1-800-999-9999 — hi@loremipsum.com

வீடு வாங்குவதற்கு இணையம் தரும் வசதிகள்

 இணையம் தரும் வசதிகள்

வீடு வாங்குவதற்கு இணையம் தரும் வசதிகள்

வீடு வாங்குவதற்கு இணையம் தரும் வசதிகள் தற்போது நவீன நாகரிகமாக இணைய தள வணிகம் வெகு விரைவாக பரவி வருகிறது. குண்டூசி முதல் பல மாடிக்கட்டிடம் வரையில் ‘ஆன்–லைன்’ வர்த்தகம் மூலம் வாங்கும் வாய்ப்புகள் உலகத்தை நமது கைகளுக்குள் அடக்கி விட்டன. அமர்ந்த இடத்திலிருந்து அகிலத்தை வலம் வரும் வாய்ப்பை நமது கையிலிருக்கும் சின்ன ‘ஸ்மார்ட் போன்’ தருகிறது. பல்வேறு சாத்தியக்கூறுகளின் ஒட்டு மொத்த தொகுப்பாக இணையம் என்ற தொடர்பு விரிகிறது. வீடு அல்லது வீட்டு மனை வாங்குவதற்கு இணையம் தரும் வசதிகள் பற்றி இங்கே காணலாம்.

கட்டுனர்களை தேர்ந்தெடுக்கலாம்

தற்போதைய ‘ரியல் எஸ்டேட் மார்க்கெட்’ தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பல நிறுவனங்கள் இணையதள சேவைகளை தருகின்றன. கணினி அல்லது நவீன கைபேசி வாயிலாக அவற்றை தொடர்பு கொண்டால் எந்த இடங்களில் வீட்டு மனைகள் அல்லது வீடுகள் உள்ளன..?, அவற்றின் அளவுகள் என்ன..?, மனையின் விலை என்ன..?, மனையின் சுற்றுப்புறங்களில் எவ்விதமான வசதிகள் உள்ளன..?, அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவா..?, அவற்றை விற்கும் கட்டுனர் பற்றிய விபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.

முடிவுக்கு பின் முதலீடு

வீட்டு மனை வாங்க முடிவெடுத்த பின்னர் நமது மனதுக்கேற்ற மனையை நிதானமாக தேர்ந்தெடுக்கலாம். குறிப்பிட்ட ஏரியாவில் சென்ற வருடங்களில் மனைகள் என்ன விலைகளில் விற்கப்பட்டன என்ற தகவல்களை கவனிக்கலாம். பல தகவல்களின் அடிப்படையில் நமக்கான மனையை தேர்ந்தெடுக்கும் தொழில் நுட்ப வசதிகள் இருப்பதால் அவசரமில்லாமல் ஆராய்ந்து மனையை வாங்கலாம்.

முப்பரிமாணத்தில் வீடுகள்

நவீன ‘ஸ்மார்ட் போன்’ மூலமாக நாம் வாங்கும் வீடு அல்லது மனையில் கட்டப்படும் வீடு எப்படி இருக்கும் என்பதை ‘3டி’ தொழில்நுட்பத்தின் மூலம் பார்க்கலாம். தரை அமைப்புகள், வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, மாடிப்படிகள் போன்ற கட்டமைப்புகளை முப்பரிமாண வடிவத்தில் ‘ஸ்மார்ட் போனில்’ பார்க்கமுடியும். எந்த அறையில் சூரிய வெளிச்சம் விழுகிறது என்றும் பார்க்க இயலும். இணைய தளங்களின் ‘மேப்கள்’ மூலம் மனையின் இருப்பிடத்தையும், சுற்றுப்புறங்களில் இருக்கும் மலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற இயற்கை அமைப்புகளையும் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

மனையின் மதிப்பு

மனையின் ‘மார்க்கெட் வேல்யூ’ பற்றி இணையத்தில் அறிந்து கொள்ள முடியும். கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தால் அவற்றின் அப்போதைய நிலவரம் பற்றி சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்கள் வலை தளத்தில் தகவல்களை தருகின்றன. அதன் மூலம் பணிகளின் தன்மையை அறிந்து கொள்ளலாம் அதனால் நேரடியாக அடிக்கடி சென்று பார்க்க வேண்டியதில்லை.

மாத தவணை கணக்கீடு

மனை வாங்க அல்லது வீடு கட்ட வங்கிக்கடன் பெற வேண்டியதாக இருந்தால் ‘ஈ.எம்.ஐ’ எனப்படும் மாதத்தவணை விபரங்களை ‘ரியல் எஸ்டேட்’ நிறுவன இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மாதாந்திர ‘பட்ஜெட்டில்’ எவ்வளவு பற்றாக்குறை ஏற்படலாம் என்பது அதன் மூலம் தெரியும். வயது, மாத வருமானம், மொத்தக்கடன் தொகை ஆகிய தகவல்களை அதில் பதிவு செய்தால், மாத தவணை எவ்வளவு செலுத்த வேண்டும்..?, எவ்வளவு காலத்துக்கு செலுத்த வேண்டும்..?, அசலும், வட்டியும் எவ்வளவு செலுத்த வேண்டும்..? என்பது போன்ற எல்லாவிதமான விபரங்களும் அதில் தெரிந்துவிடும்.     வீடு வாங்குவதற்கு இணையம் தரும் வசதிகள்

குறைந்த விலையில் வாங்கலாம்

ஒரே சமயத்தில் பல இணைய தளங்களுக்கு சென்று பார்வையிடுவதன் மூலம் மனையின் ‘மார்க்கெட்’ நிலவரம் மற்றும் ஒரே ஏரியாவில் இருக்கக்கூடிய மனைகளின் விலை வித்தியாசங்கள் ஆகியவற்றை சுலபமாக ஒப்பீடு செய்து வாங்குவது பற்றிய முடிவை எடுக்கலாம். அது தவிரவும் கட்டுனர்கள் தரும் சலுகைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பிறர் கருத்துக்கள்

ஒரு கட்டுனரின் இணைய தளத்தை அணுகும்போது அதில் வியாபார விஷயங்கள் தவிர, ‘பீட் பேக்’ எனப்படும் வாடிக்கையாளர்களது சொந்த கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும். அதன் வாயிலாக சம்பந்தப்பட்ட கட்டுனரது நம்பகத்தன்மையை அறிந்து கொள்ளலாம். அதன் அடிப்படையிலும் மனை வாங்குவது பற்றி முடிவுக்கு வரலாம்   வீடு வாங்குவதற்கு இணையம் தரும் வசதிகள்

Publish Free ads in Real Estate

%d bloggers like this: