1-800-999-9999 — hi@loremipsum.com

வாங்க பாட்டியின் வியக்க வைக்கும் ஜோதிடம்

Free Worker

Free Worker

 

 உலகில் பல்வேறு விதமான நபிக்கைகள் அதில் இதுவும் ஒன்று ,என்னவென்று பார்ப்போமா 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில்என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே கூறியதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைத்தது.

சமீபத்தில் இவரை போலவே  பல்கேரிய நாட்டை சேர்ந்த பெண்  ஒருவர் கூறி உள்ள பல கணிப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாதவர் இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார்.  இவர் அங்கு பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார்.இவர் 50 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கு மேற்பட்டவை பலித்தும் உள்ளன  நடந்தும் உள்ளன.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகி செல்லும் என முன்கூட்டியே கணித்து கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன்படியே, சமீபத்தில் நடந்த பொதுவாக்கெடுப்பின் படி பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகிசென்றது.

இவரது கணிப்புகளை நம்பும் மக்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறவுகளின் முறிவால், இது போரைத் தூண்டுமோ என அச்சம் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, 2016 ஆம் ஆண்டு மிகப்பெரிய இஸ்லாமிய போர் தொடங்கும், அந்த போரின் போது இஸ்லாமியர்கள் ஐரோப்பியர்கள் மீது இராசயன தாக்குதலை மேற்கொள்வார்கள் என கூறியுள்ளார்.

வாங்கா கூறி உள்ள கணிப்புகளில் மேலும் சில

* 1989 ஆம் ஆண்டு : ”திகில், திகில்! அமெரிக்க சகோதரர்களே இரும்பு பறவை ஒன்று தாக்கியதால் விழும் ,  அப்பாவி மக்களின் ரத்தம் சிதறும்” என கூறி உள்ளார்.

* அதுபோல் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி தீவிரவாதிகளால் விமானம் கடத்தபட்டு நியூயார்க்கின் வர்த்தக மைய கட்டிடத்தில் மோத செய்யபட்டது இதில் ஆயிரகணக்கான பேர் பலியானார்கள்.

* பசிபிக் பிராந்தியத்தில் 2004 ஆம் ஆண்டு ஏற்படும் நில நடுக்கம் மற்றும் சுனாமியால் நுற்றுகணக்கானபேர் உயிர் இழப்பார்கள் என கூறி உள்ளார்.

* 2016 ஆண்டு மிகபெரிய இஸ்லாமிய போர் தெடங்கும் ஐரோப்பியர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவர்.அவர்கள்  2043 ஆம் ஆண்டு  ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார்கள். எனவும் கூறி உள்ளார்

*  2018 ஆம் ஆண்டு சீனா உலகின் சக்திவாய்ந்த நாடாக மாறும் என கூறி உள்ளார். அவர் கூறியபடி சமீப வருடங்களாக பொருளாதாரத்திலும் ராணுவத்திலும் சீனா வல்லமை பெற்று வருகிறது.

* பூமியின் சுற்று பாதையில் மாற்றம் வரும் என கூறி உள்ளார் அது  2023 க்கு முன் நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது.

* 2025: ஐரோப்பியாவின் மக்கள் தொகை  0 வாக அமையும்

* 2028 மனிதன் சுக்கிரன்  கிரகத்திற்கு பறப்பான்  அங்கு புதிய எரிசக்தி ஆதாரங்களை கண்டறிவார்கள்.

*  2033 உலகில் துருவ பனிப் படலங்கள் உருகி நீரின் அளவு அதிகரிக்கும்

* 2043  ஐரோப்பா  முழுவதும் இஸ்லாமிய அரசாக மாறும் ரோம் அவர்களின் தலைநகராகும்.

* 2072 மற்றும் 2086க்கு இடையில் ஒரு வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயம் புதிய தன்மையை உருவாக்கும்

* 2170 முதல் 2256 ஆம் ஆண்டுக்கு இடையில்  பூமியில் இருந்து சுதந்திரமாக பிரிந்து அணுசக்தியால் செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்கப்படும்,  உலகில் கடலுக்கு அடியில் நகர்ங்கள் உருவாகும் வேற்று கிரகவாசிகளின் கண்டு பிடிப்புகள் அதிபயங்கரமான கண்டு பிடிப்பு நடக்கும்

* 2262 ஆம் ஆண்டு மற்றும் 2304 ஆம் ஆண்டுகளுக்கு இடையில்  நமது கால பயணத்தில் விரிசல் ஏற்படும். பிரஞ்சு கொரில்லாக்கள் பிரான்சில் முஸ்லீம் அதிகாரிகளுடன் போரிடுவார்கள்.

* 2341 இல் இயற்கை மற்றும் மனிதனால் தொடர் பேரழிவுகள் ஏற்படும் பின்னர் நமது பூமி வசிக்க தகுதி அற்றதாக மாறி விடும். மனிதர்கள் நமது சூரியகுடும்பத்தின் மற்ற கிரகங்களை தேடி ஓடுவர்.

* 4302 முதல் 4674 தீய கோட்பாடுகள்  நடக்கும்  மனிதர்களுக்கு இறப்பே கிடையாது,வேற்றுகிரகவாசிகள் உள்வாங்கபடுவர். 34 ஆயிரம் கோடி மக்கள் கடவுளிடம் பேச  சிதறி ஓடுவார்கள்

* 5070 ஆம் ஆண்டு பிரபஞ்சம் முடிவடையும்.

%d bloggers like this: