Tamil Cinema News

யுத்தங்கள் எவ்வாறு முதலாளிகளின் பணப் பைகளை நிரப்புகின்றன?

யுத்தங்கள்
லெனின் பற்றிய கட்டுரை எழுதியது கலை மார்க்ஸ்

யுத்தங்கள் எவ்வாறு முதலாளிகளின் பணப் பைகளை நிரப்புகின்றன?
ஓர் இஸ்ரேலிய உதாரணம்:
2006 ம் ஆண்டு, இஸ்ரேல் லெபனான் மீது படையெடுத்தது. அந்த நேரம் இஸ்ரேலில் பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் அதிகரித்தன. இஸ்ரேலிய நிறுவனங்கள், படையெடுப்பை ஆதரித்தது மட்டுமல்லாமல், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விளம்பரம் செய்து இலாபம் தேடிக் கொண்டனர்.
2008, 2009 ம் ஆண்டுகளில் காசா மீது குண்டு வீசப் பட்டது. இஸ்ரேலிய தயாரிப்பான Elbit ட்ரோன் போட்ட குண்டுகள், எந்தளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது என்று நிரூபித்தார்கள். இந்தத் தாக்குதல்களில் எடுத்த படங்கள் ஆயுத சந்தையில் காட்டப் பட்டன.
நகர்ப்புற கெரில்லாக்களுக்கு எதிராக பாவிக்கக்கூடிய தமது ஆயுதங்களின் திறனை எடுத்துக் காட்டினார்கள். காசா தாக்குதல்கள் பாலஸ்தீனர்கள் மத்தியில் மிகப்பெரும் பேரழிவையும் உயிரிழப்பையும் உண்டாக்கி இருந்தது.
2001 செப்டம்பர் 11 தாக்குதலை இஸ்ரேல் தனது ஆயுத உற்பத்தியைப் பெருக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டது. சமாதானத்தை விட உள்நாட்டு பாதுகாப்பே முக்கியம் என்று கூறி, சமாதான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. தமது நாட்டினுள் பயன்படுத்தப் பட்ட பயங்கரவாத எதிர்ப்புப் போர்க்கருவிகளை உலகம் முழுவதும் விற்பனை செய்யும் சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டது. இந்தக் காலகட்டத்தில் இஸ்ரேலின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
(நன்றி : Handelaren des Doods, De internationale wapenhandel, Andrew Feinstein)  Written & Translated By Kalai Marx ஹிட்லர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?

Comments

0 comments

Related posts

தைமூர் அரசர் பேரைக் கேட்டதுமே சும்மா அதிரும்!

admin

அமெரிக்கா வின் பயங்கர வாத செயல்

admin

A selfie With Clinton,

admin
%d bloggers like this: