மீத்தேன் என்பது என்ன? | மீத்தேன் பாதிப்பு மீத்தேன் திட்டம் விளைவுகள்
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம்

மீத்தேன் என்பது என்ன? | மீத்தேன் பாதிப்பு

மீத்தேன் என்பது என்ன

மீத்தேன் என்பது என்ன மீத்தேன் பாதிப்பு பற்றி நாம் அறிந்து கொள்ள –

மீத்தேன் என்பது ஹைட்ரோகார்பன் அதன் குறியீட்டெண் CH4 – ஒரு கார்பன், நான்கு ஹைடிரஜன் அடங்கியது எளிதில் தீப்பிடிக்கக் கூடியது, எடை குறைவானது

இயற்கை எரிவாயுக்களில் அதுவும் ஒன்று  பூமிக்கடியிலிருந்து எடுக்கப்படும் மீத்தேன் வாயு உலகெங்கும் முக்கியமான எரிபொருளாகப் பயன்படுகிறது

புவியின் வளிமண்டலத்தில் மீத்தேன் பரவியிருக்கிறது. 1750இல் இருந்ததைவிட இப்போது 150% அதிகரித்துவிட்டது என்கிறார்கள் அறிவியலார்.

பசுமைமனை விளைவு ஏற்படுத்தும் வாயுவில் 20% மீத்தேன் என்கிறார்கள்.

மற்றொருபக்கம், நிலத்திலிருந்தும் கடலிலிருந்தும் இதர பொருட்களிலிருந்தும் தானாகவே வெளிவரும் மீத்தேன் வாயு வளிமண்டலத்தில் சேர்கிறது.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, கால்நடைகள் வெளியிடும் வாயு. பொதுவாக இதை cow burp – பசு ஏப்பம் என்று சொல்கிறார்கள். உண்மையில், பசுக்கள் மட்டுமே மீத்தேன் வெளியிடுவதில்லை.

கால்நடைகள் ஏப்பம் விடும்போது மீத்தேன் வெளிவருகிறது

ruminant animals என்றால் அசைபோடும் விலங்குகள் எனப்பொருள் குளம்புகள் கொண்ட அசைபோடும் விலங்குகள் எல்லாமே ஏப்பம் விடும்போது மீத்தேன் வாயுவை வெளிவிடும்

rumen என்றால், அசைபோடும் விலங்குகளின் வயிற்றில் உள்ள நான்கு அறைகளில் முதலாவது அறை

விலங்குகள் இரையை உண்டபின், இந்த முதல் அறையிலிருந்து மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து அசைபோடும்

ரூமென் அறைக்குள் பல்லாயிரம் மைக்ரோப்கள் இருக்கும். அந்த நுண்ணுயிரிகள்தான் உணவை செரிக்க உதவுகின்றன

அந்தச் செயல்பாட்டின் காரணமாகவே கால்நடைகள் ஏப்பம் விடும்போது மீத்தேன் வெளிவருகிறது

மீத்தேன் திட்டம் விளைவுகள் மீத்தேன் பாதிப்புகள்

அசைபோடும் விலங்குகள் என்பவற்றில் பசுக்கள், ஆடுகள், வெள்ளாடுகள், எருமைகள், எருதுகள், ஒட்டகங்கள் என எல்லா விலங்குகளும் அடங்கும்.

புவிவெப்பமடைவதில் கார்பன் டை ஆக்சைடுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதைவிட 25 மடங்கு அதிக பாதிப்பை மீத்தேன் ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

எனவே, பசு / மாடு மீத்தேன் வெளிவிடுவது பெருமைக்குரியதோ, பீற்றிக் கொள்வதற்கான விஷயமோ அல்ல.

மீத்தேன் குறைவாக வெளிவிடச்செய்யும் வகையில், கால்நடைகளுக்கு உணவில் மாற்றம் செய்யும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. கால்நடைகளின் தீனியில் 3-nitrooxypropanol என்னும் கலவையை சேர்ப்பதன் மூலம் ஏப்பத்தில் மீத்தேனை 30 விழுக்காடு குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

கால்நடைகள் எந்தளவுக்கு அதிகரிக்குமோ அந்த அளவுக்கு மீத்தேன் வாயும் அதிகரிக்கும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பும் ஏற்படும்

நாட்டில் மக்கள் தொகை என்ன, மேய்ச்சல் நிலம் எவ்வளவு என்பதற்கு ஏற்ற அளவில்தான் கால்நடைகளும் இருக்க வேண்டும்

அதற்கும் அதிகமான விகிதத்தில் கால்நடைகள் அதிகரிப்பது பிரச்சினைதான்

பி.கு. – கால்நடைகளின் சாணம் / குசுவிலிருந்தும் மீத்தேன் வெளிவருகிறது ஆனால் அது 5%தான். 95% ஏப்பத்தின் மூலமாகவே வெளிவருகிறது

மேலும் தகவலுக்கு, கமென்ட்களில் இணைப்புகளைக் காணலாம்
படம் – பசுக்களின் வாயில் குழாய்களைப் பொருத்தி மீத்தேன் எடுத்து கணக்கிடும் ஆய்வு.

Comments

0 comments

Related posts

தூத்துக்குடியில் நடந்த மக்கள் போராட்டம்  நடிகர் சூர்யா கட்டுரை

admin

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விலகும் மர்மங்கள்

admin
%d bloggers like this: