வாஸ்து வடமேற்கு மூலைதமிழ் வாஸ்து 

வாஸ்து வடமேற்கு மூலை | வாஸ்து முறைப்படி வீடுகளில் மூலை

வாஸ்து வடமேற்கு மூலை, வாஸ்து முறைப்படி வீடுகளில் மூலை

= வீடுகளில் வடமேற்கு மூலை ஒரே அறை மட்டும் இருக்கும் வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு பெரும்பாலும் அது சமையலறையாக இருக்கும் அதில்கூட அவர்கள் அக்னி பாகத்தில் அடுப்பை வைத்து சமையல் செய்து கொண்டிருப்பதை காணலாம்.

அந்த அளவுக்கு அக்னி பாகமானது சமையல் கட்டு அமைப்பதற்கான இடம் என்பது மக்களின் மனதில் பதிந்து விட்டது

நமது இன்றைய உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகிய காரணங்களால் இல்லத்தரசிகளின் ஒரு நாளின் பெரும்பொழுது சமையலறையில் செலவழிக்கப்படுகிறது

கட்டிடவியல் வல்லுனர்களும் அவர்களது வசதிகளையும், விருப்பங்களையும் கருத்தில் கொண்டு சமையலறை வடிவமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்

வாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை

கட்டப்படும் அனைத்து வீடுகளிலும் அக்னி பாகமான தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பது என்பது ஒரு சில இடங்
களில் நடைமுறை சாத்தியமாக இருப்பதில்லை

சில தனி வீடுகளில் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் ஈசானிய பாகத்தில்கூட சமையலறை அமைக்கப்பட்டிருப்பதை பலர் கவனித்திருக்கலாம்

ஈசானிய பகுதி என்பது தண்ணீர் தத்துவத்தை குறிப்பதால் அங்கு சமையலறை அமைப்பதை  சாஸ்திரம் ஏற்றுக்கொள்ளவில்லை

அக்னி தத்துவத்தை குறிக்கும் தென்கிழக்குதான் சமையலறைக்கான முதல் தேர்வாக வாஸ்து குறிப்பிடுகிறது

அவ்வாறு அமைக்க இயலாத சூழ்நிலையில் இரண்டாம்பட்சமாக வாயு தத்துவத்தை குறிப்பிடும் வடமேற்கு பகுதியில் சமையலறையை அமைக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது

காற்று தத்துவம்

வடமேற்கு என்பது பெண்களுக்கு உகந்த திசையாக இருப்பதோடு, நெருப்புக்கும் காற்றுக்கும் உள்ள தொடர்பை மையப்படுத்தி சமையலறைக்கான இரண்டாம்பட்ச இடமாக  சாஸ்திரம் குறிப்பிடுகிறது. பெரும்பாலும் ஒரு வீட்டின் தலைவாசல் தெற்கில் அமைந்திருக்கும்போது சமையலறையை வடமேற்கில் அமைக்க வேண்டியதாக இருக்கும். பொதுவாக, தென்கிழக்கில் சமையலறை அமைக்க முடியாத வீடுகளில் வடமேற்கை தேர்வு செய்வது நல்ல பலன்களை ஏற்படுத்தும்.

வாயுமூலை சமையலறை

வீட்டின் வடமேற்கு பகுதியில் சமையலறை அமைக்கும்போது கிழக்கு நோக்கி நின்றுதான் சமைக்க வேண்டும்.

அதற்காக அறையின் தென்கிழக்கு மூலையில் அடுப்பை வைக்க வேண்டும். ‘வாஷ் பேசின்’ அல்லது ‘சிங்க்’ வடகிழக்கு மூலையில் வருவதுபோல அமைத்துக்கொள்ளவேண்டும்.

‘ஸ்டோரேஜ் ஷெல்ப்’ அல்லது அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு சுவரை ஒட்டியவாறு இருக்கவேண்டும். சிறிய அளவிலான ‘டைனிங் டேபிள்’ போடவேண்டியதாக இருந்தால் மேற்கு அல்லது தெற்கு திசைகள் பொருத்தமாக இருக்கும்.

பொதுவான வாஸ்து  நம்பிக்கைகள் 

பழைய வாடகை வீட்டிலிருந்து வேறொரு வீடு மாறிய ஒரு சிலருக்கு வடமேற்கு சமையலறை இருப்பதுபோன்று வீட்டின் கட்டமைப்பு அமைந்திருக்கும். அப்படிப்பட்ட வீட்டுக்கு வந்தது முதலாக வாழ்க்கையில் பல நல்ல சம்பவங்கள் நடப்பதாக உணர்வார்கள். அதற்கு வாஸ்து ரீதியாக மற்ற சரியான அமைப்புகள் துணையாக இருந்திருக்கலாம் என்ற நிலையில் சமையலறையை வைத்து மட்டும் அவ்வித முடிவுக்கு வருவது சரியல்ல என்று வாஸ்து நிபுணர்கள் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. மேலும், வடமேற்கில் சமையலறை உள்ள வீட்டுக்கு அதிக அளவில் உறவினர்கள் வருவதாகவும் ஒரு கருத்து இருந்து வருகிறது. அதுவும் வெறும் நம்பிக்கையை சார்ந்த விஷயமாக மட்டும்தான் பார்க்கவேண்டும் என்றும் வாஸ்து நிபுணர்கள் சொல்கிறார்கள்.

வாஸ்து  நடைமுறை குறிப்புகள்   

வாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை
வாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை

தென்கிழக்கு அல்லது வடமேற்கு ஆகிய இரண்டு பகுதிகளை தவிர்த்து மற்ற அறைகளில் சமையலறை அமைந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு வாஸ்து நிபுணர்கள் ஒரு மாற்று வழியை காட்டியிருக்கின்றனர். அதாவது சமையல் எந்த அறையில் செய்யப்பட்டாலும் அந்த அறையின் தென்கிழக்கு மூலையில் அடுப்பை வைத்துக்கொள்வதும், கிழக்கு நோக்கி நின்று சமையல் செய்வதும் மிகவும் அவசியமானது என்று தற்காலிக மாற்று வழியை காட்டியுள்ளனர்

Need to sell your Property 

Related posts

%d bloggers like this: