">"விருகை வி என் கண்ணன்" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி

Koovam Tamil News

முக்கிய தமிழ் செய்திகள், தகவல்கள்

Chennai real estate newsதமிழக ரியல் எஸ்டேட்

"விருகை வி என் கண்ணன்" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி

 

 Virukai N Kannan
  “விருகை வி என் கண்ணன்”

 
“விருகை வி என் கண்ணன்” அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி,

தற்பொழுது ,அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் பத்திரப்பதிவு தடை இருப்பதால் ரியல் எஸ்டேட்
தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது,

எப்பொழுது நிலத்தின் மதிப்பை விட “அரசின்” வழிகாட்டி மதிப்பு மதிப்பு அதிகமானதோ , அப்பொழுது இருந்தே நிலவணிகம் தண்னுடைய சரிவை சந்திக்க ஆரம்பித்து விட்டது ,

போதாதா குறைக்கு! நீதிமன்ற உத்திரவு மேலும் பல சிக்கலை உண்டு பண்ணி விட்டது

நீதி மன்ற உத்தரவுக்கு பின் தற்பொழுது வரை அரசுக்கு மட்டும் ரூபாய் 850 கோடிவரை நஷ்டம்!

இத்தொழிலை நம்பி பலர் இருக்கின்றார்கள்

,புரோகிதர் முதல் ,சித்தாள் வரை,

இன்று அனைவரும் வேலை வாய்ப்பினை இழந்து உள்ளார்கள்,

இதனுடன் 74 வகையான தொழிலார்களின் ,குடும்பங்களையும் ,பொதுமக்களையும் ,வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்

இதுகுறித்து

“இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர் லேண்ட் டெவெலபேர்ஸ் நிலத்தரகர் சங்கத்தின்”

“தலைவர் விருகை வி என் கண்ணன்”

கூறியதாவது,வரும் 19/10/2016 அன்று மாபெரும் கண்டன பேரணி நடக்க விருக்கிறது

ஆகவே அணைத்து தொழிலார்களும் ஒன்றிணைந்து இப்பேரணியில் கலந்து கொண்டு அரசின் கவனத்தை ஈர்க்க வருமாறு அன்போடு கேட்டு கொள்ள படுகிறார்கள்
“தலைமை” “விருகை வி என் கண்ணன்”

முன்னிலை “Ponneri K சரவணன்”

மற்றும் சீமான், தா வெள்ளையன் ,தொல் திருமாவளவன், Tvs மணி, மேலும் அணைத்து அமைப்பளர்களும் கலந்து கொள்கின்றார்கள் ,

பட்டா மனைகளை பதிவு செய்ய கூடாது.என உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முதல் நபராகவும்,இறுதியாகவும், தமிழக அரசு தான் விளக்கமளித்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமே தவிர, வெறும் நீதிமன்றங்களின் இடைக்கால உத்தரவிற்கு நீதிமன்றங்கள் மூலமாகவே எடுக்கப்படும் முயற்சிகள் முழு தீர்வு ஆகாது. அப்படியென்றால் தமிழக அரசு தான் சரியான விளக்கங்கள் அளிக்கவேண்டும். அப்போதுதான் இந்த இடைக்கால உத்தரவுக்கு தீர்வு காண முடியும்.

இதற்காகத்தான் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இந்த பொதுப்பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொது மக்களும்,ரியல் எஸ்டேட் வர்த்தகர்களும், முகவர்களும், தொழிலாளர்களும் பங்குபெறும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
இந்தஅழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி போராட்டத்துக்கு அனைத்து கட்சி தலைவர்களும் வருகைதந்து சிறப்பிக்க உள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைவரும் வாரீர்……வாரீர்……வாரீர்……

இப்படிக்கு

“விருகை வி என் கண்ணன்”

%d bloggers like this: