ராணுவ ஆக்கிரமிப்பு நிலம் அகற்றம்நில உரிமை சட்டம் 

சோழவரம் ஆட்டந்தாங்கள் இராணுவ ஆக்கிரமிப்பு நிலம் அகற்றம்

சோழவரம் ஆட்டந்தாங்கள் இராணுவ ஆக்கிரமிப்பு நிலம் அகற்றம்

சோழவரம் ஆட்டந்தாங்கள் ராணுவ ஆக்கிரமிப்பு நிலம் அகற்றம், 3/82019 அன்று செங்குன்றம் அருகில் உள்ள அத்தாந்தாங்கள் கிராமம் அடங்கிய ராணுவ ஆக்கிரமிப்பு அகற்றும் வேலைகள் மற்றும் தற்காலிக குடில் அமைக்கும் பணி நடந்தது

கைவிடப்பட்ட இரண்டாம் உலகப் போரின் பொழுது வாங்கப்பட்ட விமான படைக்கு சொந்தமான நிலத்தை புதுப்பிக்க ஷோலவரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை இந்திய விமான படை மீட்டெடுக்கிறது

சென்னை: பாதுகாப்பு அமைச்சகம் (MoD) சோழவரம் ராணுவ விமான நிலையத்தை கைவிட்டு அரை நூற்றாண்டுக்கு மேலாகியும், இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஆக்கிரமித்த நிலத்தை மீட்டெடுக்கத் தொடங்கியுள்ளது

தற்பொழுது அப்பகுதியில் பல்வேறு தொழில் செய்யும் மக்கள் அனைவரும் அது பொறம்போக்கு நிலமென்று நினைத்து அப்பகுதி நிலத்தை பணம் கொடுத்து வங்கியுள்ளார்கள் தற்பொழுது சில நாட்களாகலாக இந்திய ராணுவம் அதை கைப்பற்ற நினைக்கிறது

ஆகவே அப்பகுதி பொறம்போக்கு நிலத்தில் வீடு கட்டிய மக்கள் அனைவரும் தங்கள் வாழ்நாள் சேமிப்பெல்லாம் இப்படி ஆகிவிட்டதே என்று அச்சத்திலும் கவலையிலும் உள்ளனர்

மேலும் சோழவரம் ஆட்டந்தாங்கள் கட்டுநாயக்கன் மற்றும் பம்மாத்துக்குளம் பகுதில் சில ஆக்கிரமிப்புகளை ராணுவ அதிகாரிகள் இடித்தனர்

அதோடு அல்லாமல் ஆட்டந்தாங்கள் பகுதியில் உள்ள வீர பாண்டி நகர் மற்றும், பம்மதுக்குளம் ஈஸ்வரன் நகர் போன்ற குடியிருப்பு பட்டா நிலத்தினை ராணுவ அதிகாரி ஒருவர் பத்திர பதிவு செய்ய தடைவிதித்து பதிவுத்துறை முதன்மை தலைவருக்கு கடிதம் அனுப்பியத்தின் பெயரில் கடந்த மூன்று மாதமாக பத்திர பதிவு செய்யாமல் அமலில் உள்ளது

குடியிருப்பு பட்டா நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை

பகுதியில் புல எண் 597 598 596 601 602 உள்ளிட்ட நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறி அந்தக் கிராமத்தை சேர்ந்த குடியிருப்போர் நல சங்கம் தலைவர் சுரேஷ் செயலாளர் தேவராஜ் பொருளாளர் அபுதாஹிர் மற்றும் 80க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் திருவள்ளுர் மாவட்ட ஆட்சி தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு அளித்தனர்

( இதுகுறித்து இக்கடிதம் அனுப்பிய ராணுவ அதிகாரியிடம் அந்நகர் குடியிருப்பு வாசிகள் கேட்டதற்கு நாங்கள் எங்களது எங்களது சர்வே என்னை தான் கடிதத்தில் கொடுத்தோம் தனிப்பட்ட முறையில் தனியாரின் சர்வே என்னை கொடுத்து தடை கோரவில்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்கள் என்று குறிப்பிட்டார்)

மேலே குறிப்பிட பட்ட சர்வே எண்ணிற்குள்ளர்தான் ராணுவ இடமும் குடியிருப்பு பட்டா இடமும் வருகிறது

ராணுவ அதிகாரியின் கடிதம் வந்தததும் பதித்துறை அதிகாரியும் சர்வே எண்ணில் உள்ள உட்பிரிவு கோரவும் இல்லை

அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளின் அலட்சியம்

ராணுவ அதிகாரியின் கடிதத்ததில் உட்பிரிவு குறிப்பிட பாடவும் இல்லை கடிதத்தில் குறிப்பிட்ட இந்த 597 598 596 601 602 என் யாருடையதும் அல்ல அதில் இருக்கும் தனி பட்ட உட்பிரிவுதான் அவரவர்க்கு சொந்தம்

அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளின் அலட்சியத்தால் பட்டா நிலம் வைத்துள்ளோர்கூட தங்களது நிலத்தினை அவசரத்திற்கு விற்கவோ அடமானம் வைக்கவோ முடியாமல் தவிக்கின்றனர்

மேலும் ஈஸ்வரன் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு சிறிய கட்டிடத்தை இன்று எந்த முன் அறிவிப்புமின்றி இடித்தும் விட்டார்கள் மேலும் அகட்டிடத்தை இடிக்கும் பொழுது அவர்களுக்கே தமது நிலம் எதுவென்று கன்று கொளவதில் பிரச்னை இருப்பது போல் தெரிகிறது

மேலும் அந்த ராணுவ அதிகாரிகள் குறிப்பிடுவது என்னெவன்றால் எங்கள் நிலத்தினை எவர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் விடமாட்டோம் பட்டா நிலத்தில் உள்ள தனியாரின் நிலம் எங்களுக்கு தேவையில்லை என்று சொல்கிறார்கள்

ஆனால் குறிப்பிட்ட நாகர்களின் பத்திர பதிவு க்கு கொடுக்க பட்ட தடையை வாபஸ் பெறாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்

தங்ககள் செய்யும் அநீதி அவர்களுக்கு தெரிய வில்லையா?

அவர்களின் நிலத்தினை பாதுகாக்க காட்டும் முனைப்பை மற்றவர்களின் நிலத்தினை விற்க விடாமல் செய்து மக்களின் உரிமையை பறிப்பது எந்த வகையில் நியாயம் தங்ககள் செய்யும் அநீதி அவர்களுக்கு தெரிய வில்லையா?

 

படித்து விட்டு பகிருங்கள் உலகம் அறியட்டும் நன்றி அபுதாஹிர்

Related posts

%d bloggers like this: