1-800-999-9999 — hi@loremipsum.com

யார் இந்த பியூஸ் மானுஷ் Who Is Piyush Manush ?

 

13697015_555863547955224_4628321212371599191_n

ஏன் இந்த பாராபட்சம்?!
…………………………………………………………………
சில நாட்களுக்கு முன் இஸ்லாமிய அறிஞர் ஜாஹிர் நாயக் மீது அவதூறு பரப்பபட்டு அவரை கைது செய்யும் சூழல் நிலவிய போது அதற்கு வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் ஜாஹிர் நாயக் அவர்களுக்கு முழுமையான ஆதரவும் தெரிவிக்கபட்டது எந்த அளவிற்கு என்றால் நான் ஜாஹிர் நாயக்கை ஆதரிக்கிறேன் என்ற ஆங்கில ஸ்லோகன் இந்தியாவில் (முகநூலில்) மூன்றாவது இடத்தில் இருந்தது

முகநூல் முழுக்க ஜாஹிர் நாயக் அவர்கள் குறித்த செய்தியையும், படத்தையும் பார்க்கவே கண் கொள்ளா காட்சியாக இருந்தது

ஆனால்…

அதற்கு சில நாட்களுக்கு பிறகு இயற்கை ஆர்வலர் சேலம் பியூஸ் கைது செய்ய பட்டதை எதிர்த்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும் வலைதளங்களில் செய்தி வந்தது ஆனால் அது அழைப்பாளர் மரியாதைக்குரிய ஜாஹிர் நாயக் அவர்களுக்கு கொடுக்கபட்ட ஆதரவில் பாதி கூட பியூஸிர்க்கு ஏன் இல்லை?!

ஜாஹிர் நாயக் இஸ்லாம் சொன்ன அழைப்பு பணியை இஸ்லாமியராக செய்கிறார்

பியூஸ் இஸ்லாம் சொன்ன நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் பணிகளை செய்கிறார் ஆனால் அவர் முஸ்லிம் இல்லை
ஒரு வேளை அவருக்கு ஆதரவு குறைய இதுதான் காரணமா??

இஸ்லாம் முஸ்லிம்களுக்கான மார்க்கமா?!
முழு உலகிற்குமான மார்க்கமா?!

இஸ்லாம் தீர்வு சொன்னது முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கா?!
முழு சமூகத்தின் பிரச்சினைகளுக்கா?!

பாபர் மஸ்ஜித், குஜராத், பர்மா, மாட்டுகறி, தீவிரவாத பொய் பிரச்சாரம் உள்ளிட்ட முஸ்லிம்கள் சந்திக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் முஸ்லிம்கள் மட்டுமா குரல் கொடுக்கிறார்கள்??
நூற்று கணக்கான முஸ்லிம் அல்லாத தொப்புள் கொடி உறவுகள் நமக்கு ஆதரவாக இல்லையா?!

ஏன் நமது பார்வை மட்டும் சுருங்குகிறது

மனித குல நன்மைக்காக இன்னும் சொல்வதானால் அதையும் தாண்டி அனைத்து உயிர்களின் நலனுக்காக பாடுபடும் அனைவருக்கும் ஆதரவு என்பதே சரியான நிலைபாடாக இருக்க முடியும்

Faizal Ahamed

13754359_10206833812468104_977564038881698646_n

 

கற்றது B.E

யார் இந்த பியூஸ் மானுஷ் ( Piyush Manush ) ?

 

1 தருமபுரி மாவட்டத்தில் உள்ள எர்ரப்பட்டியில் ஒரு காட்டை உருவாக்கியவர்

2 விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று விட்டு, நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருந்த நேரத்தில்,

3 இயற்கையின் மீதுள்ள பற்றால் நண்பர்களுடன் சேர்ந்து ஏறக்குறைய 100 ஏக்கர் நிலத்தை வாங்கி , அதில் ஏக்கருக்கு 1300 மரங்கள் வீதம் ஒரு லட்சத்து முப்பதாயிரம் மரங்கள் நட்டு பாதுகாத்து வருகிறார்.

4 ” சேலம் மக்கள் குழு ” என்ற அமைப்பின் மூலம் பல ஏரிகளை தூர்வாரி சுத்தம் செய்திருக்கிறார்.

உதாரணத்திற்கு

மூக்கனேறி , அம்மாபேட்டை ஏரி, குமரகிரி ஏரி.

5 சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 35 கன்டெய்னர் லாரிகளில் இரவு பகல் பாராமல் சேலம் மக்கள் குழு மூலம் பொருட்களை அனுப்பியவர்.

6 இதுமட்டுமல்லாமல் கெம்ப்ளாஸ்ட் மற்றும் ஜிண்டால் நிறுவனங்களை வரவிடாமல் தடுத்தார்.

எதற்காக கைது செய்யப்பட்டார் ?

சேலத்தில் முள்வாடி பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட அரசாங்கம் முடிவு செய்தது. அதற்காக

நிலம் ஆர்ஜிதம் செய்யாமல்
இழப்பீடு வழங்காமல்
மாற்று வழிகளை ஏற்படுத்தாமல்

அரசு அதிகாரிகள் கட்டுமான பணிகளை தொடங்கியதால் , அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர் தான் இந்த பியூஸ் மானுஷ்.

அனைவரும் இதை ஷேர் செய்யுங்கள்.
அவர் விடுதலையாகும் வரை.

இவரைப் பற்றிய விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

Piyush Manush

நன்றி . Thiru Murthy niyas ahmed

%d bloggers like this: