வீட்டின் மாடிப்படி அமைக்கும் விதம்
வீட்டின் மாடிப்படிகளை வெளிப்புறம் அமைப்பதாக இருந்தால் அழகான தோற்றம் தருவதுபோல அமைப்பது சிறப்பு. அஸ்திவாரம் அமைக்கும்போதே மாடிப்படிகள் எங்கு வர வேண்டும் என்று திட்டமிடுவது முக்கியம். எல்லா வேலைகளையும் முடித்த பின்பு மிச்சமுள்ள இடத்தில் மாடிப்படிகளை அமைத்தால்போதும் என்று எடுக்கப்படும் முடிவு வீட்டு அமைப்பில் குறையாக மாறிவிடும்.
• படிக்கட்டுகளை பெரியவர்களும், குழந்தைகளும் ஏறி இறங்க சுலபமானதாக இருக்குமாறு அமைக்க வேண்டும். குறுகலான இடத்தில் மாடிப்படிகள் வந்தால் அவற்றின் இடம், தோற்றம், அளவுகள் ஆகிய விசயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
• அளவில் சிறிய படிகள் அமைக்க வேண்டிவந்தால் கான்கிரீட் தவிர்த்து மாற்று வழிகளைப் பின்பற்றலாம்.
• படிக்கட்டுகள் உயரம் குறைவாகவும், அகலமாகவும், வழுக்காமல் நல்ல பிடிப்புடனும் இருக்கும்படி அமைக்கவேண்டும்.
• படிக்கட்டுகளுக்கிடையில் உள்ள இடைவெளி சமமாக இருக்க வேண்டும். படிக்கட்டுகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கக்
கூடாது.
வீட்டின் மாடிப்படி அமைக்கும் விதம்
• ஏறுபவர்களுக்கு வசதியாக வழுக்கும் தன்மையில்லாமல், பிடிமானத்துடன் இருக்கும் கைப்பிடிகளை அமைக்க வேண்டும்.
• வீட்டிற்கு உள்ளே படிக்கட்டுகள் அமைப்பதாக இருந்தால் கான்கிரீட் தவிர்த்து மற்ற வழிகளை பின்பற்றுவது சிறந்தது. அவற்றை அழகுபடுத்துவதும் எளிதாக இருக்கும்.
•  வீட்டு மாடியின் உயரத்திற்கேற்றவாறு படிக்கட்டுகளை ஒரே நீளத்தில் அமைக்கக்கூடாது. படிக்கட்டுகளில் ஏறி குறிப்பிட்ட உயரத்தில் உள்ள ‘லேண்டிங்கில்’ இருந்து இடப்புறம் அல்லது வலப்புறம் திரும்பி ஏறுவதுபோல அமைக்க வேண்டும்.
• படிக்கட்டுகள் ஏறுவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அழகாக இருப்பதற்காக வழுக்கும் தன்மை கொண்ட கற்களைப் பதிக்காமல், சொரசொரப்பான தன்மை கொண்ட கற்கள் பதிக்க வேண்டும். வழுக்கும் தன்மையற்ற படிக்கட்டுகள் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
• படிக்கட்டுகளின் கீழே அமைந்த முக்கோணப் பகுதிகளை சிறிய அலமாரியாக உபயோகப்படுத்தலாம். இடம் பெரிதாக இருந்தால் சிறிய ஸ்டோர் ரூமாக அமைத்தும் பயன்படுத்தலாம்.வீட்டின் மாடிப்படி அமைக்கும் விதம்
• புத்தக அலமாரியை அமைத்து புத்தகங்கள், பத்திரிகைகள் போன்றவற்றை அடுக்கி வைக்கலாம்.
• படிக்கட்டுகள் அகலமாக இருந்தால் பக்கவாட்டில் பூந்தொட்டிகளை வைத்தால் அழகான தோற்றமும், குளிர்ச்சியும் தருவதாக இருக்கும்.
• பழைய வீடுகளில் உள்ள வழுவழுப்பான படிகள் மீது தென்னம் நார்களால் ஆன விரிப்பையோ, கெட்டியான விரிப்பையோ பயன்படுத்தினால் வழுக்காமல் இருக்கும். Get Online Property In chennnai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *