Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

மாட்டுக்கறி திங்கக் கூடாது என்று தடுக்க எவனுக்கும் ‪உரிமை‬ இல்லை

 
 
 
https://www.facebook.com/1135654236485703/videos/1173594139358379/
200 கிலோ மாட்டுக்கறியை டெல்லிக்கு அருகில் உள்ள புறநகரில் இருந்து இரு ‪#‎இஸ்லாமிய_இளைஞர்கள்‬ லாரியில் நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் சென்று கொண்டிருந்த போது‪#‎பசுபாதுகாப்பு_அமைப்பு‬ உறுப்பினர்கள் இஸ்லாமிய இளைஞர்களை உதைத்து மாட்டு சாணியையும், மாட்டு மூத்திரத்தையும் சாப்பிட வைத்த காட்சியை தங்களுடைய வீரத்தீர செயலாக இந்து_பயங்கரவாதிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
10.06.2016-இல் நடைப்பெற்ற இக்கொடூரத்தை குறித்து‪#‎பசுபாதுகாப்பு_உறுப்பினர்கள்‬, “மாட்டுக்கறியை கடத்தியதால்தான் இவர்களை தண்டிப்பதற்காகவே கோமியத்தையும் ‪#‎கோமாதா‬ சாணத்தையும் திங்க கொடுத்தோம்” என்கிறார்கள்.

‪#‎கஞ்சா‬ கடத்துவது, ‪#‎சாராயம்‬ கடத்துவது போல், மாட்டுக்கறியை இஸ்லாமியர்கள் கடத்துவதாக கூறுவது நீதிக்கு எதிரான ‪#‎இந்து_நாட்டாமைத்தனம்‬.
மாட்டை, ‪#‎மாதா‬ என்பதும், அதன் மூத்திரத்திரத்தை புனிதமான கோமியமாக கருதுவதும், மாட்டுப் பீயை ‪#‎பிள்ளையார்‬சாமியாக்கி விளையாடி பார்ப்பதும் இந்துக்களின் அறிவாளித்தனமான கண்டுப்பிடிப்பாக இருக்கலாம். அதற்காக இஸ்லாமியர்களை மாட்டுக்கறி திங்கக் கூடாது என்று தடுக்க எவனுக்கும் ‪#‎உரிமை‬ இல்லை.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; இந்துக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் சாப்பிடும் மாமிசமாகவும் ‪#‎மாட்டுக்கறி‬இருக்கிறது.
இதில் பீயையும் மூத்திரத்தையும் திங்க கொடுப்பது இந்து பயங்கரவாத காட்டுமிராண்டிகளின் ‪#‎பண்பாடு‬ என்றால் இந்த அசிங்கத்தை வெளிநாடுகளில் பல்வேறு மொழிகளில் எடுத்துச் செல்லுங்கள். இந்து பயங்கரவாதிகளை காரித்துப்ப நாம் இப்போதைக்கு செய்ய வேண்டியவை மாட்டுக்கார மட்டு புத்திகளை நாற அடிப்பதுதான்…
‪  Thanks By
#‎தமிழச்சி‬
29/06/2016

இந்தியாவில் கலவரம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது

 
https://www.facebook.com/aliakbar.abdul/videos/10209382361172936/
இந்தியாவில் கலவரம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பதையே இங்கு காண்கின்றீர்கள்!!!!!!!!!!!
சும்மா இருப்பவர்களை சண்டைக்கு இழுக்கும் முயற்ச்சி?????
==================================================
ஜார்கண்டில் மஸ்ஜித்திற்கு முன்னால் காவியுடையணிந்த இந்துத்துவா கும்பல் போலிஸாரின் பாதுகாப்புடன், சத்தமாக பாடல்களை ஒலித்து வெறியாட்டம் போட்டு, இனத்துவேஷமான வார்த்தைகளயும் உமிழ்கின்றது.
………………………………..
” அல்குர்ஆன் 8:30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். ”
:::::::::::::::::::::::::::::::::::::::::
பின்வரும் லிங்கை கிளிக் செய்து எமது பக்கத்தை லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.https://www.facebook.com/groups/meezan2015/

பயமில்லாமல் குற்றவுணர்வில்லாமல் ஒரு சம்பவத்தை நிகழ்த்தும்

It worker swathi killed tamil news
Chennai Girl killed

சுவாதி கொலையில் இவ்வளவு நெருக்கடிகள் தரப்பட்டுள்ளதால் நிச்சயம் கொலையாளியைப் பிடித்து விடுவார்கள். எந்த இனம் என்பது குறித்த தகவல்கள் அப்போது தெரிந்து விடும். அதை முன்னிறுத்தி இன்னொரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன்.
ஒருமுறை வழக்கொன்றிற்காக சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றிற்குச் சென்றிருந்தேன். நிலுவையில் உள்ள வழக்கிற்காக வந்திருந்த அந்த மூன்று சிறுவர்களைச் சந்தித்தேன். அந்த வழக்கு குறித்த சம்பவத்தை உற்சாகமாக விவரித்தார்கள். துளிகூட குற்றவுணர்ச்சியோ பயமோ இல்லாமல் அந்தச் சம்பவத்தை அவர்கள் விவரித்ததைக் கேட்கையில் மனம் அதிர்ந்தது. கிறிஸ்துமஸ் நள்ளிரவில், அசோக் நகரில் உள்ள வீடொன்றை உடைத்து உள்ளே போய் சில லட்சம் பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்ததை நடித்துக் காட்டினார்கள்.

அந்தப் பணத்தை என்ன செய்தீர்கள் என்று கேட்டால், ஜாலியாக செலவழித்தோம் என்றார்கள். மொபைல் வாங்கியிருக்கிறார்கள். விதம் விதமான பார்களில் குடித்திருக்கிறார்கள். அதில் ஒருத்தன் போதையில் தன்னுடைய இளம் காதலியிடம் உளறியதால் மாட்டிக் கொண்டார்கள். இல்லாவிட்டால் எங்களை யாரும் கண்டு பிடித்திருக்கவே முடியாது. தொழில் சுத்தமாய் அந்தக் கொள்ளையைச் செய்தோம் என்று சவால் விட்டார்கள். உங்களுக்குப் பயமாக இல்லையா என்கிற கேள்வியை அவர்களை நோக்கி வீசுவது அசட்டுத்தனமானது என்பதை அவர்களுடைய ஒவ்வொரு அசைவும் உணர்த்தியது. ஒருவேளை அந்த வீட்டில், நீங்கள் கொள்ளையடித்துக் கொண்டிருந்த போது யாராவது வந்தால் என்ன செய்திருப்பீர்கள்? கொன்றிருப்போம் என்று நிறுத்தி நிதானமாகச் சொன்னவனின் கண்களை உற்றுப் பார்த்தேன். துளி பயமில்லை. சாகசம் போல ஏதோவொன்று தெரிந்தது. எழுதிக் கொண்டிருக்கும் அஜ்வா நாவலுக்காக இது போல, சில இளைஞர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். பயமில்லாமல் குற்றவுணர்வில்லாமல் ஒரு சம்பவத்தை நிகழ்த்தும் ஒரு லேயர் பெருகி வருகிறது. இதில் வர்க்கப் பேதங்களெல்லாம் இல்லை. குடிசையில் இருப்பவனும் இருக்கிறான். பொறியியல் படிப்பவனும் இருக்கிறான். இவர்களை ஒன்றிணைக்கும் ஒற்றைப் புள்ளி விதம் விதமான போதை. இப்படியான இளைஞர்கள் அந்தரத்தில் இருந்து குதிப்பதில்லை. உங்கள் வீட்டிலிருந்தோ எங்கள் வீட்டிலிருந்தோதான் கிளம்பி வருகிறார்கள். கட்டற்ற சுதந்திரத்தைத் தருவது இருக்கட்டும். கண்காணிப்பும் அவசியம் என்பதைத்தான் நான் பார்த்த கதைகள் எனக்கு உணர்த்தின. கொன்றிருப்போம் என நிறுத்தி நிதானமாகச் சொன்ன சிறுவனின் வயது அதிகப்பட்சம் பதினைந்து இருக்கலாம்!
Saravanan Chandran

இந்த மூன்றாம் வகை அப்பாவி இந்துமதத்தினர்கள் இருக்கிறார்கள்

 
13533297_605098679649324_4828395004752469897_n
மதவாத சக்திகள் அடுத்த பதினைந்து அல்லது பத்துவருடங்கள் கழித்து
இந்தியாவில் நடத்தப் போகும் மாபெரும் இனவழிப்புக்கு அடித்தளமாக ’யோகா’ என்ற விஷயத்தையும் பரப்புகிறார்கள் என்ற கோணத்தில் பார்க்காதவரை நாம் அனைவரும் ஏமாந்துதான் போவோம்.
யோகா நல்ல விஷயமாக இருக்கலாம்.
ஆனால் யோகாவை ஏன் இவ்வளவு தீவிரமாக முன்வைக்கிறார்கள். ஏன் இவ்வளவு அனிமேட்டடாக கொண்டாடுகிறார்கள், ஏன் இவ்வளவு வேகமாக திணிக்கிறார்கள் என்பதை யோசிக்காதவரையில் நாம் அனைவரும் ஏமாந்துதான் போவோம்.
மோடி போன்ற தலைவர்களின் தலைமையில் ஒரு இயக்கம் எதைத்திணித்தாலும் அதை சந்தேகக்கண் கொண்டுதான் பார்க்கவேண்டும்.
பா.ஜ.க அமைச்சர்கள் தொடர்ச்சியாக மதவெறிக் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். அவர்களது ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் மதவெறி இருக்கிறது.
அவர்கள் இவ்வளவு ஆர்வமாக திணிக்கும் யோகாவை எப்படி ஒரு இந்திய ஒருமைப்பாட்டை நம்புபவனால் ஏற்றுக் கொள்ள முடியும்.
நிச்சயமாக அதில் உள் அர்த்தம் இருக்கிறது என்று தெரியவில்லையா?
இந்து மதம் ஆயிரம் பாகுபாடுகளை மக்கள் மேல் காட்டிக் கொண்டிருக்க, அதை மறைத்து அதன் மேல் ஒரு பெருமிதம் உண்டு பண்ணவே யோகாவை இப்படி புகழ்பெற வைக்கிறார்கள் என்ற எளிய உண்மை தெரியவில்லையா?
ஒரு இந்தியனாக தொடர்ச்சியாக தினத்தந்தி மட்டும் வாசிப்பவனாக உங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஆர்.எஸ்.எஸ் ஒரு இந்து அடிப்படைவாத இயக்கம்
அதே அளவு நிறைய முஸ்லிம் அடிப்படைவாத இயக்கமும் இருக்கும்.
ஆனால் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்கள் மேல் இருக்கும் பயமும், அருவருப்பும் ஆர்.எஸ்.எஸ் மீது இருக்காது.
காரணம் என்னவென்று யோசித்திருக்கிறீர்களா?
இப்போது யோகாவை ஆதரிக்கும் நம் அறிவுஜீவிகள் போல் எம்.எஸ் உதயமூர்த்தியில் இருந்து ஜெயமோகன் வரை கோடித்தெரு மாமா, சித்தப்பாவரை ஒரு விஷயத்தை சும்மாவேனும் சொல்லிவைப்போம்.
“ஆர்.எஸ்.எஸ் ஒரு சுயக்கட்டுபாட்டை வளர்க்கும் இயக்கம்.அதில் செர்ந்தால் ஒழுக்கம் வளரும்” இதை திரும்ப திரும்ப மக்கள் மேல் திணித்து ஆர்.எஸ்.எஸ் மேல் ஒரு அருவருப்பு வளராத பக்குவத்துக்கு நம் மனதை தயார்படுத்தி விட்டார்கள்.
அதே மாதிரி ஒரு இந்து மனநிலையைத்தான் இந்த யோகா திணிக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
இந்த யோகா விளம்பரங்கள் எதைச் சொல்கின்றன.
// இந்தியர்கள் அனைவரும் இந்துக்களே.//
இந்த இந்துக்களே என்பதை நேரடியாகச் சொன்னால் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேசுவார்கள்.
அதனால் அவர்கள் யோகாவை கக்கத்தில் தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்.
இன்னும் கொஞ்சநாளில் பாருங்கள் வேத கணிதம் அற்புதமானது. அதை கட்டாயம் கணிதபுத்தகங்களில் சேர்க்கவேண்டும் என்று சேர்த்து இந்துமதப் பெருமையை மாணவர்கள் மனதில் திணிப்பார்கள்.
வேதப்பாரம்பரியம்தான் இந்தியா என்பதை அதன்முலம் மக்கள் மனதில் பதியவைப்பார்கள்.
சமூகநீதி புரிந்தவர்கள் உண்மையான அக்கறையில் அப்படித் திணிப்பதை எதிர்க்கும் போது ஒரு கணித ஆர்வலனாக நான் என்ன சொல்வேன்
“ஐயா ஐயா கணக்குப் படிச்சா ரொம்ப நல்லதுய்யா. அது வேதத்துல இருந்தா என்ன? குரான்ல இருந்தா என்ன? அறிவுதான. மோடி மேல உள்ள கோபத்த மோடி மேல காட்டுங்க. அத கணக்கு மேல காட்டாதீங்க” என்பேன்.
இங்கேதான் இந்துவெறியர்கள் ஜெயிக்கிறார்கள்.
இந்தியாவில் மூன்றுவிதமான இந்துக்கள் இருக்கிறார்கள்.
அதற்குமுன்பாக இந்தியாவில் 85 சதவிகிதம் இந்துக்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
-முதல்வகை இந்துக்கள் இந்துமத வெறியர்கள். இவர்களுக்கு இந்துமதத்தின் குறைகளைச் சொன்னால் புரியவே புரியாது. என்ன அநியாய தர்மத்தையும் ஏதாவது ஒரு தத்துவம் சொல்லி நிருபித்துவிடுவார்கள்.
-இரண்டாம் வகையினர் இந்து மதத்தினால் ஏற்பட்ட தீமையை புரிந்து கொண்டவர்கள். இவர்கள் தீவிரமாக இந்துமதத்தின் சடங்குகளை திணிப்புகளை எதிர்ப்பவர்கள். இவர்கள் குறைவாகவே இருப்பர்கள்
-மூன்றாம் வகையினர் ”பொதுமக்கள்”. அவர்களுக்கு இந்து என்ற எண்ணம் அதிகமிருக்காது. ஆனால் இந்து மதப் பண்டிகைகளை கொண்டாடுவார்கள். அதிரசம் சுட்டு சாப்பிடுவார்கள். இந்து மத அழகியலை அழகியலுக்காக கொண்டாடுவார்கள். இந்து மதம் அழிகிறதே என்று கவலைப்படவும் மாட்டார்கள். வளர்ச்சியடைகிறதே என்று மகிழ்ச்சியடையவும் மாட்டார்கள்.
இந்த மூன்றாம் வகை அப்பாவி இந்துமதத்தினர்கள் இருக்கிறார்கள் இல்லையா அவர்களை முதல்நிலை வெறிகொண்ட இந்துக்களாய் ஆக்குவதுதான் மதவாத சக்திகளின் நோக்கம்.
எப்படி மதவாத சக்திகளாக, ஒரு வெறியர்களாக ஆக்குவது.
ஏதாவது ஒரு விஷயத்தின் மூலம் ஒன்று திரட்டுவது, அப்படி திரட்டுவதின் மூலம் காட்டப்படும் கூட்டத்தைக் கண்டு மக்கள் ஆழ்மனதில் நாம் இத்தனைபேர் இருக்கிறோம். நாம் அனைவரும் இந்துக்கள் என்ற எண்ணத்தை வரவழைப்பதுதான் வெறியர்களாவதற்கு முந்தைய நிலை.
அந்த நிலைக்குதான் இந்த யோகா யுத்தியை மதவாத சக்திகள் தொடர்ச்சியாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
காந்தி இது மாதிரி ஒரு யுத்தியை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தினார். அந்நிய துணிகளை ஏற்காமல் புறக்கணிக்கவேண்டும் என்றார். இதை ஒரு வீட்டின் குழந்தைகூட செய்யும். அதை அவர்கள் செய்யும் போது அவர்களுக்கும் போராட்ட உணர்வு வருகிறது. அதன் மூலம் ஒரு எழுச்சி வளர்க்கிறது.
இதைத்தான் யோகா மூலமாக மதவாத சக்திகள் தீய நோக்கத்திற்காக இப்போது செய்து வருகின்றனர்.
இதை இந்தியர்களாகிய நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
யோகா உடலுக்கு நன்மையானது. உண்மைதான்.
ஆனால் மோடி எதற்காக அதை எடுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்கிறார் என்பதை பார்க்க வேண்டும் அல்லவா?
கொஞ்சம் விவரம் தெரிந்தவர்கள் அன்னப்பறவை போல மோடியையும் யோகாவையும் பிரித்து ஒன்றை ஒதுக்கி ஒன்றைக் குடித்துக் கொள்வீர்கள்.
ஆனால் அதிகம் விவரம் தெரியாத அப்பாவி இந்தியன் மனதில் யோகாவின் மூலம் இந்துவெறியும் அல்லவா ஏறப் போகிறது.
இந்த எளிய உண்மை ஏன் நமக்கு தெரியாமல் போனது.
ஏன் யோகாவின் கவர்ச்சியில், யோகாவை முன்னிறுத்தும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்களின் சதியை கவனிக்காமல் போனோம்.
நானும் மகாபாரத உதாரணத்தையே சொல்கிறேன்.
எப்படி சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை அர்சுனன் எதிர்த்தானோ
அப்படி மோடியும் அவர் சகோக்களும் யோகாவை முன்னிறுத்தி,
இந்திய ஒருமைப்பாடு என்னும் பீஷ்மரை,
இந்துவெறி என்னும் அம்பை எய்து எதிர்க்க முன்னேறுகிறார்கள்.
அவர்கள் முன்னேறுவதற்கு வசதியாக நாமே மோடி வேறு, அவர் பரப்பும் யோகா வேறு என்று பிரச்சாரமும் செய்கிறோம்.
நீ புடுங்குற ஆணி எல்லாமே தேவையில்லாததுதான் என்று வடிவேலு சொல்வதைப் போல,
இந்திய கலாச்சார ரீதியாக மோடி எந்த சிறிய திட்டத்தை, பிரச்சாரத்தை அறிவித்தாலும்
அதற்குள் இந்துவெறிதான் இருக்கும் என்பதை
ஆணித்தரமாக நம்பாதவரை
நாம் ஏமாந்துதான் போவோம்.
நன்றி திரு .விஜய் பாஸ்கர் ( எழுத்தாக்கம் )

வீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம்

வீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம்

வீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம் தரக்கூடிய முக்கியமான குறிப்புகளை பார்க்கலாம்.
* வீட்டின் தலைவாசலை நான்கு திசைகளில் எந்த திசையிலும் அமைத்துக் கொள்ளலாம்.
* ஒரு வீட்டுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட வாசல்கள் இருக்கக்கூடாது.
* ஒரு வாசல் மட்டுமே அமைக்க முடியும் என்றால் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் மட்டும்  இருப்பதே சிறப்பானது.
*இரண்டு வாசல்கள் அமைக்கலாம் என்றால் கிழக்கு,மேற்கு அல்லது வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருப்பது சிறப்பானது.
*  இரண்டு வாசல் அமைப்புகளில் தெற்கு மேற்கு ஆகிய திசைகளில் மட்டும் வருவது தவிர்க்கப்பட வேண்டும்

வீதியில் நின்று தொழ முயன்ற முஸ்லிம்களுக்கு துணி விரிப்பைக் கொடுத்து உதவிய சீக்கிய சகோதரர்!

சீக்கிய சகோதரர்!
சீக்கிய சகோதரர்!

13450800_797450517023111_4208724123328931631_n
வீதியில் நின்று தொழ முயன்ற முஸ்லிம்களுக்கு
வீதியில் நின்று தொழ முயன்ற முஸ்லிம்

 
வீதியில் நின்று தொழ முயன்ற முஸ்லிம்களுக்கு விற்பணைக்காக வைத்து இருந்த புத்தம் புதிய துணி விரிப்பைக் கொடுத்து உதவிய சீக்கிய சகோதரர்!
ஒ சங்பரிவார் இந்துத்துவா பயங்கரவாதிகளே? விரைந்து ஒடோடி வாருங்கள்!

உங்கள் அகண்ட பாரத இந்துத்துவா சித்தாந்தக் கொள்கைக்கு காஷ்மீரில் இடி விழுந்து விட்டது!
காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் கரண் மார்க்கெட் பகுதியில் வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகைக்காக மக்கள் கூட்டம் அதிகம் வந்து விட பள்ளிவாசல் உள்ளே இடம் இல்லாமல் அதிகமான மக்கள் நின்று தொழுகையை நிறைவேற்ற முயன்ற நேரத்தில் விற்பணைக்காக வைத்து இருந்த புத்தம் புதிய துணி விரிப்பை பெரும் திரளாக திரண்டு இருந்த மக்களுக்கு கொடுத்து உதவி செய்து மாபெரும் மனித நேயத்தை வெளிக் காட்டி இருக்கிறார் நேசமிகு சீக்கிய சகோதரர் ஒருவர்!
இந்தியாவில் மதவெறியை தூண்டி முஸ்லிம்களை கருவறுக்க துடிக்கும் காவி பயங்கரவாதிகளுக்கு இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!
சரியான புரிதலும் சகோதரத்துவமும் மனித நேயமும் அன்பும் பாசமும் எங்கெல்லாம் பரவி இருக்கிறதோ அங்கெல்லாம் மகத்தான மாண்புமிகு மனிதர்களைக் காண முடியும் மதவெறியர்களுக்கு அங்கு வேளையும் இல்லாமல் போய்விடும்!
‪#‎இந்துவேறு_இந்துத்துவாவேறு‬
படம் மற்றும் தகவல் Unofficial: Subramaniam Swamy பதிவு சுல்தான் சலாகுதீன் நன்றி

மோடிக்கு 74 முறை கைதட்டப்பட்டதின் ரகசியம்

Mr Arunan
Mr Arunan

சமூக ஆர்வலர்அருணன் (
Ramalingam Kathiresan ) அவர்களின்
முகநூல் பதிவு:
மோடி உரை
மோடியின் உரைக்கு 74 முறை
அமெரிக்க நாடாளுமன்ற
உறுப்பினர்கள் கைதட்டினார்கள் என்று
பாஜகவினர் புளகாங்கிதத்தோடு
எழுதுகிறார்கள்.
ஏன் அப்படி கைதட்டினார்கள் என்பது
கூட்டறிக்கையை பார்த்த பிறகுதான்
புரிபடுகிறது.
அந்தஅளவுக்கு அமெரிக்கா நீட்டிய
இடத்தில் எல்லாம் கையெழுத்து
போட்டிருக்கிறார் மோடி.
அதனொரு*”பிரதான ராணுவ
கூட்டாளி”*யாக இருக்க
ஒப்புக்கொண்டிருப்பது
மட்டுமல்லாது , அதனுடைய
போர்க்கப்பல்கள், விமானங்களுக்கு
இந்தியாவில் எரிபொருள் நிரப்பவும்
, உபகரணங்கள் கொடுக்கவும் ஒப்புக்
கொண்டிருக்கிறார்.
இந்த பிராந்தியத்தில் *எந்தவொரு
நாட்டை தாக்க அமெரிக்கா
முயன்றாலும் அதற்கு நாம்
உதவிசெய்ய வேண்டும்!* அந்த நாட்டில்
நமது இந்தியர்கள் இருந்தால்
அவர்களும் அந்த தாக்குதலால்
பாதிக்கப்படுவார்கள். அப்படி
யெல்லாம் நடக்காது என்று நம்மை
நாமே ஏமாற்றிக் கொள்ள கூடாது.
ஈராக்கோடு மிகுந்த நட்போடு
இருந்த அமெரிக்காதான் பின்னர்
அதை துவம்சம் செய்து அந்த நாட்டு
அதிபரை தூக்கி சென்று தூக்கில்
போட்டது என்பதை மறந்து
விடக்கூடாது.
ஆசியா- பசிபிக் மற்றும் இந்து
மகாசமுத்திரப் பிராந்தியத்தில்
அமெரிக்காவின் “முன்னுரிமை
கூட்டாளி”யாக இந்தியா
இருக்கவும்ஒப்புக்கொண்டிருக்கிறார்
மோடி.
அருணன்
இதன் அர்த்தம் இந்தப் பகுதியில்
அமெரிக்காவின் கையாளாக நாம்
செயல்பட வேண்டும் என்பது. இது
இந்தப் பகுதியின் பல்வேறு
நாடுகளின் வெறுப்புக்கு நம்மை
ஆளாக்கும்.
இவ்வளவும் போதாது என்று 6
அணுஉலைகளை வாங்கவும் மனிதர்
ஒப்புக் கொண்டிருக்கிறார். அவற்றின்
அநியாய விலை ரூ2.8 லட்சம் கோடி
என்பது மட்டுமல்லாது விபத்துக்கான
நட்டஈட்டை இந்தியாவின்
பொதுத்துறை இன்சூரன்ஸ்
நிறுவனங்கள் ஏற்க வேண்டுமாம்!
இவ்வளவையும் இந்திய
நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல்
செய்திருக்கிறார் என்பதைச் சரியாக
சுட்டிக் காட்டியுள்ளது மார்க்சிஸ்டு
கட்சி.
இத்தகைய வேலைசெய்த மோடிக்கு
அத்தனை முறை அமெரிக்க
ஆட்சியாளர்கள் கை தட்டியதில்
ஆச்சரியம் என்னவோ?

அமெரிக்காவில் கைதட்டல் வாங்கிய மோடி குறித்து பக்தர்கள் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள்

அமெரிக்கப் பயணத்தில் இந்தியா பெறுவது என்ன?
Prime Minister
Prime Minister

காலாவதியான தொழில்நுட்பத்துக்கு 2.8 லட்சம் கோடி
அமெரிக்காவில் கைதட்டல் வாங்கிய மோடி குறித்து பக்தர்கள் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பேசுவது ஒன்றாகவும் உள்நாட்டில் செயல்கள் வேறாகவும் இருப்பதை தெள்ளத்தெளிவாக எழுதினால், அதில் உள்ள விஷயங்களில் ஒன்றுக்கும்கூட பதில் தராமல் எப்போதும் போல தேய்ந்துபோன ஒரே வாதத்தை முன்வைக்கிறார்கள் — பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆயிற்று. 60 ஆண்டுகளாக சீர்கெட்ட இந்தியாவை இப்போதுதான் சீர்செய்து கொண்டிருக்கிறார்.

பக்தர்களிடம் வேறு ஏதும் எதிர்பார்க்க முடியாது. போகட்டும். சிட்டிசன் டாட் இன் தளத்தில் ரபீர் புர்காயஸ்தா எழுதிய கட்டுரையின் சுருக்கத்தை தமிழில் தருகிறேன்.
அமேரிக்காகாரன் எதற்குக் கை தட்டினான் என்று புரிந்து கொள்ள விரும்புவோர் புரிந்து கொள்ளட்டும்.
அமெரிக்காவுக்கு நான்காவது முறையாக பயணம் மேற்கொண்ட மோடியைப் பற்றி பத்திரிகைகள் விதந்தோதுகின்றன. ஆறு அணு உலைகளை நிறுவுவதற்கான ஆரம்பப் பணிகள் என்று பாராட்டித் தள்ளுகின்றன. அது மட்டுமா? வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் ஏபி1000 மாடல் அணுஉலைகளை 5ஆம் தலைமுறை உலைகள் என்றும் பாராட்டுகின்றன. இதற்கு முந்தைய ஏபி600 உலைகள் இரண்டாம் தலைமுறை உலைகள் என அழைக்கப்பட்டன. அதற்கு அடுத்து வருகிற ஏபி1000 மூன்றாம் தலைமுறை உலையாகத்தானே இருக்க முடியும்?! நடுவே இரண்டினை விட்டுவிட்டு நேராக ஐந்தாம் தலைமுறை என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆனால் இந்தியாவில் இருக்கும் சில ஊடக கனவான்களின் கண்களுக்கு மட்டும் அப்படித்தான் தெரிகிறது!
உண்மை என்னவென்றால், எட்டாண்டுகால பேரத்துக்குப் பிறகு, குஜராத்தில் மிதிர்விர்டி என்ற இடத்தில் அமைக்கப்படுவதாக இருந்ததை ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளத்தில் அமைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. ஸ்ரீகாகுளத்தில் அமைப்பதற்கான ஆரம்பப் பணிகளை மேற்கொள்வோம் என்று மட்டுமே வெஸ்டிங்ஹவுஸ் கூறியுள்ளது.
இன்றைய உலகில் அணு சக்தித் தொழில்நுட்பம் என்பது சாகும் தருவாயில் உள்ள தொழில்நுட்பம். அதன் முதலீட்டுச் செலவுகள் மிகவும் அதிகம். ஒருகாலத்திலும் எந்த நாட்டிலும் இலக்கு வைக்கப்பட்ட காலத்திற்குள் கட்டப்பட்டதே இல்லை. புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் முறைகளான காற்றாலை மற்றும் சூரிய மின்சாரத்துக்கான முதலீட்டுச் செலவுகள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன. எம்ஐடி டெக்னாலஜி ரிவ்யூ என்ற இதழ் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு கட்டுரை வெளியிட்டது. அமெரிக்காவின் அணு உலை சராசரியாக 35 ஆண்டுகள் பழமையானது, நவீன வடிவமைப்புத் தரங்களின்படிப் பார்த்தால் காலாவதி ஆனது, செயல்பாட்டு லைசன்ஸ் முடிவடையும் தருவாயில் இருக்கிறது என்று அது எழுதியது.
ஒருகாலத்தில் அணு சக்தியில் ஆர்வம் கொண்டிருந்த அமெரிக்கா, இனிமேலும் இந்தத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதில்லை என முடிவு செய்து விட்டது. அமெரிக்காவின் செத்துக் கொண்டிருக்கும் அணுஉலைத் தொழில்நுட்பத்துக்கு உயிர் கொடுக்கக்கூடிய நாடுகள் இரண்டுதான் – இந்தியாவும் சீனாவும். அமெரிக்காவின் முக்கியமான அணுஉலை நிறுவனங்களான வெஸ்டிங்ஹவுஸ், ஜிஈ இரண்டுக்குமே அமெரிக்காவிலும் எந்த வியாபாரமும் கிடைக்கவில்லை, ஐரோப்பிய யூனியனிலும் ஏதும் கிடைக்கவில்லை. ஆக, அணுஉலைகளைத் தருவதன் மூலம் அமெரிக்கா இந்தியாவுக்கு பெரிய உதவி ஏதும் செய்து விடவில்லை. மாறாக, அமெரிக்காவில் மரணப்படுக்கையில் கிடக்கும் தொழில்நுட்பத்துக்கு இந்தியா உயிர் கொடுக்க முன்வந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
அதற்காக இந்தியா என்ன விலை கொடுக்கப்போகிறது? ஜைதாபூர் அணுஉலைக்காக அரிவா நிறுவனத்துடன் என்ன பேரம் பேசப்பட்டிருக்கிறது என்று இதுவரை தெரியாது அல்லவா? அதேபோல வெஸ்டிங்ஹவுஸ் பேரமும் எவ்வளவு என்று இதுவரை தெரியாது. இருந்தாலும், பழைய சில மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்த்தால், 6 அணு உலைகளுக்காக இந்தியா 2.8 லட்சம் கோடி செலவு செய்யும் என்று கணக்கிடலாம். அதாவது, கிலோவாட் யூனிட்டுக்கு 12-14 ரூபாய்! நிலக்கரியில் இயங்கும் அனல்மின் நிலையத்தின் உற்பத்திச் செலவைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு. காற்றாலை அல்லது சூரிய மின்சாரத்துக்கான செலவைவிட இரண்டு மடங்குக்கும் அதிகம்!
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியா-அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம் போட்டப்பட்டது. வெஸ்டிங்ஹவுஸ், ஜிஈ ஆகிய இரண்டுக்கும் தலா ஒவ்வொரு இடம் தருவதென முன்வந்தது. ஸ்ரீகாகுளத்தை ஜிஈ-ஹிட்டாச்சிக்கு வழங்கியது இந்தியா. ஜிஈ அதை மறுத்து விட்டது. குஜராத்தில் உள்ள மிதிர்விர்டியை வெஸ்டிங்ஹவுசுக்கு வழங்கியது. ஆனால் குஜராத்தில் அணுஉலை அமைக்க எதிர்ப்பு வந்ததாலும், சுற்றுச்சூழல் அனுமதி காரணங்களாலும் மிதிர்விர்டி திட்டம் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக இப்போது ஸ்ரீகாகுளத்தை வெஸ்டிங்ஹவுசுக்குத் தரப்போகிறது. (வடமாநிலஙகள் ஒதுக்கும் திட்டங்கள் எல்லாம் ஏன் தென்மாநிலங்களில் திணிக்கப்படுகின்றன என்று நான் கேட்க மாட்டேன்!)
ஆக, மோடி-ஒபாமா அறிக்கையில் இடம்பெற்ற ஆறு அணுஉலைத் திட்டங்கள் என்பது மன்மோகன் சிங் காலத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நீட்சியே தவிர புதிதல்ல. எட்டு ஆண்டுகளில் நடந்தது என்னவென்று பார்த்தால் – அடியைப் பிடிடா என்கிற கதையாக மீண்டும் துவங்கிய இடத்திலேயே நிற்பதுதான்.
(அப்போ காங்கிரஸ் காலத்தில் துவக்கியபோது என்ன செய்து கொண்டிருந்தாய் என்று என்னை யாரும் கேட்கத் தேவையில்லை. காங்கிரஸ் கால அணுஉலைத் திட்டங்களுக்கு எதிராக எழுதியவை நிறையவே என் பேஸ்புக் பக்கங்களில்உண்டு, வலைப்பூவிலும் உண்டு.)
காங்கிரஸ் காலத்திலாவது, அணுசக்தியின் ஆற்றல் குறித்த நம்பிக்கைகள் கொஞ்சம் இருந்தன. ஆனால் புகுஷிமா விபத்துக்குப் பிறகு உலகெங்கும் எல்லா நாடுகளிலும் அணுசக்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள்தான் இன்னும் அணுசக்தியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, அணுசக்தி என்பதற்கும் மேலாக, அணுஆற்றல் நாடுகளின் பட்டியிலில் சேர அமெரிக்கா அளித்த ஒத்துழைப்புக்கு நன்றிக்கடன்தான் இது. இந்தியாவுக்கு அணுஉலை எரிபொருள் கிடைக்கும் வாய்ப்பு திறந்தது என்றாலும், இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பம், எரிபொருள் மறுபயன்பாடு, என்எஸ்ஜி-யில் உறுப்பினராதல் ஆகிய இதர வாக்குறுதிகள் எதுவும் இன்னும் நிறைவேறவில்லை.
கடந்த எட்டு ஆண்டுகளில் எவ்வளவோ நடந்து விட்டது. ஃபுகுஷிமாவிலிருந்து நிறையவே கதிர்வீச்சு கடலுக்குள் கசிந்து விட்டது. புதிதாக அணுஉலைகள் ஏதும் அமைப்பதில் என்று அமெரிக்கா கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டது. ஓல்கிலுவாடோ, ஃபிளாமன்வில்லி ஆகிய இரண்டு இடங்களில் அணுஉலைகளில் கையைக் கடித்துக்கொண்ட பிரான்ஸ் இனிமேலும் அணுஉலைகளை விரிவாக்கம் செய்வதில்லை என நிறுத்தி விட்டது. மூடப்படும் அணு உலைகளுக்குப் பதிலாக புதிதாக மூன்றாம் தலைமுறை அணுஉலைகளை நிறுவலாமா என்று இங்கிலாந்து இன்னும் யோசித்துக் கொண்டேதான் இருக்கிறது. புதுப்பிக்கப்படும் ஆற்றல் வளங்களின் பக்கம் திரும்பிவிட்ட ஜெர்மனி அணுஉலைகளை மூடிக் கொண்டு வருகிறது.
இந்த நிலைமைக்குப் பிரதான காரணிகள் – மூன்றாம் தலைமுறை அணுஉலைகளுக்கு ஆகும் பெரும் செலவு, கட்டுமானத்தில் உள்ள கடினமான சிக்கல்கள், காலத்துக்குள் முடிக்க முடியாமல் போவது. அணு உலைகளுக்குக் கிடைக்கும் மின்சாரம் தடைபட்டால் என்னவாகும் என்பதை புகுஷிமா விபத்து நமக்குக் காட்டி விட்டது.
நாம் வாங்கப்போகும் வெஸ்டிங்ஹவுஸ் அணுஉலைகள் குறித்தும், இன்றைய சூழலில் இது புத்திசாலித்தனம்தானா என்றும் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். பிரான்சின் அரிவா நிறுவனத்தின் ஈபிஆர் (மூன்றாம் தலைமுறை கனநீர் அணுஉலை) என்ன பிரச்சினைகளைத் தருகிறதோ அதே பிரச்சினைகளை வெஸ்டிங்ஹவுஸ் ஏபி1000 அணு உலையும் எதிர்கொள்கிறது. அரிவாவின் ஈபிஆர் உலைகள் அமெரிக்காவிலும் சீனாவிலும் கட்டப்படும்போது பெரும் செலவுகளை ஏற்படுத்தின, குறிப்பிட்ட இலக்குக் காலத்தைக் கடந்தும் முடிக்க முடியவில்லை. அதே நிலைமைதான் வெஸ்டிங்ஹவுஸ் ஏபி1000 அணுஉலைக்கும் இருக்கிறது.
அமெரிக்காவில் ஜார்ஜியாவிலும், தென் கரோலினாவிலும் ஏபி1000 அணுஉலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. இரண்டும் தலா இரண்டு உலைகளைக் கொண்டிருக்கும், தலா 1100 மெவா மின் உற்பத்தி செய்யும். நான்கு ஆண்டுகளுக்குள் கட்டப்படும் என்று திட்டமிடப்பட்டது, ஆனால் ஏழு ஆண்டுகள் ஆனபிறகும் இன்னும் முடியவில்லை. முதல் யூனிட் 2018இலும், இரண்டாவது யூனிட் 2019இலும் முடியும் என இப்போது மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
வெஸ்டிங்ஹவுஸ் சீனாவிலும் சான்மென், ஹையாங் ஆகிய இரண்டு இடங்களில் நான்கு யூனிட்களை அமைத்து வருகிறது. இவையும் திட்டமிட்ட காலத்தைவிட மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் முடியாமல் இழுத்துக்கொண்டிருக்கிறது.
அரிவா பின்லாந்தில் அமைக்க முயன்ற மூன்றாவது யூனிட் ஈபிஆர் அணுஉலை போலவேதான் இதுவும். அரிவா திட்டம் ஐந்தாண்டுகளில் முடியும் என்று திட்டமிடப்பட்டு, மேலும் எட்டு ஆண்டுகள் கழிந்தும் இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு 3 பில்லியன் யூரோ என்று மதிப்பிடப்பட்டது, ஆனால் திட்டமிட்டதைவிட மூன்று மடங்காகி, இப்போது 8.5 பில்லியன் யூரோவாக உயர்ந்திருக்கிறது.
அமெரிக்காவில் தோஷிபாவுக்குச் சொந்தமான வெஸ்டிங்ஹவுஸ் அணுஉலைகளைப் பொறுத்தவரை, நிர்ணய விலை ஒப்பந்தம் உள்ளது. எனவே, அணுஉலை கட்டுவதற்கான கடனை திருப்பிச் செலுத்துவதில் ஏற்படும் தாமதம் என்பதுதான் பிரதானக் கவலை. சீனா விஷயத்தில் ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் தெரியவரவில்லை. ஆனாலும், தாமதம் குறித்து சீனா பெரிதும் கவலை கொண்டுள்ளது. தாமதம் ஏற்படுவதாலும், செலவு அதிகரிப்பதாலும் ஏற்படும் நஷ்டத்தை யார் ஏற்பார்கள் என்பது தெரியவில்லை. சீனா இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டது போலத் தெரிகிறது. இப்போது அவர்கள் தமது சொந்த அணுஉலைகளின்பக்கம் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார்கள்.
ஏபி1000 உலையின் முதலீட்டுச் செலவு எவ்வளவு? தாமதம், அதனால் ஏற்படும் அதிகச் செலவு என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டே பார்ப்போம்.
அமெரிக்காவில் நிறுவப்படும் உலைக்கு 2009இல் மதிப்பிடப்பட்டது 14 பில்லியன் டாலர் – அதாவது, இன்றைய நாணய மதிப்பில் 94 ஆயிரம் கோடி ரூபாய். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும், இலக்குக் காலம் கடந்த பிறகுதான் இயங்கும் என்றும் திட்டமிட்டதைவிட செலவுகள் அதிகரிக்காது என்றே வைத்துக்கொள்வோம். ஸ்ரீகாகுளத்தில் நிறுவப்படும் உலைகளுக்கு 2,80,000 கோடி ரூபாய் ஆகும். அதாவது, இரண்டு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய். அதாவது, ஒரு மெவா மின்சாரத்துக்கு 42 கோடி ரூபாய். நிலக்கரி அனல்மின் நிலைய உற்பத்திச் செலவைவிட 7 மடங்கு! இது மிகைப்படுத்தியது என்று யாரேனும் நினைத்தால் ஜைதாபூர் அரிவா திட்டத்தையும், 7 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் பேரம் இழுத்துக் கொண்டே இருப்பதையும் நினைவுகொள்ளவும்.
மேலே குறிப்பிட்டபடி ஒரு மெவா மின் உற்பத்திக்கு 42 கோடி ரூபாய் என்றால், உங்களையும் என்னையும் போன்றவர்கள் பயன்படுத்துகிற யூனிட்டுக்கு எவ்வளவு ஆகும்? மிகக் குறைவான மதிப்பீட்டின்படியும் யூனிட்டுக்கு 12 முதல் 14 ரூபாய் வரை வரும். நிலக்கரி மின்சாரத்துக்கு இது 3-4 ரூபாய், காற்றாலை அல்லது சூரிய மின்சாரத்துக்கு 4 முதல் 6 ரூபாய். தெளிவாகச் சொன்னால், இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்திச் செலவு, புதுப்பிக்கப்படும் மின்செலவைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு.
பயன்படுத்திய எரிபொருளைக் கையாள்வது, அவற்றை காலத்துக்கும் பாதுகாப்பது, ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால் ஏற்படுகிற மிகப்பெரிய இழப்புகள் எல்லாம் கணக்கில் கொண்டால்….!
அணு உலைக்கான செலவு அதிகமாவதைக் குறைப்பதற்காக, யூனிட் செலவைக் குறைப்பதற்காக அணு உலையின் திறனை அதிகப்படுத்துவதில் ஈடுபடுகின்றன. வெஸ்டிங்ஹவுஸ் ஏபி1000 உலை 1100 மெவா, அரிவாவின் ஈபிஆர் 1600 மெவா. இப்படி அதன் திறனை அதிகரிக்கும்போது அணுஉலைகளும் இன்னும் சிக்கலாகின்றன. வடிவமைப்பு, கட்டுமானம் எல்லாம் தாமதம் அடைந்து, திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்க முடியாமல் போகின்றது. இதுதான் அணு உலைகள் திட்டம் பின்னடைவதன் காரணம். அமெரிக்கா அணுசக்தி திட்டத்தைக் கைவிட்டதற்குக் காரணம் த்ரீமைல் ஐலேண்ட் விபத்து மட்டுமே அல்ல, திட்டமிட்ட செலவுக்குள்ளும் காலத்துக்குள்ளும் முடிக்க இயலவில்லை என்பதே.
இன்னொரு முக்கிய சிக்கல் இருக்கிறது. பல யூனிட்களை ஒரே இடத்தில் நிறுவும்போது விபத்துக்கான சாத்தியங்களும் அதிகம். இருந்தாலும் நாம் அதிக யூனிட்களை ஒரே இடத்தில் நிறுவுவதன் காரணம், செலவைக் குறைப்பதற்கே. ஸ்ரீகாகுளத்தில் ஆறு 1100 மெவா உலைகள் அமைக்கும்போது, ஏதேனும் விபத்து நிகழந்தால் அதன் விளைவு கேஸ்கேடிங் விளைவாக – மிகக் கடுமையாக இருக்கும்.
அணுசக்தித் தொழில்நுட்பம் ஒன்றுதான் தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே வரும் தொழில்நுட்பமாகும். மற்றவை எல்லாம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன.
ஆக, பொருளாதார ரீதியாகவும் சரி, சுற்றுச் சூழலுக்குத் தீங்கற்ற சக்தி என்ற வகையிலும் சரி, அணுசக்தி என்பது சரியான தீர்வு அல்ல. புதுப்பிக்கப்படும் ஆற்றல் வளங்களின் பக்கம் திரும்புவதே சரியான தீர்வாக இருக்கும்.
ஆங்கிலத்தில் வாசிக்க

வாஸ்து சாஸ்திரம் தரக்கூடிய முக்கியமான வாஸ்து மூலை

வாசல்கள் அமைக்கும் முறை
வீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம் தரக்கூடிய முக்கியமான குறிப்புகளை பார்க்கலாம்.
* வீட்டின் தலைவாசலை நான்கு திசைகளில் எந்த திசையிலும் அமைத்துக் கொள்ளலாம்.
* ஒரு வீட்டுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட வாசல்கள் இருக்கக்கூடாது.
* ஒரு வாசல் மட்டுமே அமைக்க முடியும் என்றால் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் மட்டும்  இருப்பதே சிறப்பானது.
*இரண்டு வாசல்கள் அமைக்கலாம் என்றால் கிழக்கு,மேற்கு அல்லது வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருப்பது சிறப்பானது.
*  இரண்டு வாசல் அமைப்புகளில் தெற்கு மேற்கு ஆகிய திசைகளில் மட்டும் வருவது தவிர்க்கப்பட வேண்டும்  Purchase a land in Chennai Redhills

துருவே’ போன்ற தேச வீரர்களின் தியாகம் ஏனோ அங்கீகரிக்கப் படுவதும் இல்லை. மக்களுக்கு ஞாபகம் இருப்பதும் இல்லை.

Bhopal
Bhopal

நல்ல பதிவுகளை பகிர்வோம்  bhopal gas tragedy In Tamil
நினைவிருக்கிறதா..?
1984-டிசம்பர் 3-ம் தேதி…!!!
போபால் ரயில்வே ஸ்டேஷனில் ‘துருவே’ என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி.
போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல்
கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு
வெளியே வந்தார்.
அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல்
அறைக்கு ஓடினார்.
எப்படியாவது லக்னோ டு
மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது
நோக்கம்.
ஆனால், அந்த ரயில்
ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை
ரயில் வந்தது.
அதில் இருந்து இறங்கிய
பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள்.
ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம்
இறந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் போபால் ரயில்
நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக்
காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது.
பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக்
கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை
ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும்
போபால் வழியே வந்துவிட வேண்டாம்’ என்று
தகவல் அனுப்பத் தொடங்கினார்.
அதையும் மீறி வரும் ரயில்கள் ஜன்னலை மூடிக் கொண்டு போபால் ஸ்டேஷனில் நிற்காமல் வேகமாகப் போய் விடுமாறு
அறிவுறுத்தினார்.
மூக்கிலும் வாயிலும் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, இரவு முழுவதும்
விழித்திருந்து வேலை பார்த்தார். அந்த இரவு விடிந்தது.
அடுத்த நாள் சிக்னல் அறையைத்
திறந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர் துருவே வாயில்
ரத்தம் வழிந்த நிலையில் சிக்னல் அனுப்பும் கருவியை ஒரு கையால் பிடித்தபடி செத்துக் கிடந்தார்.
துருவே மட்டும் இல்லை எனில், போபால் விஷ வாயுக் கசிவின் மரண எண்ணிக்கை இன்னும்
சில ஆயிரங்கள் கூடியிருக்கும்.
ஆனால்,
போபால் நகரத்தில் விஷவாயு கசிந்த அந்த இரவில் மாநில முதல்வர் அர்ஜுன் சிங்,
நகரில் இருந்து 14 கி.மீ ஓடோடிச் சென்று தப்பித்தார்.
’துருவே’ போன்ற தேச வீரர்களின் தியாகம் ஏனோ அங்கீகரிக்கப் படுவதும் இல்லை.
மக்களுக்கு ஞாபகம் இருப்பதும் இல்லை.
பகிரவாவது செய்வோம்.
படித்ததில் பிடித்தது பகிர்கிறேன்

கடமையை சரியாக செய்வதற்குத்தான் அரசாங்கம் ஊதியமும் பல சலுகைகளும் வழங்குகிறது

Sampriya Kumar
Sampriya Kumar

 
காவல்துறை பணியில் எத்தனையோ உயரதிகாரிகளுடன் எனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மிகப்பெரிய துன்பத்தை எனக்கு அளித்தாலும் , அதன் பயனாக காவலர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய இறைவன் வழங்கிய வாய்ப்புகளுக்கு நன்றி செலுத்துகிறேன்…..
கோயமுத்தூரில் நான் பணியாற்றிய போது ஒரு பெண் காவலரின் மீதான விசாரணை எனக்கு வழங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து அந்தப் பெண் காவலரை பணி நீக்கம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. மன நலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் காவலர் மிகவும் ஏழ்மையானவர். காவல் பணியும் பறிபோய்விட்டது , மன நலமும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப்பெண்ணை அவருடைய பெற்றோர் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதால் , பல இடங்களில் கூலி வேலை செய்து வாழ்ந்திருக்கிறார் .
இதை கேள்விப்பட்ட சில மகளிர் அமைப்புகள் அந்தப் பெண்ணின் மறு வாழ்வுக்காக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த காரணத்தால் , அந்தப் பெண்ணின் வழக்கை மறு விசாரணை செய்ய ஆணை வழங்கியதன் காரணமாக , விசாரணை அதிகாரியாக என்னை நியமித்து உத்தரவிட்டார் எனது உயரதிகாரி .
ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் . விசாரிக்கப்பட வேண்டிய சாட்சிகள் மொத்தம் 38 பேர்கள் . எனது விசாரணையை துவங்கிய போது தான் அந்தப் பெண் காவலரை பார்த்தேன் . மிகவும் அழுக்கடைந்த ஆடைகள் , தனக்கு மிகப்பெரிய அளவில் அநீதி இழைத்து விட்டார்கள் என்ற மன உளைச்சல் , அதன் பயனாக சொன்னதையே திருப்பி த் திருப்பி சொல்லும் அந்தப் பெண் நிச்சயமாக தவறு செய்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்தோடு , சாட்சிகள் இருந்த இடங்களுக்கு அந்தப்பெண் காவலரையும் , அதற்கான ஆண் பெண் காவலர் குழுவினரையும் பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று நான் விசாரணை செய்தேன் . ஆனால் மறு விசாரணை செய்யப்பட்ட அனைத்து சாட்சிகளும் இந்தப் பெண் காவலர் செய்தது குற்றம் என்பதை சாட்சியங்களோடு நிரூபித்து வாக்கு மூலங்கள் அளித்தனர். பைத்தியக்கார பெண்ணை அழைத்துக் கொண்டு எதற்காக ஊர் ஊராக இந்த அதிகாரி அலைகிறார் என்ற ஏளனப் பேச்சுக்கள் ஒரு புறம் என்னை மிகவும் சோர்வடைய வைத்தது . மறு புறம் எனது உயரதிகாரி அவர்கள் இந்தப் பெண் செய்தது குற்றம் தான் ( proved ) என்று விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வற்புறுத்தினார்.
இரண்டு மாதங்கள் முடிந்து விட்டது. இரவெல்லாம் அந்த விசாரணை அறிக்கையை படித்தேன் . அதன் பிறகு எனது மறு விசாரணை அறிக்கையை அளித்தேன் . எனது உயரதிகாரி அதை ஏற்க மறுத்து விட்டார். காரணம் , “விசாரணைப்படியும் சாட்சியங்களின் படியும் இந்தப் பெண் காவலர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை . ஆனால் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தப் பெண் காவலர் செய்த குற்றத்திற்கு இவர் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது “, என்று எனது விசாரணையை முடித்திருந்தேன் .
நல்ல மன நலமுடையவர் , உடல் நலமுடையவர் என்று அரசு மருத்துவரால் சான்றளிக்கப்பட்ட பின்னர் தான் ஒருவர் காவல்துறையில் சேர முடியும் . அப்படி நல்ல மன நிலையில் காவல் பணியில் சேர்ந்த பெண்ணுக்கு , சில மோசமான அதிகாரிகள் கொடுத்த மன உளைச்சல் தான் அந்தப் பெண் காவலரை மன நல பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. அதன் பிறகு அந்தப் பெண் காவலரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது உடனடியாக சென்னையில் உள்ள மன நல மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்து அங்கிருந்த மன நல மருத்துவர் சான்றிதழ் வழங்கியதோடு , சிகிச்சை முடியும் வரை அந்தப் பெண் காவலரை காவல் சம்மந்தப்பட்ட பணிக்கு அனுப்பக் கூடாது என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மன நல மருத்துவரின் பரிந்துரைப்படி செய்யாமல் , அந்தப் பெண் காவலரை காவல் பணிக்கு நியமித்திருக்கிறார்கள் அப்போதைய சில அதிகாரிகள் . அந்த நிலையில் தான் அந்தப் பெண் காவலர் அந்தக் குற்றத்தை செய்திருக்கிறார் . ஆகவே தன் நிலை மறந்த நிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அந்தப் பெண் காவலர் பொறுப்பாக மாட்டார் . ஆகவே இதில் இவரது தவறு ஏதுமில்லை என்ற எனது அறிக்கை தூக்கி தூர எறியப்பட்டது . நிறைய அதிகாரிகள் எனக்கு அறிவுரை வழங்கினார்கள் , யாரோ ஒரு பெண்ணுக்காக இந்த உயரதிகாரியை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று …. உயரதிகாரியை நான் மிகவும் மதிக்கிறேன் ..ஆனால் ஒரு அப்பாவி பெண் காவலருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது , ஆகவே எந்தக் காரணத்தைக் கொண்டும் எனது விசாரணை அறிக்கையை மாற்றித்தர முடியாது என்று திடமாக கூறி விட்டேன் . எத்தனையோ நெருக்கடிகளை இதனால் நான் சந்தித்தேன் . பிறகு வேறு வழியின்றி எனது விசாரணை அறிக்கை ஏற்கப்பட்டது .
நான் மறு விசாரணை அறிக்கை சமர்ப்பித்த ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு நாள் எனது அலுவலகத்திற்கு அந்தப் பெண் காவலர் வந்தார் , தன்னை மீண்டும் பணியில் சேர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று கூறி ஆனந்தத்தால் கதறியழுதார். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் என்று கூறி அனுப்பினேன் . 15 வருட ஊதியம் மற்றும் பிற பணப்பயன்களோடு ஒரு மிகப்பெரிய தொகை அரசாங்கத்தால் அந்தப் பெண் காவலருக்கு வழங்கப்பட்டது . தற்போது நல்ல மன நிலையோடு தலைமைக் காவலராக அந்தப் பெண் நல்ல முறையில் பணியாற்றி வருவதாகக் கேள்விப்பட்டேன் . இறைவனுக்கு நன்றி செலுத்தினேன்.
மற்றவர்களுக்கு உதவி செய்ய இறைவன் நமக்கு வாய்ப்பளிக்கிறார் . இதில் எனது முயற்சி என்று சொல்லிக்கொள்ள ஏதுமில்லை . நமது கடமையை சரியாக செய்வதற்குத்தான் அரசாங்கம் ஊதியமும் பல சலுகைகளும் வழங்குகிறது . என்ன நேர்ந்தாலும் , நியாயத்தை நிலை நாட்ட தவறக்கூடாது என்பதே காவல் துறை அதிகாரிகளின் எண்ணமாக செயலாக இருக்க வேண்டும் …… ஆனால் அந்த உயரதிகாரி எனக்கு நிரந்தர பகையாளியானது எனது பெரிய வருத்தம் …..

மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன்

மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் பல வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஒன்று கூடி போராட்டம்
நடத்தியதாக பல புகைப்படம் ,சமுக வலை தலத்தில் காணபடுகிறது அதில் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு ,,
 
13427907_1040761169344406_2395919301740903310_n 13442285_1040761119344411_7010249539792884351_n(1) 13346835_579679875526314_7307539381323058978_n 13442285_1040761119344411_7010249539792884351_n

மக்களே... கலைஞரை நம்புங்கள். பிடிக்கவில்லையென்றால் தாராளமாக ஜெயலலிதாவை நம்புங்கள்

M K Karunanidhi
M K Karunanidhi

எனக்கு சொல்லிச் சொல்லி அலுத்துப்போச்சு. ஆனாலும் சொல்றேன். கலைஞர் ஆட்சில இருக்கப்போ கருணாநிதி, கருணாநிதி, கருணாநிதினு கத்துவாய்ங்க. ஜெயலலிதா ஆட்சில இருந்தா தமிழக அதிகாரிகள், தமிழக போலீஸ், தமிழக அரசுனு பம்முவாய்ங்க. முந்தாநாள் திருமுருகன் காந்தி 2009ல கருணாநிதி அரசு போராட்டங்களை எப்படியெல்லாம் முடக்குச்சுனு விவாதத்துக்கு சம்பந்தமே இல்லாம நீட்டி முழக்குனாரு. சரி இன்னைக்கு ஜெயலலிதா வேலூர்ல இருந்து துவங்க வேண்டிய பேரணிக்கு அனுமதி தராம சென்னை எக்மோர்ல இருந்து வாங்கடா பசங்களானு உத்தரவு போட்ருக்காங்க. சரி ஏதாவது பொங்கியிருப்பாருனு பாத்தா ஜெயலலிதான்ற வார்த்தையே அவரு சுவர்ல இல்ல. திருமுருகன் ஒரு உதாரணம் தான். நெடுமாறன், வைகோ, சீமான், தமிழருவினு எல்லா துண்டுதுக்கடாவும் இதே ரகம்தான். என் மானமிகு, மதிமிகு தமிழக மக்களே… கலைஞரை நம்புங்கள். பிடிக்கவில்லையென்றால் தாராளமாக ஜெயலலிதாவை நம்புங்கள். ஆனால் இந்த சுயநல சில்லறைகளை நம்பாதீர்கள். பிணங்கள் தான் இவர்களின் முதலிடே. அதிலும் நெத்திக்காசை திருடிவிட்டு பிணத்தை வல்லூறுகளிடம் விற்கும் மனசாட்சியற்றவர்கள் இவர்கள். தயவுசெய்து இவர்களை நம்பாதீர்கள். புரண்டழுது பிச்சைக்கேட்டாலும் காசு கொடுக்காதீர்கள். அதற்கு பதில் யாரேணும் பிச்சைக்காரனுக்கு சோத்துப் பொட்டலம் வாங்கிக்கொடுங்கள். வயிறார வாழ்த்துவான்

‎நாகை அரசு மருத்துவமனைமேம்படுத்த நடவடிக்கை‬

‎நாகை அரசு மருத்துவமனைமேம்படுத்த நடவடிக்கை‬

இன்று மஜக பொதுச் செயலாளரும் , நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகை தலைமை அரசு மருத்துவமனையில் திடிர் ஆய்வு மேற்கொண்டார்

கண்காணிப்பாளர் செந்தில்குமார் MD , நிலைய மருத்துவ அலுவலர் ராஜா MBBS ஆகியோருடன் மருத்துவமனைக்கான தேவைகளை கேட்டறிந்தார்.
பிரசவ வார்டு , இதய நோயாளி பிரிவு , அவசர சிகிச்சைப் பிரிவு , உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது .
மருத்துவமனைக்கு 6 பெண் மருத்துவர்கள் , 1 இதய மருத்துவர் , 1 கதிரியக்க நிபுணர் ஆகியோர் பற்றாக்குறையாக இருப்பது ஆய்வில் தெரிய வந்தது .
மேலும் C:Arm என்ற ஒரு முக்கிய கருவி , CT-ஸ்கேன் நிலையத்திற்கு கூடுதல் அலுவர் ஒன்றும் தேவை என்றும் கூறினார்கள் .
அவற்றை குறித்துக் கொண்ட MLA , இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார் .
பிறகு நோயாளிகளிடம் சென்று மருத்துவமனையின் சேவை குறித்து கருத்து கேட்டார் . பிறகு டாய்லெட் பகுதிகளுக்கு சென்று சுத்தமாகவும் , சுகாதாரமாகவும் இருக்கிறதா ? என்றும் பார்வையிட்டார் .
நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் கேட்டறியப்பட்டது .
CT-ஸ்கேன் சென்டர் , டயாலிஸிஸ் பகுதி , ரத்த வங்கி , தீவிர இருதய சிகிச்சைப் பிரிவு , சிசு பிரிவு ஆகியவற்றும் சென்று பார்வையிட்டார் .
சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மருத்துவமனை மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கி தருவதாக வாக்களித்துவிட்டு இரண்டு மணி நேர ஆய்வை முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார் .
இதுவரை இப்படி மக்கள் பிரதிநிதிகள் யாரும் இந்த மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்தது இல்லை என்று அங்குள்ள மருத்துவமனை ஊழியர்கள் பாராட்டினர் .
MLA-வின் இந்த ஆய்வை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து கைகொடுத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது .
– நாகையிலிருந்து மஜக ஊடகப் பிரிவு
நாகை_அரசு_மருத்துவமனை_மேம்படுத்த_நடவடிக்கை‬ ..!
‪#‎தமிமுன்_அன்சாரி_MLA_உறுதி‬

கட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்

 
கட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும் ?
புதிதாக கட்டப்படும் கட்டிடமாக இருந்தாலும் அல்லது ஏற்கனவே
கட்டப்பட்ட கட்டிடங்களோடு சேர்த்து கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டாலும் அதற்கான திட்ட அனுமதி பெறுவது கட்டாயமானதாகும். இந்த அனுமதியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) அல்லது நகர திட்ட இயக்ககம் (டி.டி.சி.பி) அமைப்புகளில் ஏதாவது ஒன்றிடமிருந்து பெற வேண்டும்.
அனுமதி கொடுக்கும் நடைமுறை

Chennai cmda
Chennai cmda

அதாவது லேஅவுட் சி.எம்.டி.ஏ.வால் வரையறுக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இதை அதிகாரிகள் நேரடியாகவே விண்ணப்பித்தவரின் இடத்திற்கு வந்து ஆய்வு செய்வார்கள்.
திட்ட வரைபடமானது விதிமுறைக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே திட்ட அனுமதி வழங்கப்படும். அவ்வாறு இல்லையென்றால் சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அந்த திட்ட வரைபடத்திற்கு அனுமதி அளிக்காது.
எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
சென்னையில் வீடு அல்லது கட்டிடம் கட்டுபவர்கள் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மற்ற நகரங்களில் வசிப்
பவர்கள் டி.டி.சி.பி.யின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.
நில உரிமையாளர் அல்லது குத்தகைதாரர் கட்டிடம் கட்டுவதற்கான
அனுமதியைக் கேட்டு விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த விண்ணப்பமானது வரையறுக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.
மூன்று படிவங்கள்
சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அமைப்பு களிடம் அனுமதி கோரும் விண்ணப்ப படிவங்கள் ஏ, பி, சி என்று மூன்று வகைகளில் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றையும் பற்றி பார்ப்போம்.
படிவம்–ஏ என்பது வீடு கட்டும் மனைப்பிரிவுகளுக்கான விண்ணப்பமாகும். இந்த விண்ணப்பத்தோடு சொத்தின் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட வேண்டும். எனவே சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அமைப்பினால் திட்ட அனுமதி வழங்கப்பட்ட வீட்டு மனைகளை வாங்கினால் எந்த சட்ட சிக்கல்களும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
படிவம் –பி என்பது கட்டிடங்கள் கட்டுவதற்கும் ஏற்கனவே கட்டப்பட்ட
கட்டிடங்களுடன் சேர்த்து புதிய கட்டிடங்களை கட்டுவதற்கும் உரியதாகும். இதற்கு கட்டிடத்தின் திட்ட வரைபடத்தோடு அதைச் சுற்றி அமைந்துள்ள 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.
படிவம்– சி என்பது மிக பெரிய அளவில் அமைய இருக்கிற பலமாடி
கட்டிடங்கள் மற்றும் தொகுப்பு கட்டிடங்களுக்கு உரியதாகும். இந்த சிறப்பு வகை கட்டிடங்களுக்கு சி.எம்.டி.ஏ அமைப்பின் உறுப்பினர் செயலர் அங்கீகாரம் அளிக்கவேண்டியது கட்டாயமானதாகும்.
உறுதிமொழி படிவம்
திட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும்போது உறுதி மொழி படிவத்தையும் கண்டிப்பாக இணைக்க வேண்டும். உறுதிமொழி அளிப்பதற்கான மாதிரி படிவமும் சி.எம்.டி.ஏ அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது. திட்ட அனுமதிக்கு உட்பட்டு கட்டிடம் கட்டுவதாகவும், சி.எம்.டி.ஏ நிர்ணயித்துள்ள அனைத்து கட்டணங்களையும் செலுத்துவதாகவும் உறுதிமொழி அளிக்கும் விதத்தில் அந்த படிவம் அமைந்திருக்கும். மேலும் அனுமதியை மீறி கட்டிடம் கட்டினால் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் கையொப்பம் இட வேண்டும்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள்
வீட்டு மனைகள் பிரிப்பதற்கான படிவம்– ஏ, கட்டிடங்களுக்கான படிவம்– பி, சிறப்பு வகை கட்டிடங்களுக்கான படிவம்– சி ஆகிய மூன்று வகையான விண்ணப்பங்களையும் சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அலுவலகங்களில் கேட்டு பெறலாம். தற்போது இந்த படிவங்களை சி.எம்.டி.ஏ மற்றும் டி.டி.சி.பி.யின் இணைய தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
வீடு கட்டுவதற்கான அனுமதி வேண்டுவதற்கு பெரும்பாலும் படிவம் –பி விண்ணப்பமே பயன்படுத்தப்படுகிறது. இந்த விண்ணப்பத்துடன் உரிமையாளரின் கையெழுத்து, குத்தகைதாரரின் கையெழுத்து, அனுமதி பெற்ற நில அளவையாளர் மற்றும் கட்டிட பொறியாளரின் கையெழுத்துகள், கட்டிடம் கட்டுவதற்கான திட்ட வரைபடம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
சி.எம்.டி.ஏ அனுமதி

தரைத்தளத்துடன் மூன்று மாடி சிறப்பு கட்டிடம், நான்கு அடுக்குக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

Publish Your Free Add
கட்டிடங்கள் கட்டுவதற்கு சி.டி.எம்.ஏ அல்லது டி.டி.சி.பி. அமைப்பிடமிருந்து அனுமதி வாங்குவதோடு அந்த வேலை முடிந்துவிடுவதில்லை. கட்டுமானப் பணியின் ஒவ்வொரு நிலையிலும் விதிமுறைகள் ஒழுங்கான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதையும் கவனித்துக் கொள்ளவேண்டும்  கட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left