ரஸ்யாவின் மறைக்க பட்ட ரகசிய நகரம்

ரஸ்யாவின் ஆச்சிரிய படவைக்கும் ரகசிய நகரம்

ரஸ்யாவின் மறைக்க பட்ட ரகசிய  நகரம்  ர‌ஷ்யாவில் “ந‌க‌ர‌ம் எண் 40” என்ற‌ இர‌க‌சிய‌ ந‌க‌ர‌ம் உள்ள‌து. சுமார் ஒரு மில்லிய‌ன் பேர் வ‌சிக்கும் அந்த‌ ந‌க‌ர‌த்தில் எல்லா வ‌ச‌திக‌ளும் உள்ள‌ன‌. அங்குத் தான் அணுக் குண்டு செய்யும் தொழிற்சாலையுள்ள‌து. அணு விஞ்ஞானிக‌ள் குடும்ப‌த்தோடு த‌ங்கியிருக்கின்ற‌ன‌ர்.

 1. சோவிய‌த் யூனிய‌ன் இருந்த‌ கால‌த்தில், ஸ்டாலின் காலத்தில் அந்த‌ ந‌க‌ர‌ம் க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து. அந்த‌ ந‌க‌ரை நிர்மாணித்த‌வ‌ர்க‌ளும், அங்கு வ‌சிப்ப‌வ‌ர்க‌ளும், ஸ்டாலின் கால‌த்தில் “த‌ண்ட‌னைக் கைதிக‌ளாக‌” அனுப்ப‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள். அத‌னால் வெளியுல‌குட‌ன் தொட‌ர்ப‌ற்று த‌னித் தீவாக‌ வாழ‌ வைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

  மறைக்க பட்ட ரகசிய நகரம்
 2. சோவிய‌த் கால‌த்தில் எந்த‌ப் பொருளுக்குத் த‌ட்டுப்பாடு இருந்தாலும் அங்கே எல்லாம் தாராள‌மாக‌ கிடைத்த‌ன‌.
 3. அங்கு வேலை செய்ப‌வ‌ர்க‌ளின் ச‌ம்ப‌ள‌மும் அதிக‌ம். (இப்போதும் எப்போதும்). இன்றைய‌ ர‌ஷ்யாவில் கூட‌ மிக‌வும் பாதுகாப்பான‌ ந‌க‌ர‌ம். இர‌வு 12 ம‌ணிக்கும் பிள்ளைக‌ள் த‌னியாக‌ச் செல்ல‌க்கூடிய‌ அள‌வுக்கு பாதுகாப்பான‌து.
 4. ந‌க‌ர‌ம் எண் 40 ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் பார்க்க‌க் கிடைத்த‌து. அங்கு இப்போதும் வெளியூர்க் கார‌ர்க‌ள் செல்ல‌ முடியாது
  இர‌க‌சிய‌மாக‌ க‌மெரா கொண்டு சென்று ப‌ட‌மாக்கி இருக்கிறார்க‌ள்.
  மேற்க‌த்திய‌ தயாரிப்பான‌ அந்த‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம், அணுக் க‌திர் வீச்சால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் பிர‌ச்சினையை ஆராய்கிற‌து. அங்கு வாழும் மக்க‌ளுக்கு எந்த‌க் குறையும் இல்லாத‌ போதிலும், அணுவைப் பிள‌க்கும் தொழில‌க‌த்தில் வேலை செய்ப‌வ‌ர்க‌ள் கதிர் வீச்சுக‌ளால் பாதிக்க‌ப் ப‌டுவ‌து ம‌ட்டுமே பிர‌ச்சினை.
 5. மறைக்க பட்ட ரகசிய நகரம் குழைந்தைகள் விளையாடும் காட்சி

  அந்த‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் இன்னொரு உண்மையும் சொல்கிற‌து. ஸ்டாலின் கால‌த்தில் த‌டுப்பு முகாம்க‌ளில் த‌ண்ட‌னை அனுப‌வித்த‌ ப‌ல‌ர் இது மாதிரியான‌ ந‌வீன‌ ந‌க‌ர‌ங்க‌ளை அமைத்த‌ன‌ர். அங்கு இப்போது முன்னாள் கைதிக‌ளின் பிள்ளைக‌ள் வ‌ச‌தியாக‌ வாழ்கின்ற‌ன‌ர்.

 6. City no 40 in Russia, Read more news in English
 7. Written By Kalai Marx