வீட்டு கடன் சுலப வட்டியில் பெறலாம்

வீட்டு கடன் சுலப வட்டியில் பெறலாம்
 வீட்டு கடன் சுலப வட்டியில் பெறலாம்  இன்றைய சூழலில் வங்கிகள் வீட்டு கடன் உள்ளிட்ட மற்ற கடன்களை குறைவான வட்டி விகிதத்தில், எளிதாக வழங்குவதற்கான சூழல்கள் ஏற்பட்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காரணம் சமீபத்தில் உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து பழைய உயர் மதிப்புள்ள நோட்டுக்களை பொதுமக்கள் வங்கியில் ‘டெபாசிட்’ செய்து வருகின்றனர். அதன் வாயிலாக கோடிக்கணக்கான ரூபாய் வங்கிகளில் குறுகிய காலத்தில் ‘டெபாசிட்’ ஆக செலுத்தப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக வங்கிகளின் பண இருப்பானது அதிகரித்திருக்கிறது.
ரொக்க இருப்பு விகிதம்
எல்லா வங்கிகளும் சி.ஆர்.ஆர் எனப்படும் வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகித அளவை ரிசர்வ் வங்கியில் பராமரித்து வரவேண்டும் என்பது நடைமுறையாகும். அந்த ரொக்க இருப்பு விகித அளவுக்கு மேல் கையிருப்பாக உள்ள பணத்தை வைத்துத்தான் வங்கிகள் கடன் வழங்குதல், கடன் மற்றும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரிப்பது அல்லது குறைப்பது உள்ளிட்ட அனைத்து வணிக ரீதியான பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். சமீபத்திய பெரிய அளவு ‘டெபாசிட்டுகளுக்கு’ பிறகு வங்கிகள், அந்த ரொக்க இருப்பு விகித அளவை அனுசரித்து தமது வணிக நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ளும் சூழல் இருக்காது. அதன் காரணமாக தம்மிடமுள்ள அதிகப்படியான ‘டெபாசிட்டுகளை’ குறைவான வட்டி விகிதத்தில் கடனாக வழங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
வட்டி குறையும்
பல்வேறு முன்னணி வங்கிகள் ‘டெபாசிட்டுகளுக்கான’ வட்டி விகிதங்களை குறிப்பிட்ட அளவுக்கு  குறைத்து அறிவித்திருக்கின்றன. ‘டெபாசிட்டுகள்’ மீதான வட்டி குறைக்கப்பட்டதை அடுத்து கடன்களுக்கான வட்டி விகிதமும் இன்னும் சில நாட்களில் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. ஒரு  தேசிய வங்கி  கடந்த ஆறு வருட காலத்தில் இல்லாத அளவுக்கு வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை குறைந்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி விழாக்கால வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் 9.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. விழாக்கால கடன் திட்டம், பெண்களுக்கான வீட்டுக்கடன் ஆகியவற்றிக்கான வட்டி விகிதம் 9.1 சதவீதமாகவும், மற்ற வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 9.15 சதவீதமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வங்கிகள் அறிவிப்பு
முக்கியமான பெரிய வங்கிகள் தாங்கள் தரக்கூடிய வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ள சூழ்நிலையில் இதர தனியார் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களும் தங்களது வட்டியை குறைத்து அறிவிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் நடுத்தர மக்களின் நீண்ட கால கனவாக இருக்கும் சொந்த வீடு கட்டுவது அல்லது வாங்குவதற்கான சூழ்நிலை உருவாகி வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்
“வட்டி குறையும்”
பல்வேறு முன்னணி வங்கிகள் ‘டெபாசிட்டுகளுக்கான’ வட்டி விகிதங்களை குறிப்பிட்ட அளவுக்கு  குறைத்து அறிவித்திருக்கின்றன. ‘டெபாசிட்டுகள்’ மீதான வட்டி குறைக்கப்பட்டதை அடுத்து கடன்களுக்கான வட்டி விகிதமும் இன்னும் சில நாட்களில் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. ஒரு  தேசிய வங்கி  கடந்த ஆறு வருட காலத்தில் இல்லாத அளவுக்கு வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை குறைந்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி விழாக்கால வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் 9.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. விழாக்கால கடன் திட்டம், பெண்களுக்கான வீட்டுக்கடன் ஆகியவற்றிக்கான வட்டி விகிதம் 9.1 சதவீதமாகவும், மற்ற வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 9.15 சதவீதமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Thanks By  Your area , on Daily Thanthi

Leave a Reply