Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates
டாக்டர் ஸாகிர் நாயக்கின் தொலைக்காட்சி சானல்கள் முடக்கப்பட்டுள்ள்ளன. அது மட்டுமல்ல யூ டியூப் போன்றவற்றில் உள்ள அவரது உரைப் பதிவுகளையும் விரைவாக நீக்குமாறு இந்திய அரசு கேட்டுக் மொண்டுள்ளது. மகாராஷ்டிர பாஜக அரசு இன்னும் ஒருபடி மேலே போய் அவரது பேச்சுக்களை மட்டுமல்ல எழுத்துக்களையும் ஆராயப் போகிறார்களாம். விஷயம் அத்தோடும் முடிவடையவில்லை. இனி மாவட்ட அளவில் கண்காணிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி எல்லா சானல்களையும் கண்காணிக்கப் போகிறார்களாம். ஆக இனி சிறுபான்மை மதத்தவரின் அடிப்படை மதப் பிரச்சாரங்கள் எதுவும் கேபிள் தொலைகாட்சி உட்பட எதிலும் வெளியிடுவது சாத்தியமில்லாமல் ஆக்கப்படுகிறது.
இனி தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் எல்லாம் சிறுபான்மை மதத்தவரின் மத நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்கித் தர்வதற்குத் தயங்கப் போகின்றன. கருத்து மற்றும் மதச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் இன்னொரு தாக்குதல் இது. இந்த அனைத்திற்கும் பின்னணி என்ன? வங்கதேசத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பங்கேற்ற ஏழுபேர்களில் சிலர் டாக்டர் ஸாகிர் நாயக்கின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டவர்களாக வங்க தேச அரசு கூறியுள்ளதாம். அதைச் சாக்காக வைத்துக் கொண்டு எந்த ஆய்வையும் செய்யும்முன்னரே தடைகளைத் தொடங்கி விட்டனர். டாக்டர் நாயக் உலக அளவில் அறியப்பட்ட ஒரு மதப் பிரச்சாரகர். சென்னையில் ஒரு முறை நான் அவர் பேச்சைக் கேட்டுள்ளேன். நல்ல ஆங்கிலத்தில் அவர் தன் மதத்தின் சிறப்புக்களை விளக்குவதில் வல்லவர். அவருக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு. வெளிப்படையாக மதப் பிரச்சாரம் செய்யும் அவர் தீவிரவாதத்தை ஆதரித்து எங்கும் பேசியதாகத் தெரியவில்லை. இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் அது குறித்து ஒரு அரசு ஆராய்வது என்பதைக் குறை சொல்ல இயலாடு. ஆனால் எந்த ஆய்வுகளையும் தொடங்கும் முன்னரே இப்படியான நடவடிக்களை தொடங்குவதும் அச்சமூட்டும் பிரச்சாரங்களைச் செய்வதும் என்ன நியாயம்? # # # காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் எல்லோராலும் மதிக்கப்படக் ஊடிய ஒரு தலைவர். காவி பயங்கரவாதத்தை அவர் எந்நாளும் விமர்சிக்கத் தயங்கியதில்லை. எனவே அவரை எப்போதும் அவர்கள் குறி வைத்துக் கொண்டே இருப்பார்கள். அவர் எப்போதோ ஒரு முறை டாக்டர் ஸாஹிர் நாயக்குடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்டுள்ளாராம். அதை இன்று பிரச்சினை ஆக்கியுள்ளனர். சுடச் சுட அத்ற்கு பதில் சொல்லியுள்ளார் திக்விஜய். உங்கள் ஸ்ரீ ஸ்ரீ கூடத்தான் ஸாஹிர் நாயக்குடன் ஒரே மேடையில் பேசியுள்ளார். என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதுமட்டுமல்ல மலேகான் முதலான பயங்கரவாதத் தாக்குதலில், இன்றைய வங்கதேசத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை விட அதிகம் பேர் கொல்லப்பட்ட தாக்குதல்களில் பங்கேற்ற சாத்வி ப்ரக்ஞாவை ராஜ்நாத் சிங் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்றும் கேட்டுள்ளார். # # # உரிய ஆய்வுகளுக்கு முன்னரே அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் இந்த முயற்சிகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கவை. – பேராசிரியர் அ.மார்க்ஸ்
உலக நாடுகள் யாரின் பிடியில் இருக்கின்றார்கள் ,முக்கியமாக தமிழர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் உலக மக்களை அச்சுறுத்தும் விஷயம் மூன்றாம் உலக போர் எப்படி யாரால் உருவாகும் போன்ற தகவல் வலைதளத்தில் கிடைத்த ஒரு அருமையான வீடியோ மற்றும் கருத்து ,நீங்கள் இதை உண்மை என்று ஆமோதிக்கின்றீர்களா அப்படி என்றால் உங்களால் முடிந்த வரை ஷேர் செய்யவும் நன்றி
சுவாதி கொலை..வேறு ஒரு பார்வை.. சில வருடங்களுக்கு முன்னால் என் நண்பரின் மாமா ஒருவர் காரில் ஈரோட்டில் இருந்து கோவை வந்து கொண்டு இருந்தார். அவர் கோவையில் ஒரு பவர் full மருத்துவர். அப்போது இரவு ஒரு மணி. வரும் வழியில் ரோட்டில் ஒரு வாலிபர் உடல் இருந்தது. எல்லா வண்டியும் மெதுவாக அந்த உடலை தாண்டி சென்றது. இவர் டாக்டர் என்பதால் உடனே வண்டியை பிரேக் போட்டு நிருத்தி ஓடிச் சென்று அவருக்கு உயிர் இருக்கிறதா என்று பார்த்து இருக்கிறார். உயிர் இல்லை. இப்போதுதான் போய் இருக்கிறது. மண்டையில் அடி. சில மணி நேரமாக ரத்தம் கசிந்துதான் இறந்து உள்ளார். யாருமே உதவவில்லை போலும். இருட்டில் பார்த்த போது மண்டையில் பலத்த அடி. உடம்பு எல்லாம் சிராய்ப்பு. அவரால் என்ன நடந்தது என்று யூகிக்க முடியவில்லை. ரத்தம் கசிவதை தடுத்து இருந்தால் அவர் உயிர் காப்பாற்றபட்டு இருக்கும் என்று மட்டுமே அவரால் யோசிக்க முடிந்தது. துடிதுடித்த டாக்டர் அவர் சடலத்தை நடு ரோட்டில் இருந்து நகர்த்தி சாலையின் ஓரம் வண்டிகள் சடலத்தின் மீது ஏராமல் இருக்கும்படி வைத்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு அருகே உள்ள ஒரு காவல் நிலையத்துக்கு ஓட்டி சென்றார். நடந்தவற்றை கூறி உள்ளார். உடனே duty யில் இருந்த inspector, டாக்டரின் எல்லா தகவல்களையும் வாங்கி வைத்துக் கொண்டு அவர் மனிதாபிமானத்தை பாராட்டிவிட்டு அவருக்கு ஒரு காபி வரவழைத்து குடிக்க வைத்து உள்ளார். டாக்டருக்கு ஆதங்கம். ஸார் அடிபட்டு எப்படியும் ஒரு ரெண்டு மூணு மனி ஆகியிருக்கும். முன்னாடியே யாராவது help செய்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்… சே ..யாருமே நிருத்தவில்லை ஸார் … என்று நொந்து கொண்டார். Inspector அதுக்கு…நீங்க வந்து சொன்னதே ஒரு பெரிய உதவி ஸார் … நன்றினு சொல்லிவிட்டு அவர் spot க்கு கிளம்பிவிட்டார். Wireless அலறும் காவல் நிலையத்தில் கேட்க ஆரம்பித்தது. டாக்டர் கோவை. வரும் வரை அந்த உயிரை காப்பாற்றி இருக்கலாம் எந்த எண்ணம் மனதில் ஓடிக் கொண்டே இருந்து… இந்த சமுதாயம் சீர் கெட்டு விட்டது. ஏன் இப்படி எல்லாரும் வண்டியை நிறுத்தாமல் சென்றார்கள் என்ற கேள்வி அவரை துளைத்து எடுத்தத்து” என்றார் இந்த சம்பவத்தை அவர் என்னிடம் சொன்ன போது நானும் அவரின் நல்ல உள்ளத்தை பாராட்டினேன். விடுங்க சார்…எல்லோரும் உங்களை போல் இருக்க மாடடார்கள். நீங்கள் டாக்டர். ஒரு சமுதாயத்தின் பார்வை உங்களுக்கு வேறு மாதிரி இருக்கிறது. டாக்டர்கள் எப்பவும் கடவுளுக்கு அடுத்து உயர்வானவர்கள். உயிரை காப்பாறும் கடவுள் போன்றவர்கள் என்றேன். உடனே அவர் ” நீங்க வேற ஸார் … நான் part -1 மட்டும் தான் சொன்னேன்”. மீதியை கேளுங்கள் என்றார். Part 2: ஒரு மாதம் கழித்து இவருக்கு ஒரு போன் கால். அதே inspector த்தான் கூப்பிட்டார். ஸார் ஒரு சின்ன formality. நீங்க நாளைக்கு பத்து மணிக்கு வரனும் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். ஒரு மாசம் கழித்து ஏன் போன் என்று ஒரே குழப்பம் டாக்டருக்கு. டாக்டர், தன் எல்லா appointment களையும் cancel செய்துவிட்டு அந்த காவல் நிலையம் மீண்டும் சென்றார். இரவில் பார்த்த காவல் நிலையம் வேறு..பகலில் பார்க்கும் காவல் நிலையம் வேறு. அங்கு அதே இன்ஸ்பெக்டர்…சாருக்கு ஒரு சூடான காபி என்று ஒரு அதட்டு அதட்டினார். காபி டாக்டரின் தொண்டையில் இறங்கும் போது … இன்ஸி …ஒரு குண்டை தூக்கி போட்டார். ஸார், அன்னிக்கி நீங்க பார்த்தது அது கொலை case ஸார். யாரோ மண்டியில் கடபாரையில் அடித்து போட்டு இருப்பாங்க போல. Postmortem சொல்லுது. யாருனு ஒரு மாசமா தேடுறோம் ஆளே கண்டுபிடிக்க முடியல. பைய்யன் பிஹாரி. கூலி தொழில் செய்ய வந்தவன்னு trace செய்துட்டோம். நாங்க யார் கொலையாளினு கண்டுபிடிக்க முடியல. மேல இருந்து ஏகப்பட்ட pressure. கேசை முடிக்கனும். உங்க உதவி தேவை என்றார். டாக்டர் உஷாராகி… ஸார் நான் என் வக்கீலோடு வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி வர பார்த்து உள்ளார். ஸார், பயப்படாதீங்க. நான் சொல்வதை மட்டும் நீங்க சொல்லுங்க..மீதியை நாங்க பாத்துக்குறோம். இதுக்கு உங்க லாயர் எல்லாம் வேண்டாம் என்றார். அப்படியே லாயர் வந்தாலும் இதே procedure தான். உங்களுக்குத்தான் காசு விரயம்…. இன்ஸி …சார் ..சார் tension ஆகாதீங்க. இது கொலை caseன்னு postmortem செய்த டாக்டர் சொன்னாலும்நாங்க FIR report ல் accident னு தான் நாங்க பதிவு செய்து இருக்கோம். ஆளை நேரில் பார்த்த ஒரே சாட்சி நீங்கதான். கோர்ட்டுக்கு வந்து ஒரே வரி சொன்னா போதும். என்னனு சொல்லனும் ஸார்? என்று டாக்டர் கேட்டு உள்ளார். அதுக்கு inspector…..வெரி சிம்பிள் சார். ” வண்டி வரும் போது ரோட்டில் ஒருத்தன் இருட்டில் தள்ளாடிகிட்டே வந்தான். திடீர்னு ஒரு காருக்கு முன்னாடி தள்ளாடி வந்து விழுந்ததை பார்த்தேன். எவ்வளவு அழுத்தி பிரேக் போட்டும் அந்த காரை நிருத்த முடியல. நான் இறங்கி போய் பார்த்தேன் ..ஆள் ஸ்பாட் அவுட். சாராய வாடை …” … அவ்வளவுதான் ஸார். Doctor அதுக்கு…சார் accident ஓக்கே. நான் எந்த வண்டியும் அவரை மோதினதை பார்க்கவில்லையே சார்..நீங்க எந்த வண்டியை சொல்றீங்க ” என்றார். அதுக்கு இன்ஸ்பெக்டர் ” சார், அந்த காரை ஓட்டினது நீங்க தான். அது உங்க கார்தான்…டாக்டரின் கார் நம்பரை inspector ஒப்பித்தார்.”… ஜஸ்ட் இது ஒரு பார்மாலிட்டி. நீங்கதான் சம்பவத்தை பார்த்த ஒரே ஆள். செத்தவனும் பீஹாரி. ஆல்ரெடி பாடியை எரிச்சாச்சு. ஒரு பிரச்சனையும் வராது சார். நான் பாத்துக்குறேன் என்றார். உடனே டாக்டர்..சாரி இன்ஸ்பெக்டர்… இதுக்கு நான் ஒதுக்க மாட்டேன். நீங்க வேற ஆள் பாருங்க நான் வரேன் என்றவரிடம்… சார், நோ பிராப்லம் சார் …இப்போ போங்க …. monday வந்தா போதும். ஏட்டய்யா போன் செய்வாரு என்றவுடன்…மீண்டும் டாக்டர் அடங்கி போனார். டேய் ….டாக்டருக்கு ஒரு பிரியாணி சொல்லு என்று சவுண்டு அந்த காவல் நிலையத்தில் தானே ஒலித்தது. இன்ஸி ..பேச ஆரம்பித்தார். சார் இது ஒரு சிம்பிள் கேஸ். ஜுட்ஜ் எல்லாம் கரெக்ட் செய்தாச்சு. ஒரே கேள்வி கேட்பார். அரசு வக்கீல் அறிவழகன்தான். ஒன்னும் அதிகமா குறுக்கால கேட்கமாட்டார். இதுக்காக நான் ஒரு புது ஆளை கூட்டிட்டு வந்து செட் செய்தால் நல்லா இருக்காது சார். ஒரு டாக்டர் வந்து சாட்சி சொன்னா கேஸ் ஹெவியா இருக்கும்… அதான். நாளைக்கு பிரச்சனை எதுவும் வந்தாலும் ஈஸியா முடிச்சிடலாம். கேஸ் கட்டில் எல்லாம் எழுதியாச்சு. உங்க signature மட்டும் பாக்கி. போட்டுட்டு போயிடுங்க. Hearing வரும் போது வந்தா போதும். வந்து போற செலவு, சாப்பாடு எல்லாம் நாங்க பாத்துக்குறோம். ஏட்டு, சார் கிட்ட ஒரு சைன் வாங்கிக்கிட்டு அனுப்பி வைய்யா என்றார். ஆறு மாதம் இழுத்து இழுத்து எட்டு முறை கோர்ட் சென்று உயிரை காப்பாற்ற போன ஒரு டாக்டர் ஒரு கொலையாளியாய் அந்த case ல் இருந்து கதற கதற வெளியே வந்தார். அன்று முதல் அவர் உச்சா வந்தால் கூட காரை நடு வழியில் நிருத்துவதில்லை. தானே போய் ரோட்டில் எந்த உதவியையும் செய்வதில்லை. டாக்டர் தொழிலிலும் தன் வரம்பை மீறி accident case களை தொடுவதில்லை. ஒரு மனிதன் மிருகமாக மாற ஒரு சமுதாய கட்டமைப்புதான் காரணம். சென்னையில் அந்த பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் மனம் எல்லாம் கல் இல்லை. மனிதாபிமானம் இல்லா மக்களும் இல்லை. தண்ணீரில் மூழ்கியவனை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியவர்கள் தான் சென்னை மக்கள். ஒரு காலத்தில் எல்லோரும் டாக்டரை போல காப்பாற்றி கொண்டுதான் இருந்தார்கள். அவர்களை சிலை ஆகியது இந்த அரசியல்வாதிகள்தான். அரசியல்வாதிகள் சட்டத்தை கையில் எடுத்து இன்று எது கொலை, எது தற்கொலை எது விபத்து என்பதை அவர்களே முடிவு செய்ய பழக்கி விட்டார்கள். இதை வேடிக்கை பார்த்து, பார்த்து மக்களும் பழகிவிட்டார்கள். இவர்கள் கல்லால் செதுக்கப்பட்ட ஒரு சமுதாயம். நின்றவர்கள் நம்மை போன்ற சிலைகள். ஒரு ரயில் நிலயமே இரண்டு மணி நேரம் எதுவும் செய்யாமல் இருக்கிறது என்றால் தப்பு அன்று மட்டும் நடக்கவில்லை. இது பல ஆண்டுகளாக நடந்துகொண்டு கொண்டுதான் இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் எத்தனை எத்தனை டாக்டர்கள். எல்லோரையும் டாக்டருக்கு படிக்க வைத்த பெருமை நம் அரசியவாதிகளுக்கே போய் சேரும். . _____”” வாட்சப் வைரல்
Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates