1-800-999-9999 — hi@loremipsum.com

தபால் நிலையங்களில் மானிய விலை உணவு தானியங்கள்

உணவு தானியங்கள்

 உணவு தானியங்கள் டில்லியில் ஒன்றிய நுகர்வோர் விவகார செயலாளர் ஹெம் பாண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய உணவு தானியங்களை தபால் நிலையங்களில் விற்க முடிவு செய்யப்பட்டது. இதுதவிர பண்டிகை காலங்களில் கையிருப்பில் உள்ள பருப்பு வகைகளை அதிகளவில் இருப்பு வைக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. உணவு தானியங்கள்

நாடு முழுவதும் 500 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்படுவதாகவும், தானியங்களுக்கான பணம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உடனுக்குடன் வரவு வைக்கப்படுவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள், வேளாண்மை, உணவுத்துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் மற்றும் இந்திய உலோகங்கள் மற்றும் கனிமங்கள் டிரேடிங் கார்ப்பரேஷன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தஞ்சை, கடலூர், ஆரணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ரயில் மறியல் போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் மறியல் போராட்டத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் அஷ்ரப், ரயில் மறியல் போராட்டத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார் மற்றும் மாநில போலீசாருடன் இணைந்து ரயில்வே பாதுகாப்பு படை செயல்படும் என தெரிவித்தார்.
மறியலால் ரயில் சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இது தவிர ரயில் மறியல் போராட்டத்தை எதிர்கொள்வதற்காக சென்னையில் மட்டும் 10,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம், சிவகங்கை, ஆடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் ரயிலை மறிக்க முயன்ற திமுக, மதிமுக கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கையில் 1000 பேர் கைது. திருச்சியில் நெற்கதிர்களுடன் விவசாயகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் தஞ்சையில் ரயில் தண்டவாளத்தில் சமையல் செய்து நூதனமான முறையில் ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.

%d bloggers like this: