விஜயகாந்தின் சொத்துகள் வெள்ளையாக்க நடத்தபடும் நாடகம் இது
நில உரிமை சட்டம்

விஜயகாந்தின் சொத்துகள் வெள்ளையாக்க நடத்தபடும் நாடகம் இது

விஜயகாந்தின்  சொத்துகள்

விஜயகாந்தின்  சொத்துகள் வெள்ளையாக்க நடத்தபடும் நாடகம் இது

விஜயகாந்தின் அசையா சொத்துகள் ஏலத்துக்கு வருகிறது  கோடிகளில் கடன் பெற்று கல்லூரி மேம்பாட்டிற்காக செயல்பட்டதாகவும் வருவாய் ஏதுமில்லாததால் கடனை திரும்ப தர முடியவில்லை என பிரேமலதா சொல்கிறார்

ஒருவர் வங்கியில் கடன் பெறுவதும் திருப்பி தராத போது வங்கி நடவடிக்கை எடுத்து பிணையாக பெற்ற சொதிதை ஏலம் விடுவதென்பது நடைமுறை

இதில் நமக்கென்ன இருக்கிறது  ஆனால் பிரபலமான ஒருநடிகர் அரசியல்வாதி என்கிற போது பேசபடுகிறார்
விஜயகாந்தின் பாதையை நாம் நோக்கினால் தெளிவற்றவராக எதையும் அவசரகதியில் உடனே கிடைத்திட வேண்டுமென்ற எண்ணம் உடையவராக தெரியும்

அடிப்படை அரசியல் கூட அறியாதவராக தான் பொதுவாழ்விற்கு வந்தார் சினிமாவில் தனக்கு உறுதுணையாய் நின்ற இப்ராகிம் ராவுத்தரை கூட இன்னும் சொல்லபோனால் தன் வாழ்வையே விஜயகாந்திற்காக என்றவரை இவரின் திருமணத்திற்கு பிறகு முழுவதுமாக புறக்கணித்தார் 

நட்பின் இலக்கணமாக அப்போது பேசபட்டார்கள் கர்ணன் துரியோதனன் என்றெல்லாம் சிலர் சினிமா இதழ்களில் எழுதியது ஞாபகம் வருகிறது .. அப்போது தொடங்கிய சரிவின் தொடக்கத்தை இவர் கண்டுக்கொள்ளவில்லை 

ஜெயலலிதாவுடன் சேர்ந்தது மிகப்பெரிய அரசியல் பிழை


கல்யாண மண்டபத்தின் தூண் இடிபடுகிறதென்பதற்காக கலைஞரோடு பிணங்கி
அரசியல் கட்சியை தொடங்கியவர் ஆரம்பத்தில் ஒருவித மாய ஈர்ப்பு தெரியும் அதை சரியாக பயன்படுத்தினால் (உழைத்தால், சரியான தெரிவு செய்தால்)
தான் அரசியலில் வெற்றிபெற முடியுமென்ற யதார்த்த அரசியல் அறிவில்லாத காரணத்தால் மாயவலையில் சிக்கியவரை போல அரசியல் அந்திமத்தின் துவங்கத்தை குறித்துக்கொண்டார்

ஜெயலலிதாவுடன் சேர்ந்தது மிகப்பெரிய அரசியல் பிழை என்பதை தனித்தே களம் கண்டிருந்தால் காலபோக்கில் முன்னேற்றத்தை பெற்றிருக்கமுடியும்

வங்கிகடனை கட்ட அவருக்கு கிடைத்த தேர்தலின் போது பாஜக அதிமுகவால் பலகோடிகள் பேரபேசபட்டதாக செய்திகள் வந்ததே அதை வெள்ளையாக்க நடத்தபடும் சிறிய ஒரங்கநாடகம் இது என்கிறார்கள்

கட்சி நிதியாக ₹20000 வரும் பணத்திற்கு வரி சலுகை உண்டென்ற விதியை காட்டி தொண்டர்களிடமிருந்து திரட்டி கடனை அடைத்ததாக செய்திகள் வரலாம் பெருந்தொகை கைமாறி வெளிநாடுகளில் முதலீடாய் இருப்பதாக உலவும் செய்திகளுக்கிடையில் இங்கே உள்ள கடனை அடைக்க மிக சிறந்தமார்க்கமாக இது இருக்கும்


வருவாய்க்கு வழியில்லாமல் தின செலவிற்கே திண்டாடுகிற புதிய “ஏழ்மைதாயை” நாடு கண்டிருக்கிறது ..ஆனால் கொடுத்து சிவந்தவரென்ற பழைய பெயரை கெடுத்ததிலும் .. விஜயகாந்தை வியாபார பொருளாக்கி சந்தைபடுத்தியதிலும் அவரின் துணைவியாருக்கு பெரும் பங்குண்டு 

விஜயகாந்தின் உடல்நலிவும் இயலாமையும் பிரேமலதா சதீஷை பிழைக்க அரசியலை பயன்படுத்தாமென்ற முடிவிற்கு வரவைத்துவிட்டது விஜயகாந்த் ஒரு பாடம்

அரசியல் தெளிவற்றுஎதையாவது செய்து எப்படியாவது பதவி சுகத்தை அனுபவிக்கலாம் எந்த மக்கள் பணியும் செய்ய தேவையில்லை நேரடியாக முதல்வர் என கனா காணும் கோமாளிகளுக்கு பாடம்

அரசியல் உழைப்பவர்களுக்கு உன்னத குறிக்கோளோடு வருபவர்களுக்கு பொதுதொண்டில் நாட்டம் உள்ளவர்களுக்கு சாதி மதமென குறுகிய சிந்தனையற்றவர்களுக்கு நல்பெயரை நன்மதிப்பை தரும்

மாறாக வியாபாரமாக எண்ணுவோர், உழைப்பின்றி உயரலாம் என நினைப்போர் பணம் பதவிக்காக வருபவர்களை காலம் குப்புறதள்ளி குழிதோண்டி விடும்  விஜயகாந்தின் நிலை நட்பின் அருமையும் பொருளும் புரியாதவராக வாழ்வியல் அர்த்தம் தெரியாதவராக
அரசியல் இலக்கணம் அறியாதவராக

கடைசியில் பெயர்கெட்டு நன் மதிப்பிழந்த கதையாகிவிட்டது

ஆலஞ்சியார்

Comments

0 comments

Related posts

வேளச்சேரியில் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படும் பள்ளவாசல்

admin

அடுக்குமாடி வீட்டில் குடியிருப்போர் நல சங்கம்

Koovam Tamil News headline

குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை | பரிவர்த்தனை முறை

admin
%d bloggers like this: