தி மு க வில் ப ஜ க வை சேர்ந்தவர்களுக்கு பதவி!
திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் சிலர் பதவி அளிக்கபட்டது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது பாஜகவின் விசுவாசியாக அறியபடுபவர் பொறுப்பு வழங்கியிருப்பதை மீளாய்வு/ மறுபரிசீலனை செய்திடல் வேண்டும் அவரை பரிந்துரைந்தவர் யார் எங்கிருந்து அழுத்தம் வந்ததென வெளிப்படையாக விவாதிக்கவேண்டும்
நண்பர் பழநிவேல் தியாகராஜன் மிக சரியாக செயல்படகூடியவர் ஆனால் உள்ளுர் அரசியலைப்பற்றிய ஆழ்ந்த அறிவு அவருக்கில்லை தொழில்நுட்ப அறிவு மட்டுமே,கட்சியை கரை சேர்க்குமென்கிற நிலைபாடு சரியானதல்ல.. எவ்வளவு திறமைகள் இருந்தாலும் சந்தேகத்திற்குரிய நபருக்கு வாய்ப்பு வழங்குவது கட்சிக்கு வளர்ச்சிக்கு நல்லதல்ல
தளபதியின் விமர்சனம்-சமூகநீதியும் சமதர்மமும்
எடப்பாடி அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது ஓட்டை பானையில் சமையல் செய்ய முடியாதென்ற தளபதியின் விமர்சனம் இதைவிட சொல்லிவிட முடியாது ஆந்திர சந்திரபாபு நாயுடு .. எங்களை எடப்பாடி என்று நினைத்தீர்களா என்றபோது உண்மையில் வெட்கபட நேர்ந்தது இந்த அவல ஆட்சி இனியும் தொடர்வது தமிழக மக்கள் மானத்திற்கு விடபடும் சவால் அவமானகரமான ஒரு ஆட்சியை இனியும் வைத்திருக்கவேண்டுமா
அதிமுக எனும் அழுக்கை துடைத்தெறிய வேண்டியது காலத்தின் கட்டாயம்
திருடி என்று நீதிமன்றங்கள் உறுதியிட்டு ஜெயலலிதாவின் படத்தோடு கட்சிகள் தோன்றுவதும் ஜெயலலிதா நினைவகம் அமைப்பதற்கு மக்களி வரிப்பணம் செலவு செய்வதும் கிரிமினலை ஊடகங்கள் உயர்த்தி பிடிப்பதை தடுப்பதற்கும்
மெல்ல மெல்ல படரும் பழமைவாத பாசிசத்தை துடைத்தெறியவும். கொஞ்சம் கொஞ்சமாய் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் பறிக்கபடுவதை தடுப்பதற்கும் (obc உயர்கல்வி இடஒதுக்கீட்டை திரும்ப பெற) தமிழனின் வரலாற்று சுவடுகளை மண்ணுக்குள் புதைக்கும் கொடுஞ்செயலை தடுத்து நிறுத்திடவும் (கீழடி)
சமூகநீதியும் சமதர்மமும் நிலைநாட்டவும் நல்லதொரு விடியலை நோக்கி காத்திருக்கிறார்கள் மக்கள்,
குடும்ப அங்கத்தினர் தலையீடு
இவ்வேளையில் திமுகவிற்குள் புகுத்தப்படும் புல்லுறுவிகளை இனம் கண்டு விரட்டியடிக்கவேண்டும்.. சின்ன விடயம்தானே காலபோக்கில் சரி ஆகிவிடுமென மெத்தனமாய் இருப்போமேயாயின் அது இயக்கத்தை பலவீனபடுத்தும் அதைதான் எம் இனபகைவர்கள் விரும்புகிறார்கள்.. காலத்தின் தேவை கருதி .. எதிலும் எச்சரிக்கை உணர்வோடு செயல்படவேண்டிய தருணம் இது..
உட்கட்சி பகை குடும்ப அங்கத்தினர் தலையீடு கொள்கையறியாதவர்களுக்கு பதவி .. குழிபறித்தல் யாரை எங்கே வைப்பதன்று அறியாமல் வளர்த்துவிடுவது இவையெல்லாம் இயக்கத்திற்கு ஊனத்தை தரும்..
விழிப்புணர்வோடு.. கொள்கை உறுதியாளர்களை அரவணைத்து இடம்தரும் விசமிகளை இனம்கண்டு எச்சரித்து விலக்கிவைத்து முழுவீச்சோடு தளபதியை அரியயணை ஏற்ற உறுதிபூண்டு செயல்படுவோம்..
மாபெரும் இயக்கத்தில் நடக்கும் சிறிய தவறுகளை .. நலம்விரும்பிகளும் நல்மனம் படைத்தோரும் கொள்கையாளர்களும் கவனத்திற்கு கொண்டுவருவது .. சிறந்த ஜனநாயகத்தை வளர்க்க காக்க உதவும்..
சீர்செய்வோம்..
Aalanci Spm
ஆலஞ்சியார்
Search Chennai Property