ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை
ஆளுமைகள்

ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை

ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை

ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை

மதிகெட்ட தமிழினவாதிகள் மறைக்கும் ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை!  ராஜராஜ சோழனின் சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட காலத்தில், பாண்டிய நாட்டையும், ஈழ நாட்டையும் ஆக்கிரமித்த சோழப் படைகள் அங்கு வாழ்ந்த மக்களை பிராமணர்கள், தமிழர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்த வித்தியாசமும் பாராமல் இனப்படுகொலை செய்துள்ளனர்

சோழப் படைகள் சென்றவிடமெல்லாம் மக்களை இனப்படுகொலை செய்வதும், சொத்துக்களை சூறையாடுவதும் வழமையானவை

அயல்நாடுகளில் வாழ்ந்த மக்கள் சோழ இராணுவத்தைக் கண்டு அஞ்சினார்கள் ஆனால், படுகொலைகளையும், சூறையாடுவதையும் சோழர்கள் பெருமையாகக் கருதிக் கொண்டனர்

பிற நாடுகளை ஆக்கிரமித்து கொள்ளையடித்த செல்வங்களில் ஒரு பகுதி கோயில்களுக்கு தானமாக வழங்கப் பட்டது. ஒரு கட்டத்தில் ராஜராஜசோழன் முன்னூறு கிலோ தங்கம் தானம் கொடுத்ததாக குறிப்பொன்று தெரிவிக்கின்றது

சோழ நாட்டு பொருளாதாரம் கோயில் நகரங்களில் தங்கி இருந்தது. பெருமளவு நிலங்களை கையகப் படுத்தி வைத்திருந்த, கோயிலை மையமாகக் கொண்டு இயங்கும் நகரங்களில் ஆதிக்கம் செலுத்திய வணிகர் சங்கங்கள் அரசனுக்கு வரி கட்டுவதில்லை. ஆகையினால், அரச கஜானாவை நிரப்புவதற்காக அயல் நாடுகள் மீது படையெடுத்து கொள்ளையடிப்பதை சோழர்கள் ஒரு கொள்கையாக வைத்திருந்தனர்

Written by Kalai Marx

(ஆதாரம்: Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula, by Paul Michel Munoz

Comments

0 comments

Related posts

 அண்ணல் அம்பத்கேர் சிறப்புக்கள்

admin

வயது முதிர்ந்த பெரியவரின் சோகம்

admin

காலையிலா சாயங்காலத்திலா உயரம் அதிகமாக இருப்போம்?

admin
%d bloggers like this: