1-800-999-9999 — hi@loremipsum.com

ரஜினி படங்கள் எல்லாம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது

ரஜினி படங்கள் எல்லாம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது

ரஜினி படங்கள் எல்லாம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது ரஜினிக்கும் மணிரத்தினத்திற்கும் ”பெயர்” இருக்கிறது என்கிறார் பதிவாளர்  அது பெயர் அல்ல பார்ப்பனிய ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட ”வீக்கம்”. 2000 இல் வெளியான பாபா படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
அதிலிருந்து இன்றுவரை வந்த ரஜினி படங்கள் எல்லாம் சந்திரமுகி தவிர மற்றவை எல்லாம் கடும் நஷ்டத்தைத்தான் தந்திருக்கிறது. நான் திரையுலகத்தினரோடு பலவகைகளில் தொடர்பில் இருப்பதால் எனக்கு ஆத்தென்டிக்கேட்டாக வந்த செய்திகள்.

ரஜினி படத்தின் தயாரிப்பு முறை இவ்வாறுதான்

1)தயாரிப்பாளர்கள்
2)மாநிலம் வாரியாக அவுட் ரைட் வாங்குபவர்கள்

பி ஜெ பி யால் இந்துமக்களுக்கு என்ன லாபம்

3) விநியோகஸ்தர்கள்
4)திரையரங்கு உரிமையாளர்கள்

இதில் யார் வேண்டுமானாலும் நஷ்டம் அடையலாம்.
அது அந்த படத்தின் விற்பனை முறையை பொறுத்து உள்ளது.
ஆனால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு படமும் வணிக ரீதியாக லாபத்தை தரவில்லை.

1) பாபா, குசேலன்- விநியோகஸ்தர்களுக்கு கடும் நஷ்டத்தை தந்த படம். நஷ்டத்தில் ஒரு பகுதியை தயாரிப்பாளரும் ரஜினியும் ஏற்றுக்கொண்டனர்.

2) கோச்சடையான்- தயாரிப்பாளர் படத்தை வெளியிட முடியாமல் போய் அதை ரஜினி குடும்பமே வெளியிட்டு பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதில் விநியோக உரிமை தருவதாக பணம் வாங்கி ஏமாற்றி உச்சநீதிமன்றம் வரை போய் லதா ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவித்து அரெஸ்ட் வாரண்ட் வரைக்கும் போனது. பணத்தை திருப்பிக் கொடுக்க மூன்று மாதம் அவகாசம் தந்துள்ளது. அந்த தயாரிப்பாளருக்கும் இதுவரை பணம் தராமல் ஒரு படம் பண்ணி தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.

3) சிவாஜி – ஏவிஎம் மின் படம். தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம். சென்னை செங்கல்பட்டு நீங்கலாக அனைத்து விநியோகஸ்தர்களும் நஷ்டத்தை சந்தித்தனர். யாருக்கும் பணம் திருப்பித் தரப்படவில்லை.

4) எந்திரன்- சன்டிவி தயாரிப்பு. நேரடியாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு எம்ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி சிஸ்டத்தில் லாபத்திற்கு விற்றார். சென்னை தவிர அனைத்து திரை அரங்கு உரிமையாளர்களும் ஆளுக்கு நான்கைந்து லட்சம் என நஷ்டமடைந்தனர். சன்டிவி யாருக்கும் பணம் திருப்பித் தரவில்லை.

5) லிங்கா- தயாரிப்பாளர் மாநிலம் வாரியாக அவுட்ரைட்டுக்கு விற்று விட்டு போட்ட பணத்தில் முக்கால் பங்கு வாங்கி மீதம் நஷ்டம் அடைந்தார். அவுட்ரைட் வாங்கியவர் ஏகப்பட்ட நஷ்டம் அடைந்து ஆளே அப்ஸ்காண்ட் ஆனார். தயாரிப்பாளர், அவுட்ரைட் வாங்கியவர், விநியோகஸ்தர்கள், திரை அரங்குகள் உரிமையாளர்கள் என அனைவரும் தலையில் முக்காடை போட்டுக் கொள்ள வைத்த படம். கொஞ்சம் பணம் திருப்பி தரப்பட்டதாக செய்தி.

6) கபாலி- தயாரிப்பாளர் தாணு. சென்னை புறநகர்களில் தாணு நேரடியாக திரையரங்குகளில் முதல் மூன்று நாட்களுக்கு ஆயிரத்து ஐநூறு, ஆயிரம் என்று டிக்கெட் விலை பேசி எம்ஜியில் விற்றார். மற்ற மாவட்டங்களில் விநியோகஸ்தர்களுக்கு விற்றார்.
தாணுவுக்கு லாபம். சென்னை, புறநகர் அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ஆளுக்கு பத்து லட்சம் பதினைந்து லட்சம் என்று நஷ்டம் அடைந்தனர். மற்ற மாவட்ட விநியோகஸ்தர்கள் ஆளுக்கு இரண்டு மூன்று கோடி நஷ்டம் அடைந்தனர். யாருக்கும் பணம் திருப்பி தரப்படவில்லை.

இதுதான் ரஜினி படங்களின் வெளிவராத உண்மை. யாரோ ஒருவருக்கு லாபம் இருக்கும். மற்றவர்களுக்கு நஷ்டம் பகிர்ந்தளிக்கப்படும்.

இருந்தும் ஏன் ரஜினியை வைத்து படம் எடுக்கிறார்கள்?
இந்தக் கேள்விக்கு பதில் தருவது கடினம்.
மணிரத்தினம் படங்கள் இந்த பதினைந்து ஆண்டுகளில் ஒரு படத்தை தவிர எதுவும் ஓடவில்லை. ஆனால் எப்படி மணிரத்தினம் படம் எடுத்துக் கொண்டேயிருக்கிறார் ?

“பெயர் “! அது வந்து விட்டால் போதும் ! நீங்கள் தடுக்கி விழும்போது கூட என்ன அருமையாக தலைவர் குட்டிக்கரணம் போடுகிறார் என்று கைதட்ட ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்!

ஒரு விஷயம் மட்டும் உண்மை !
ஒவ்வொரு ரஜினி படம் வெளியிடப்படும்போதும் ஒரு குடும்பமோ அல்லது பல குடும்பங்களோ நடுரோட்டுக்கு வந்து விடுகின்றன என்பதுதான்.

~ Rajagopal Meenatchisundaram

 

%d bloggers like this: