தமிழக ரியல் எஸ்டேட்

3 மணி நேரத்தில் 2 மாடிகளுடன் கட்டப்பட்ட வீடு

3 மணி நேரத்தில் 2 மாடிகளுடன் கட்டப்பட்ட வீடு

 

பெய்ஜிங்: சீனாவின் சான்ஷி மாகாணத்தில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு அமைத்து புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவை வரிசையில் வீடு என்பது பிரதானமானது. இன்னமும் குடியிருக்க வீடுகள் இல்லாமல் சாலையோரங்களில் வசிப்பவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகின்றன. இந்நிலையில் சீனாவில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு கட்டி ஒரு கட்டுமான நிறுவனம் அசத்தியுள்ளது. சான்ஷி மாகாணத்தில் ஸியான் என்ற இடத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.  இந்த வீட்டைக் கட்ட கட்டுமான நிறுவனம் ‘3டி பிரிண்டிங்’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 மாடிகளுடன் கட்டப்பட்ட வீடு

அதற்கான மாடல்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன. அதி நவீன தொழில் நுட்ப முறையில் வீடு கட்ட சதுர மீட்டருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகியதாகக் கூறப்படுகிறது. வீட்டின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டு ‘கிரேன்’ மூலம் தூக்கி பொருத்தப்பட்டது. இந்த வீடு சமையலறை, படுக்கையறை, ஓய்வு அறை மற்றும் ஹால் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

தொழிற்சாலை மற்றும் விவசாயி கழிவுகளை மூலப் பொருட்கள், கட்டுமான பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. இது போன்ற வீடு கட்டுவதன் மூலம் போக்குவரத்து, ஆட்கள் கூலி, பொருட்கள் போன்றவற்றின் செலவு குறையும். கால நேரமும் மிச்சமாகும் என்பதால்  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

2 மாடிகளுடன் கட்டப்பட்ட வீடு
3 மணி நேரத்தில் 2 மாடிகளுடன் கட்டப்பட்ட வீடு

3 மணி நேரத்தில் 2 மாடிகளுடன் கட்டப்பட்ட இந்த வீடு 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் அதைத் தாங்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என பொறியிலாளர்கள் கூறியுள்ளனர்

Comments

0 comments

Related posts

புது வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

admin

நமது பண்பாட்டில் வாயில்படிகளுக்கு தரப்படும் முக்கியத்துவம்

பில்டர்களிடம் வீடு வாங்குவது நம்பிக்கையானது

%d bloggers like this: