை..புலனாய்வுத்துறை என எல்லாவற்றிலும் காவிய சிந்தனை.. யாரை கும்பிட வேண்டுமென கட்டளையிடாததுதான் பாக்கி.. தனிமனித சுதந்திரத்தை மதமென்று சொல்லி தலையிடும் அயோக்கியத்தனம்.. இதையெல்லாம் விட பணமதிப்பிழப்பு என்று அறிவிகெட்டத்தனமாக நடுஇரவில் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி கருப்புபணத்தை ஒழித்தேன் பாரென்று கடைசியில் 480 % விழுக்காடு அதிகமாக கருப்புபணம் புழங்கியதும்.. ஒரே வாரத்தில் அமிர்ஷா 745 கோடி கருப்பை வெள்ளையாக்கியதும் தான் இதெல்லாம் மிசாவில் இல்லை
..
ஒரு சிலரின் நலனுக்காக 97% விழுக்காடு இந்தியர்களையும் சமூகவிரோதியென கொக்கரிக்கும் திமிர்.. கல்வியில் குறிப்பாக ஒரு சமூக நலனுக்காக மற்றவர்கள் மீது தொடுக்கபட்ட போர்.. எளியவர்களின் உயர்கல்வி இனி எட்டாக்கனியாக்கி.. இயற்கை வளங்களை யாரையும் கேட்காமல் சுரண்ட.. ஒரு சில முதலாளிகளுக்காக சாமானியனின் உயிரை உடைமையை எடுக்கிற சர்வாதிகாரபோக்கு ..மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதம மந்திரி நாடாளுமன்றதிதில் நான்காண்டுகளில் 29 நாட்களே கலந்து கொண்டிருப்பதும்.. அதுவும் எதிர்கட்சிகளின் கேள்விக்கு பயந்து கோர்வையாக பேசிவிட்டு விவாதத்தில் கலந்துக்கொள்ளாமல் போவதும் .. ஊடகவியலாளர்களை சந்திக்காத பிரதமர் என்ற நிலை..
..
தன்னை சர்வாதிகாரியைப்போல நினைத்த இந்திரா தன் தவறுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.. கொலை கலவரம் எரிப்பு என புதியதொரு பாதையை வகுத்தவர்களைால் மதவெறியை தூண்டி இடைசாதி கடைசாதிகார்களை மோதவிட்டு ஒருவித பதட்டத்தோடு தேசத்தை வைத்திருப்பவர்கள் .. அவசரநிலைப்பற்றி கவலைபடுவது வேடிக்கையாக இருக்கிறது
..
ஜனநாயக நாட்டின் பட்டியலில் 17 இடத்திலிருந்து 42 வது இடத்திற்கு கொண்டுபோனது தான் (ஐநாஅறிக்கை) இவர்களின் லட்சணம்.. காங்கிரஸ் ஐம்பதாண்டுகளில் செய்யாத சாதனையாக
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்.. உலகிலேயே அதிக GST வசூலுக்கும் நாடு.. இதுதான் மோடி அரசின் சாதனை..
ஜனநாயக நெறிமுறைகளை மதிக்காத அரசு..
வீழ்த்தபடவேண்டியது அவசியம்..
..
ஆலஞ்சியார்

%d bloggers like this: