ம.பொ.சி.யின் சமஸ்கிருதப்பற்று
Uncategorized

ம.பொ.சி.யின் சமஸ்கிருதப்பற்று

ம.பொ.சி.யின் சமஸ்கிருதப்பற்று

ம.பொ.சி.யின் சமஸ்கிருதப்பற்று

ம.பொ.சி.யின் சமஸ்கிருதப்பற்று மேகசந்தேசம் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ம. பொ. சி.

வடமொழிக்கும், தமிழுக்கும் போட்டியோ, போராட்டமோ இருக்க நியாயமில்லை. வடமொழி, தென்மொழி வேற்றுமையோ விரோதமோ இல்லை.
சமஸ்கிருதம் அந்தணருக்கு மட்டும் உரிய மொழி என்பது அறியாமை.

சமஸ்கிருதத்தை ஒரு சாதியினரின் மொழியாக மட்டுமே பண்டைய தமிழர் கருதவில்லை. பாரதத்தின் பல்வேறு மொழிகளைப் பிணைக்கும் கலாச்சாரம் பொது மொழியாகவே கருதினர்.

கோவலன் வடமொழி கற்றான்.
(செங்கோல் 2-5-65)
இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்கிறார் ம. பொ. சி.இந்தியனாகிய நான் குமரி முதல் காஷ்மீரம் வரை பரவிக்கிடக்கின்ற பாரத நிலப்பரப்பிலே ஒவ்வொரு அங்குலத்தின் மீதும் சொந்தங் கொண்டாடுகிறேன்.

அதுபோல பாரத நாட்டிலுள்ள ஒவ்வொரு மொழியையும் எனது சொந்த மொழியாகக் கருதுகிறேன். ஆனால் தமிழ் மொழியை எனது தாய் மொழியாகக் கருதுகிறேன்.

அது என் வாழ்க்கை மொழியாக அமைந்து விட்டதால் இந்தியன் என்ற முறையிலே இந்து என்ற வகையிலே சமஸ்கிருதம் எனது கலாச்சார மொழியாகவே இருந்து வருகிறது.
(ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக். 5)

இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி சமஸ்கிருதமே என்று சொல்லப்படுகிறது. தமிழிடத்துப் பற்றுடையவர்கள் இதனை மறுக்கத் தேவையில்லை. (ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக். 19)

இன்றைய சூழ்நிலையில் தமிழ் நாட்டு இந்துக்கள் மத விஷயத்தில் மறுமலர்ச்சி அடைய வேண்டியிருக்கிறது. இந்திய தேசீய ஒருமைப்பாட்டுக்காவும் அது தேவைப்படுகிறது. அது தவறல்ல என்பதைநாம் உணர வேண்டும். இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் அவசியம் கருதியும் நான் சமஸ்கிருதத்தை வெறுக்க மறுக்கிறேன்
(ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.25 )

சமஸ்கிருத மொழியைப் பிழையறப் பயின்று புரோகிதத் தொழில் புரிவோர்இருப்பார்களாயின் அந்தப் புரோகிதர்களைக் கொண்டு தமிழர் தங்கள் வீட்டுத் திருமணங்களைச் செய்வதை ஏற்கலாம்.
(ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.38)

கல்வியின் ஒரு கட்டத்தில் தமிழகத்துப் பள்ளிகளில் சமஸ்கிருதமும் விருப்பப் பாடமாக இருக்கலாம்
(ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.40)

சமஸ்கிருதம் இந்துக்களின் பொது மொழியாக இருப்பதன் காரணமாக, இம் மொழியில் பீஜமந்திரம் என்று சொல்லப்படுகிறதே அதை மட்டும் திருக்கோயில்களில் அர்ச்சகர் பயன்படுத்தலாம். அதில் தவறில்லை. சமஸ்கிருத அர்ச்சனையை விரும்புவோருக்கும் தடைசொல்லத் தேவையில்லை. இது இந்து மதத்தவரின் ஒருமைபாட்டுக்கும் உதவிபுரியும்.
(ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.41)

__________________
ம.பொ.சியுடையது வலதுசாரி தமிழ்தேசியமே
அதே வலதுசாரி தமிழ்தேசிய சீமான் பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்பதும்,

இந்தியா, இந்துத்துவாவை எதிர்க்காமலிருப்பதும்

முப்பாட்டன் முருகன், வீரத்தமிழர்கள் முன்னணி பெயரில் தமிழர் மதமென்றப் பெயரில் புதிய மதம்,ஜாதி மூடநம்பிக்கைகளை திணித்து மக்களை பிரித்து வைக்கும் சதிவேலைகளில் ஈடுபடுகிறார்.

சீமான் இந்திய உளவுத்துறையின் வளர்ப்புப் பிராணியே

Comments

0 comments

Related posts

இந்திய மொழிகள் அனைத்தும் இந்திய உயர்- உச்சநீதிமன்றங்களில்  ஏற்று கொள்ளப்படுவதில்லை தெரியுமா?

admin

தேசிய நதிகளை இணைப்பதால், தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை

admin

இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ இய‌க்கங்க‌ளுக்கு நெத‌ர்லாந்து அர‌சு உத‌வி

admin
%d bloggers like this: