Tamil latest news

விகடன் குழுமத்திலிருந்து இதழ்கள் நிறுத்தப்படுகின்றன

விகடன்

விகடன் குழுமத்திலிருந்து இதழ்கள் நிறுத்தப்படுகின்றன

விகடன் குழுமத்திலிருந்து இதழ்கள் நிறுத்தப்படுகின்றன, தடம், சுட்டி விகடன், டாக்டர் விகடன், அவள் மணமகள் என்று நான்கு இதழ்கள் நிறுத்தப்படுகின்றன என்று தகவல்

இதில் மற்றப் பத்திரிகைகள் நிறுத்தப்படுவதைவிட சுட்டிவிகடன் நிறுத்தப்படுவது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது..

என் பால்யங்கள் காமிக்ஸ் புத்தகங்களால் நிறைந்தது  இப்போதைய பசங்களுக்கு அப்படியான புத்தகங்கள் பெரிய அளவில் இல்லை அதனால் பழைய ராணி காமிக்ஸ் அம்புலிமாமா எங்கு கிடைத்தாலும் வாங்கி பத்திரப்படுத்தி வைக்கிறேன்

இந்த சூழலில் சுட்டி விகடன் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை உருவாக்க ஒரு நல்ல இதழாக வந்து கொண்டிருந்தது

என் பசங்களுக்கு படிக்க சுட்டிவிகடன் வாங்கி கொடுப்பேன் அப்போது நானும் வாசிப்பேன் நன்றாகவே இருந்தது அது நிறுத்தப்படுகிறது என்ற தகவல் வருத்தமளிக்கிறது

ஒரு வாசகனாக எனக்கே வருத்தம் ஏற்படுகிறது எனும்போது, ஆசையாக அதை துவக்கி இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தி வந்த விகடன்சேர்மன் சீனிவாசன் அவர்கள் மிகுந்த மன கஷ்டத்துடன் தான் இந்த முடிவை எடுத்திருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது..

மீண்டும் ‘சுட்டி’த்தனம் தொடரும் சூழல் வர வேண்டும் என்பதே என் விருப்பம்..

-கார்ட்டூனிஸ்ட் பாலா

Comments

0 comments

Related posts

ஆஸ்திரேலிய சடலத்தில் கிடைத்த தமிழ் ஆச்சரியம்

admin

மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு

admin

நம் வீட்டுக்குள் வளரும் தேவதைகள்

admin
%d bloggers like this: