குழந்தையின் யோனியை குத்திக் கிழிக்கும் ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள்
தமிழ் ஆன்மிகம்

குழந்தையின் யோனியை குத்திக் கிழிக்கும் ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள்

ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள்

குழந்தையின் யோனியை குத்திக் கிழிக்கும் ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள்

ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள் தேர்ந்தெடுந்தது குருசேத்திர போரை அல்ல குழந்தையின் யோனியை
குத்திக் கிழிக்கும் குரூர போரை.

அன்பின்குறி அறுத்த
ஆண்குறி…

மலாலாவின் மரபில்
வந்த அவளை
தோட்டாக்கள் துளைக்கவில்லை
மாறாக – அவளின்
துளையில் ஆதிக்கத்தைத்
திணித்தனர்…

குதிரை மேய்ப்பாளை
எந்த மெய்ப்பரும்
காக்கா தருணம் ஒன்றில்

நிலவுடைமையே ஆதிக்கத்தின் மூலம் என்ற
ஆசான் மார்க்சின் கூற்றுப்படி
பெரும்பாண்மை இந்துகளின் நிலம்காக்க
அவளைக் கூறுபோட்டார்கள்…

இஸ்லாம் குடும்பங்களை
மிரட்டி ஓட வைக்க
ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள்
தேர்ந்தெடுந்தது
குருசேத்திர போரை அல்ல
குழந்தையின் யோனியை
குத்திக் கிழிக்கும்
குரூர போரை..

ராமனும் சீதையும்
லவ குசனுக்கு பதிலாய்
லட்சுமியையோ குந்தியையோ ஈன்றிருந்தால்
உன் கடவுளின் பிள்ளையையும்
“ஜெய் ஸ்ரீராம்” ஸ்லோகத்துடன்
புணர்ந்திருப்பாய் தானே?

மாதவிடாய் கூட
கண்டிராத பிஞ்சு உடல்
உன் வன்புணர்வு அரிவாளால்
ஆயிரம் முறை கிழிக்கப்பட்டு
துடித்திருக்கும் தானே! !

பசியும் பயமும்
வாட்டிய அந்த இருட்டு அறையில்
பாலியல் வன்முறையை
நொடி நொடியாய்
செலுத்திய அவனின்
கால்சட்டையின் பட்டன்களை
அவிழ்த்தது எம்மதம்?

பெண்ணின் உடல் மீது
கௌரவத்தை புதைத்த மதமும்
அவளின் உடலைத் தீண்டி
இனத்தின் கௌரவத்தை குலைத்ததாய்
பெருமைக்கொண்ட மதமும்
அவளின் மயிருக்கு சமம்..

இனி…                            ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள்

காவி நிறத்தைப் பார்த்தால்
வழிந்தோடிய
அவளின் உதிரக் கறை
நினைவுக்கு வருமே? ?

காக்கி உடையைப் பார்த்தால்
“நானும் ஒரு வாட்டி ”
எனப் பிஞ்சினை
பிச்சி எறிந்த
அவனின் கோர முகமாய்த் தெரியுமே!!

கோயில் மணியைக் கேட்டால்
நீ அமிழ்ந்து அமிழ்ந்து
அழுத அசாரிரீ ஒலிக்குமே…

ஊதா நிற சட்டையைப் பார்த்தால்
பூவே…
கிழித்து எறியப்பட்ட
நீயே தெரிவாயடி…

அன்பு மகளே ஆஷிப்பா…

உன்னைப் வன்புணர்ந்தவன்
இங்கே
எங்களின் மார்புகளை உற்றுநோக்குகிறான்
பேருந்தில் உரசுகிறான்
காதல் கொலை செய்கிறான்
கணவனாய் வன்புணர்கிறான்
குடித்துவிட்டு அடிக்கிறான்
அதிகாரியாய் கருத்து சொல்கிறான்
அத்துமீறி எழுதுகிறான்

அவனுக்கு பெயர்கள்தான் வேறு! !

ஆஷிபா
மறந்துவிடாதே! !!

கோவிலில்
சிலையாய் நின்ற
கடவுள்களை
செருப்பால் அடி…

உன்னை வன்புணர காரணம்
உன் யோனி மட்டுமே அல்ல
உன் பெயர்
ஆஷிப்பா ஆதலால்..!!

நினைவில்கொள்…

நஸீமா பீவிக்களின்
கருவில் உதித்தாலும்
அனைத்து ஆஷிப்பாக்களும்
எங்கள் மகள்களே ….!!!

-திலகவதி திலோ

Comments

0 comments

Related posts

எவ்வித எதிர்பார்பும் இல்லாத தன்னலமற்ற ஆம்புலன்ஸ்கள் தயார்நிலையில்

admin

இறை அருளை வரவேற்கும் பூஜையறை

admin

உலகிலேயே முதல் பணக்கார மதம் யூதமதம்

admin
%d bloggers like this: