Main Menu

Koovam Tamil News headline

 

கண்ணீர் விட்டு கதறிய விருகை கண்ணன்

இன்று நடை பெற்றது குறிப்பிட்டு யாரையும் குறை கூறியோ அல்லது காட்சிகள் நடத்தும் கண்துடைப்பு போன்ற கூட்டம் அல்ல , இன்று பலரது வாழ்வாதரம் கேள்விக்குறியாகி உள்ளது , பல ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முடங்கி உள்ளது , நான் இந்த நாட்டின் முதல்வரிடமும் மற்றும் நீதிபதியிடமும் ,காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்


அனைத்து ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள்

அனைத்து ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் அனைத்து ரியல் எஸ்டேட் நண்பர்களுக்கு நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள்,தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் .. பட்டா மனையை பத்திர பதிவு செய்ய கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை மறு பரிசீலனை செய்யக்கோரியும், இது சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் நாளை 20.09.2016 ( செவ்வாய்க்கிழமை) காலை 9:00 மணிக்கு நடைபெற இருக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நமது நிறுவனத் தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர் திரு.வியாசை Lion.K.கிருஷ்ணா அவர்களின் தலைமையில், அகில இந்திய லே-அவுட் புரோமோட்டர்ஸ் மற்றும் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் தேசிய தலைவர் திரு.Lion.S.அன்னை சரவணன் அவர்களின் முன்னிலையிலும், நிகழ்ச்சியின் வரவேற்பாளர்களான திரு.Lion.B.S.சங்கர் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் கொளத்தூர் Lion.V.B சுரேஷ்குமார் அவர்களும், நிகழ்ச்சிRead More


இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நலச்சங்கம்

‎உலகத்தமிழர்கள் ரியல் எஸ்டேட் சங்கம்‎ to சுரேஷ் ராகவன் நெல்லை தமிழன் 16 hrs · பட்டா மனையை பத்திர பதிவு செய்ய கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை மறு பரிசீலனை செய்யக்கோரியும், இது சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் இன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 20.09.2016 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 9:00 மணி முதல் 12:00 வரை நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர் வியாசை Lion.K.கிருஷ்ணா அவர்கள் தலைமையிலும்,மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர் சங்கத்தின் நிறுவன தலைவர் k.சந்திரசேகர் அவர்கள் தலைமையிலும், தேசிய தலைவர் Lion.S.அன்னை சரவணன் தலைமையிலும், மற்றும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தங்களின் ஆதரவை தெரிவித்த தலைவர்களான அகிலRead More


வீட்டின் சந்தை மதிப்பை அதிகரிக்க உதவும் குறிப்புகள்

     வீட்டின் சந்தை மதிப்பை அதிகரிக்க உதவும் குறிப்புகள் ,      முதலீட்டு அடிப்படையில் சமீபத்தில் வாங்கப்பட்ட வீடு, ‘பிளாட்’ அல்லது பழைய வீட்டை விற்பனை செய்யலாம் என்று முடிவெடுக்கும் சமயங்களில் தகுந்த விளம்பரங்கள் செய்வதுடன் சில மாற்றங்களையும் செய்வது அவசியம். அதன்மூலம் வீட்டின் சந்தை விலை மதிப்பை அதிகரித்துக்கொள்ள முடியும் என்று ‘ரியல் எஸ்டேட்’ வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். நகர்ப்புறங்களில் இருக்கும் வீடுகள் பழையதாக இருந்தாலும், புதியதாக இருந்தாலும் விலை மதிப்பில் பெரிதான வித்தியாசங்கள் இருக்காது. பழைய வீடாக இருந்தால் கட்டமைப்பின் வயது மற்றும் உறுதி ஆகியவற்றின் அடிப்படையிலும், புதிய வீடாக இருந்தால் அதன் உள் கட்டமைப்புகளை அடிப்படையாக கொண்டும் அவற்றின் ‘ரீ–சேல் வேல்யூ’ எனப்படும் சந்தை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வீட்டின் சந்தை மதிப்பை அதிகரிக்க வல்லுனர்கள் தரும் ‘டிப்ஸ்கள்’ பற்றி இங்கேRead More


தெரிந்து கொள்வோம் வாடகை வீட்டுக்கான வரிச்சலுகை

தெரிந்து கொள்வோம் வருமான வரி செலுத்துவோர் வீட்டு வாடகையைக் கணக்கில் காட்டி 80ஜி பிரிவின் கீழ், ஆண்டுக்கு ரூ.24,000 வரையில் வரிச்சலுகை பெறலாம் என்ற நிலை இருந்து வந்தது. நடப்பு வருட பட்ஜெட் அறிவிப்பு மூலம் அவர்கள் இனி ஆண்டுக்கு ரூ.60,000 வரையில் வீட்டு வாடகை மூலம் வரிச்சலுகை பெறலாம். இதனால் வாடகை வீட்டில் வசிக்கும் ஏராளமான மக்கள் பயன் பெறுவார்கள். அதேபோல முதல் முறையாக வீடு வாங்குவோர் ரூ.50,000வரை வருமான வரியில் கூடுதல் சலுகை பெற இயலும். வீட்டுக்காக பெறக்கூடிய கடன் தொகை ரூ.35,00,000–க்கு உள்ளாகவும், வீட்டின் மொத்த மதிப்பு ரூ.50,00,000–க்குள் இருந்தால் மட்டும் இந்த கூடுதல் வரிச்சலுகையை பெற இயலும். இதன் மூலம் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் வருமான வரியில் ரூ.60,000 வரை விலக்கு பெறலாம். முதல் முறையாக சொந்த வீடு வாங்குபவர்கள்Read More


தமிழர்கள் தான் இரும்பை முதலில் கண்டுபிடித்தவர்கள்

தமிழர்கள் தான் இரும்பை முதலில் கண்டுபிடித்தவர்கள் , “உலக நாகரிகத்தின் முன்னோடிகள் அறிவர் தமிழர்களே” உண்மையில் இரும்பை கண்டுபிடித்தது இவர்கள் தான்! உலக நாகரிகத்தின் முன்னோடிகள் தமிழர்களே என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக இருப்பவை, இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டெடுக்கப்பட்ட – பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தங்க நாணயங்களோ, ஆபரணங்களோ, வெண் கலச் சிலைகளோ, முதுமக்கள் தாழிகளோ, ஓலைச்சுவடிகளோ அல்ல. மண்ணுக்குள் புதைந்து கிடந்து, ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகள் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட பழங்கால மனிதர்களின் இரும்புப் பொருட்கள் தான், தமிழ் இனத்தின் அந்தப் பெருமையை உலகுக்கே உயர்த்திக் காட்டும் அடையாளச் சின்னங்களாக திகழ்கின்றன. ஆதிகால மக்கள், முதலில் தங்கள் ஆயுதமாக கற்களைப் பயன்படுத்தியதால், அவர்களது காலம் பழைய கற்காலம் எனவும், பின்னர் அந்த கற்களையே சீராக்கிRead More


மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம்

மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம் 2

கொஞ்சோண்டு நிதானமும், அதிக பொறுமையும் உள்ளவங்க மட்டும் இத வாசியுங்க 25 வருஷத்துக்கு முன்னாடி மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம் தான் நமக்கு இன்னிக்கு வரை சோறு போடுது…ஆனா நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறதுங்கிறது நம்முடைய அறியாமைன்னு நினைச்சுக்கனும், அதனால நாம நம்மள மாத்திக்க வேண்டிய சூழலுக்கு நெருங்கிகிட்டு இருக்கோம். கீழே சொல்லப்பட்டுள்ள கருத்தில் மாற்றுக் கருத்துக்கள் நமக்கு நிச்சயமா இருக்கத்தான் செய்யும். ஆனா சொல்லப்பட்டுள்ள செய்தியை ஆராய்ஞ்சு பாக்கும்போது பல விஷயங்களில் அதில் புதைந்து கிடக்கும் உண்மைகளும், தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியும் வருங்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்த‍ை உருவாக்கும் என்று நம்பத்தான் வேண்டியுள்ளது.. 1998 ல தொடங்கின kodak நிறுவனம், ஒரு லட்சத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது…! இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல…! வெள்ளை பேப்பர்ல printRead More


திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி

  செயின் அறுப்பு, திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? விழிப்புணர்வு கட்டுரை! ——-திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A., (முன்னாள் காவல்துறை அதிகாரி) தலைவர் நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)   திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி  ? சமீபகாலமாக சென்னையிலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் செயின் அறுப்பு குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. சென்னையில் ஜூலை மாதத்தில் மட்டும் 37 இடங்களில் செயின் அறுப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதில் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி என்னவென்றால் இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் 18 வயதிலிருந்து 30 வயதுக்கப்பட்ட இளைஞர்கள். அது மட்டுமல்ல அவர்களில் பலர் நன்றாக படித்த பட்டதாரி இளைஞர்கள். இந்த செயின் அறுப்பு குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம் என்ன? இதற்கு முக்கிய காரணம் மிக அதிகமாக ஏறி வரும் தங்கத்தின் விலைதான். தங்கத்தின் விலை ஒரு சவரன் 24,000/-Read More


விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்

விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்!


வீட்டை பராமரிப்பது எப்படி

எல்லா வீடுகளிலும் உள்ள குறை என்னவென்றால், அனைத்து அறைகளிலும் அழகு சாதன பொருட்கள் மற்றும் ‘பர்னிச்சர்களை’ நிரப்பி வைத்திருப்பதுதான். அளவாக இருக்கும் அழகு சாதன பொருட்கள்தான் வீட்டுக்கு மேலும் கச்சிதமான அழகை தரும். தேவையான பொருட்கள், சரியான இடத்தில் வைக்கப்படும்போது சுத்தமான சூழல் வீட்டுக்குள் ஏற்படுவதோடு மனதுக்கு இதமாகவும் இருக்கும்


Skip to toolbar